BREAKING NEWS
Search

விக்ரமைப் போன்ற நடிகர் இந்த உலகத்திலேயே இல்லை! – சூப்பர் ஸ்டார் ரஜினி புகழாரம்

விக்ரமைப் போன்ற நடிகர் இந்த உலகத்திலேயே இல்லை! – சூப்பர் ஸ்டார் ரஜினி புகழாரம்

Shankar's I Audio Launch Stills (34)

ங்கர் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள ஐ திரைப்படம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வரும் நிலையில் இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா இன்று சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.

இவ் விழாவில் சிறப்பு விருந்தினராக ஹாலிவுட் நடிகர் அர்னால்ட் ஷ்வார்ஷநெக்கர் கலந்து கொண்டார்.  சூப்பர்ஸ்டார் ரஜினி மற்றும் கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் ஆகியோரும் இவ்விழாவில் பங்கேற்றனர்.

பாடல்களை வெளியிடும் நேரத்தில் விழாவிலிருந்து அர்னால்ட் வெளியேறிவிட, தலைவர் சூப்பர் ஸ்டார் ரஜினியே பாடல்களை வெளியிட்டு வாழ்த்திப் பேசினார்.

விழாவில் ரஜினி பேசுகையில், “நிச்சயமாக இந்தவிழா ஒரு இசை வெளிட்டு விழாவைப் போல இல்லாமல், ஒரு வெள்ளிவிழா போல நடந்து கொண்டிருக்கிறது. படத்தின் டிரெய்லரைப் பார்க்கும் போது படம் எப்போது ரிலீஸ் ஆகும் என்ற எதிர்ப்பார்ப்பு ஏற்படுகிறது.

ஷங்கர் சினிமாவில் 20 ஆண்டுகளாக பயணம் செய்கிறார். அவரின் முதல் படத்திலிருந்து அவர் இயக்கிய அடுத்தடுத்த படங்களில் மேலே மேலே தான் சென்றுகொண்டிருக்கிறார். இந்த ஐ படம், அவர் இதுவரை இயக்கிய படங்களில் உச்சகட்டமாக அமைந்திருக்கிறது. இதற்கு மேல் அடுத்த படியாக அவர் என்ன செய்யப் போகிறார் என்று தெரியவில்லை. இன்னும் அவரிடம் நிறைய இருக்கிறது. அவர் விரைவில் இந்தப் படத்தை வெளியிடக் கேட்டுக்கொள்கிறேன்.

Shankar's I Audio Launch Stills (26)

ஹாலிவுட்டில் பல விஷயங்கள் செய்கிறார்கள், நம்மிடம் திறமைசாலிகள் இல்லையா? ஏன் நாம் தமிழ் சினிமாவில் அதை செய்யக்கூடாது என்று நினைத்து, பல முயற்சிகளைச் செய்கிறார். தமிழ் சினிமாவை, இந்திய சினிமாவை ஹாலிவுட் உயரத்திற்குக் கொண்டு சென்றுள்ளார் ஷங்கர். பணம், நேரம் இதை எல்லாம் பார்க்காமல் உழைக்கும் உண்மையான சினிமா இந்தியன் அவர்தான்.

அவருக்கு பக்கபலமாக நம் ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் இருக்கிறார். ரஹ்மான் அவர் தாயாரிடம் சென்று,‘எந்த ட்யூன் போட்டாலும் ஷங்கர் வேண்டாம் என்கிறார்’ என்று சொல்லி அழுததாக நான் கேள்விப்பட்டேன். அந்த அளவுக்கு ஷங்கர் அவரிடம் வேலை வாங்குவார் என்று எனக்குத் தெரியும்.

Shankar's I Audio Launch Stills (35)
இந்த படத்தின் நாயகன் சீயான் விக்ரம். ‘ஓ போடு’ சீயான், இனி ‘ஐ’ சீயான் என அழைக்கப்படுவார். தன் உடலை வருத்திக் கொள்ளும் ஒரு நடிகர் அவர். விக்ரமைப் போல கதைக்காக தன்னையே தியாகம் செய்யும் நடிகர், தமிழில் இல்லை, இந்தியாவில் இல்லை, ஹாலிவுட்டில் இல்லை, ஏன் இந்த உலகத்திலேயே இல்லை. ஒரு சீனியர் நடிகன் என்ற முறையில் விக்ரமை என் இதயத்தில் இருந்து பாராட்டுகிறேன்.

‘ஷங்கர் – விக்ரம்’ இந்த காம்பினேஷன் தொடர்ந்து பல படங்களைக் கொடுக்க வேண்டும் என்று வாழ்த்துகிறேன்,” என்றார்.

-என்வழி
11 thoughts on “விக்ரமைப் போன்ற நடிகர் இந்த உலகத்திலேயே இல்லை! – சூப்பர் ஸ்டார் ரஜினி புகழாரம்

 1. s venkatesan, nigeria

  தன்னை முன்னிறுத்தாமல் மனசார வாழ்த்தும் நெஞ்சம் திரை உலகில் இவர் மட்டுமே.

 2. மிஸ்டர் பாவலன்

  //விக்ரமைப் போல கதைக்காக தன்னையே தியாகம் செய்யும் நடிகர், தமிழில் இல்லை, இந்தியாவில் இல்லை, ஹாலிவுட்டில் இல்லை, ஏன் இந்த உலகத்திலேயே இல்லை. // (ரஜினிகாந்த்)

  உலகநாயகன் கமல் ஹாசனை ரஜினிகாந்த் மறந்து விட்டது வருந்தத்
  தக்கது. வேறு எதுவும் சொல்வதற்கில்லை.

  -== மிஸ்டர் பாவலன் ==-

 3. kumaran

  தலைவர் சொன்னால் சரியாக இருக்கும் , இனி விகரமின் நடிப்பு தமிழில் கோடி கட்டி பறக்கும்

 4. gopi

  மிஸ்டர் பாவலன் அவர்களே கமலை பத்தி தலைவருக்கு தெரியாதது இல்லை. இங்கே தலைவர் குறிப்பிடுவது விக்ரம் உடல் மெலிந்து (50கிலோக்கும் கீழ்) தன்னை வருத்தியது. இன்றைய சூழ்நிலையில் கமல் அந்த அளவுக்கு தன்னை வருத்திக்க முடியாது (வயது காரணமாக இருக்கலாம்.) மத்தபடி நடிப்பை பத்தி பேசியிருந்தால் தலைவர் கண்டிப்பாக தன் நண்பனை விட்டு கொடுத்திருக்க மாட்டார்

 5. rahul

  @Mister pavalan: oho… maranthutarnu epadi solreenga? Dhasavatharm isai veliyeetu vizha la kamal sir rajni ya koopdava marantha mathiriya? ( maranthara illa purakanitharanu ungaluke
  therium)

 6. s venkatesan, nigeria

  //நடிப்பை பத்தி பேசியிருந்தால் தலைவர் கண்டிப்பாக தன் நண்பனை விட்டு கொடுத்திருக்க மாட்டார்// – இது உண்மைதான் என்றாலும் எந்திரன் படம் பார்த்து எந்த கருத்தும் சொல்லாமல் போனவர்தானே உலக நாயகன்.
  தேவை என்றால் தன்னை தலைவருக்கு போட்டியாளர் என்று அறிவித்து தன் மார்க்கெட் நிலவரம் கிழே விழாமல் பார்த்து கொள்வார். தன் முன்னால் அரசியல் காரணத்துக்கு தலைவரை தாக்கி பேசும் போது என்றாவது கண்டிச்சி இருக்காரா? ராதா ரவி அளவுக்கு கூட கண்டிச்சி பேச வில்லையே. தலைவர் தனியே உண்ணாவிரதம் இருந்த போது கூடிய கூட்டத்தை பார்த்து இது அரசியல் போல தெரிகிறது என்று வயிறு எரிந்தார்.

 7. Aryan

  கமல் என்னைக்குமே ரஜினிய பத்தி பெருமையா பேசுறது கெடையாது, தலைவர் தான் எப்பவுமே கமல் கமல்னு பாசமா பேசிகிட்டு இருப்பாரு, கமல் ஒரு வயிதெரிச்சல்காரர்னு ஊருக்கே தெரியும் தானே.., தெலுங்குல இருந்து தன்னோட சக போட்டியாளர் சங்கர ராஜமௌலி மனம்திறந்து பாராட்டும் போது, ஒரு தமிழனோட அற்புத படைப்ப, ஒரு அருமையான இந்திய படைப்ப, தொழிநுட்பத்த பத்தி எல்லாம் தெரியும்னு சொல்லிக்கிற கமல் இதுவரைக்கும் வாய் திறந்து ஒரு வார்த்தை கூட சொல்ல இல்லையே ? அத்தனைக்கும் ஷங்கர் தன்கூட வேலை செய்தவர். அடிக்குறது புல்லா ஹாலிவுட் காபி இதுல பாராட்டு வேற பத்தாதாம் 🙂

 8. குமரன்

  ///உலகநாயகன் கமல் ஹாசனை ரஜினிகாந்த் மறந்து விட்டது வருந்தத்
  தக்கது. வேறு எதுவும் சொல்வதற்கில்லை. ///

  வணக்கம் மிஸ்டர் பாவலன் அவர்களே!

  அது எப்படி தலைவர் உலக நாயகன் கமலை மறந்து விட்டார் என்று சொல்கிறீர்கள்?

  தலைவர் அவரை நிச்சயம் மறக்க மாட்டார்.

  இப்போது கூட அவரையும் நினைவில் வைத்தே இதைச் சொல்லியிருக்கிறார்!!!

 9. குமரன்

  தலைவர் ரஜினியின் மிகச் சிறந்த குணங்களில் இதுவும் ஒன்று. தன்னைவிடவும் பிறரை உயர்த்தி வாழ்த்தும் மனிதம் நிறைந்தவர்.

 10. naarathar

  மிஸ்டர் பாவலன் அவர்களே !
  நான் பார்த்தவரையில் திரு உலக நாயகன் அவர்கள் உலகளாவிய நடிப்பைதான் (ஓவர் act ) வெளிப்படுத்துகிறார் போங்கள்…

  கொஞ்சம் கிணற்றை விட்டு வெளியில் வாருங்கள்….ப்ளீஸ் ??????

  நாராயணா ! நாராயணா !!

 11. naarathar

  உலகநாயகன் கமல் ஹாசனை ரஜினிகாந்த் மறந்து விட்டது வருந்தத் தக்கது. வேறு எதுவும் சொல்வதற்கில்லை. -== மிஸ்டர் பாவலன் ==-

  நடிகர்கள் அனைவரும் உடல் வருத்தி நன்றாக நடிப்பவர்கள்தான் ., ஆனால் அவர்களை பிற நடிகர்கள் அதுவும் உச்சத்தில் உள்ள ஒரு நடிகர் சக நடிகரை பாராட்டுவது மட்டுமல்லாமல் தன்னை விட உயர்வாக பேசுவது என்பது எந்த நடிகராலும் இயலாத செயலாகும் .அந்த வகையில் நம் சூப்பர் ஸ்டார் க்கு இணை சூப்பர் ஸ்டார் ஒருவரே ஆவார்.இதை புரிந்துகொள்ளாதவர்கள் என்றும் கிணற்று தவளைகளே ஆவார்….

  நாராயணா ! நாராயணா !!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *