BREAKING NEWS
Search

சூப்பர் ஸ்டார் ரஜினியின் சிறப்புப் பேட்டி.. ஜெயா டிவி ஒளிபரப்புகிறது!

ஜெயா டிவிக்காக சூப்பர் ஸ்டார் ரஜினியை பேட்டி எடுத்த நடிகர் விவேக்!

rajini-vivek

சென்னை: கோச்சடையான் படத்துக்காக ஜெயா தொலைக்காட்சிக்கு சிறப்புப் பேட்டி அளித்துள்ளார் சூப்பர் ஸ்டார் ரஜினி. இதில் அவரை நேர்காணல் செய்திருப்பவர் நடிகர் விவேக்.

பொதுவாக எந்த பத்திரிகை, தொலைக்காட்சிக்கும் பேட்டிகள் தருவதில்லை ரஜினி. காரணம் அடிக்கடி பொது நிகழ்ச்சிகளில் தோன்றி தன் கருத்தை அவர் சொல்லிவிடுகிறார். இன்னொன்று ஒரு பத்திரிகைக்கு கொடுத்து, மற்ற பத்திரிகைக்கு கொடுக்காமல் விட்டால் தேவையற்ற விமர்சனம் கிளம்பும் என்பதும்தான்.

எந்திரன் வெளியான சமயத்தில் சன் டிவிக்கு ஒரு பேட்டி அளித்திருந்தார் ரஜினி. அதில் படம் தொடர்பான கேள்விகள் மட்டுமின்றி, வேறு பல விஷயங்கள் பற்றியும் பேசியிருந்தார்.

எந்திரனுக்குப் பிறகு இப்போது கோச்சடையான் வெளியாகிறது. ஆனால் அந்தப் படம் போல நேரடி ரஜினி படமாக இல்லாமல், அவரது உடல் அசைவுகளைப் படமாக்கி, அதை மோஷன் கேப்சரிங் தொழில்நுட்பத்தின் மூலம் அனிமேட் செய்யப்பட்ட ரஜினி உருவத்தில் இணைத்துள்ளனர்.

இந்தியாவில் இப்படியொரு தொழில்நுட்பத்தில் முழுப் படமும் வந்ததில்லை. அதுவும் 3 டியில்.

ஆனால் இந்தப் படத்தைப் பார்க்க ரசிகர்களைத் தயார்ப்படுத்துவது அவசியமாகிறது. இது ரஜினி படம்.. ஆனால் ரஜினியின் லைவ் ஆக்ஷன் படமில்லை என்பதை அவர்களின் மனதிலேற்ற வேண்டும் என்பதில் ரஜினி உறுதியாக உள்ளார்.

எனவே பட ரிலீசுக்கு முன் அந்த கோணத்தில் படத்தின் புரமோஷனல் வேலைகளைச் செய்து வருகின்றனர்.

ஏற்கேனவே கோச்சடையான் பட இசை வெளியீட்டு விழாவில் பேசிய இயக்குநர் ஷங்கர், நடிகர் சரத்குமார், இயக்குநர் கே எஸ் ரவிக்குமார் போன்றவர்கள், “இது முழுக்க முழுக்க ஒரு ரஜினி படம். ஆனால் ரஜினி சாரின் உடல் அசைவுகள், குரலில், அவரது மோஷன் கேப்சரிங் உருவத்தில் வரும் படம். அந்த மனநிலையோடு வந்தால் படத்தை அனுபவித்து ரசிக்கலாம்,” என்று கூறியிருந்தனர்.

அடுத்து இப்போது ரஜினியின் சிறப்புப் பேட்டியை ஒளிபரப்பத் திட்டமிட்டுள்ளனர். இந்தப் பேட்டி, கோச்சடையான் தொலைக்காட்சி உரிமையை வாங்கியுள்ள ஜெயா டிவியில் ஒளிபரப்பாக உள்ளது.

விவேக்

இந்தப் பேட்டியை எடுத்திருப்பவர் நடிகர் விவேக். விரைவில் அல்லது ஏப்ரல் 14-ம் தேதி ஜெயா டிவில் இந்த சிறப்புப் பேட்டியைக் காணலாம்.

-என்வழி




2 thoughts on “சூப்பர் ஸ்டார் ரஜினியின் சிறப்புப் பேட்டி.. ஜெயா டிவி ஒளிபரப்புகிறது!

  1. மிஸ்டர் பாவலன்

    ரஜினிகாந்த் அவர்கள் நடிப்பில் மட்டும் இல்லை, அரசியலிலும் சூப்பர் ஸ்டார்.
    ஜெயா டி.வி.-யில் அவர் பேட்டி வெளியாவதில் சூப்பர் ஸ்டார் தான் ஒரு அரசியல்
    சாணக்கியன் என காட்டி விட்டார்!

    -== மிஸ்டர் பாவலன் ==-

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *