BREAKING NEWS
Search

சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு முதலிடம்… தனுஷ் அடுத்த இடத்தில்!

சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு முதலிடம்… தனுஷ் அடுத்த இடத்தில்!

Rajinikanth & Dhanush snapped at Airport

Rajinikanth & Dhanush snapped at Airport

Rajinikanth & Dhanush snapped at Airport

Rajinikanth & Dhanush snapped at Airport

மூக வலைத் தளங்கள் அதிகரித்த பிறகு, இன்னார் இதில் முதலிடம், இவருக்கு அடுத்த இடம், இவருக்கு கடைசி இடம் என லிஸ்ட் போடுவது அதிகரித்து வருகிறது.

இப்போது அந்த சமூக வலைத் தளத்தில் ஒன்றான ட்விட்டரில் ஃபாலோயர்கள் எனப்படும் பின்தொடர்வோர் எண்ணிக்கை அடிப்படையில் யாருக்கு முதலிடம் என்ற புது லிஸ்ட் வெளியாகியுள்ளது.

முதலிடத்தில் ரஜினி

இந்தப் பட்டியலில் முதலிடத்தில் இருப்பவர்… வேறு யார்.. நம்ம தலைவர் ரஜினிகாந்த் தான்.  வெறும் 20 ட்விட்டுகள் மட்டுமே வெளியிட்டுள்ள அவரை 2.26 மில்லியன் பேர், அதாவது 22 லட்சத்துக்கும் அதிகமானோர் பேர் பின் தொடர்கிறார்கள்.

இவருக்கு அடுத்த இடத்தில் இருப்பவர் அவரது மருமகன் தனுஷ். அவரை இருபது லட்சம் பேர் தொடர்கிறார்கள்.

மூன்றாவது இடம் சித்தார்த்துக்குக் கிடைத்துள்ளது. பதினேழு லட்சம் பேர் அவரைப் பின் தொடர்கின்றனர்.

மளமளவென்று முன்னணி நாயகன் இடத்தை அடைந்துள்ள சிவகார்த்திகேயனை 12 லட்சம் பேர் பின்தொடர்கிறார்கள். அவர் நான்காவது இடத்தில் உள்ளார். பத்துலட்சம் பேருடன் மாதவன் 5வது இடத்தில் உள்ளார்.

இந்தப் பட்டியலில், 8.84 லட்சம் பேருடன் சிம்பு ஆறாவது இடத்திலும், 7.62 லட்சம் பாலோயர்களுடன் ஜெயம் ரவி ஏழாவது இடத்திலும், 6.43 லட்சம் பேருடன் ஜீவா எட்டாவது இடத்திலும், 4.04 லட்சம் பேருடன் சூர்யா 9 வது இடத்திலும் உள்ளார்.

விஜய்க்கு பத்தாவது இடம்தான் கிடைத்துள்ளது. அவரது #actorvijay 3.29 லட்சம் பேர் பின் தொடர்கிறார்கள். அவரது ரசிகர்கள் நடத்தும் இன்னொரு ட்விட்டர் பக்கத்தை 2.84 லட்சம் பேர் (Actor_Vijay) பின் தொடர்கிறார்கள். ஆனால் முதலில் குறிப்பிட்ட பக்கம்தான் அதிகாரப்பூர்வ பக்கம் என்பதால் அதை மட்டும் கணக்கில் எடுத்துக் கொண்டுள்ளனர். இந்த லிஸ்டில் பத்தாவது இடம் விஜய்க்கு.

இந்தப் பட்டியலில் கமலுக்கும் அஜீத்துக்கும் இடமில்லை. காரணம் அவர்கள் ட்விட்டரில் இல்லை!

-என்வழி




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *