BREAKING NEWS
Search

ரஜினி அரசியல்…. இது மக்களுக்கான அரசியல்! #RajiniForThePeople

  இது மக்களுக்கான அரசியல்!

26167085_1978878635470653_7821451218551683222_n
ன்று நேற்றல்ல… சில ஆண்டுகளுக்கு முன்பிருந்தே, பல முறை சொல்லியிருக்கிறேன், ‘என்னை வாழ வைத்த இந்த மக்களை கைவிட மாட்டேன்… இவர்கள் பெருமைப்படும்படியாக ஏதாவது செய்வேன்… அவர்கள் வாழ்க்கை சிறக்க வழி பண்ணுவேன்,’ என ரஜினிகாந்த் அடிக்கடி சொல்லி வருகிறார் என்று. ஆனால் அதை ஒரு பத்திரிகையாளனின் வழக்கமான கணிப்பு என்றுதான் எடுத்துக் கொண்டார்கள், பல ரஜினி ரசிகர்கள். அதிபுத்திசாலி ரசிகர்கள் சிலர் ஏதோ நாம் கதை புனைவதாக கமெண்ட் அடித்ததெல்லாம் தெரியும். இன்னும் ஒருபடி மேலே போய், ரஜினிக்கே புத்திமதி சொன்ன மேதாவிகள் இவர்கள். போகட்டும். தலைவரின் அதிரடி அரசியல் அறிவிப்பு இந்த ‘உள்நோய்க் கிருமிகளை’ ஒழித்துவிடும் என நம்புவோம்.

22 ஆண்டுகள் ரஜினியின் அரசியல் நகர்வுகள், முடிவுகள், அவை ஏற்படுத்திய தாக்கங்களை அருகிலிருந்து கவனித்து வருகிறோம். அருகிலிருந்து என்றால், அவருடனே இருந்து என அர்த்தமல்ல, ஒரு பத்திரிகையாளனாக அவரது நகர்வுகள் எதையும் தவறவிட்டதில்லை.

யாருக்கும் பயந்து அல்லது தயங்கி தன் அரசியல் முடிவுகளை அவர் கைவிட்டதோ தள்ளிப் போட்டதோ இல்லை. சரியான தருணம் வரட்டும் என்பதற்காகவே காத்திருந்தார். தனக்கு நெருங்கிய வட்டத்திலிருப்பவர்களிடம் அவர் ஆலோசனைக் கேட்கும்போதெல்லாம், ஆலோசனை சொல்பவர்கள் ஒரு கட்டத்தில் உணர்ச்சிவசப்பட்டு ‘ரஜினி அரசியலுக்கு வருவார்’ என ஆரூடம் சொல்லிவிடுவார்கள். ஆனால் ரஜினியோ ‘எல்லாம் அந்த ஆண்டவன் கையில் என்று கூறிப் போய்விடுவார்.

ஜெயலலிதா உயிரோடு இல்லாத நேரம், கருணாநிதி செயலிழந்து நிற்கும் சூழலில்தான் ரஜினி அரசியலுக்கு வருகிறார் என்று ஒரு பார்வை உள்ளது. சரியான தலைமை இல்லாத போதுதானே மாற்றுத் தலைமை வரும்? அப்படியெனில் இதுவரை அவர்கள் இருவரது தலைமையும் சரியாகத்தான் இருந்ததா? இல்லை என்பது 2011-ல் ரஜினிக்குப் புரிந்தது. அதனால்தான் வாக்குப்பதிவு நாளன்று, அதிமுகவை மறைமுகமாக ஆதரித்தார். ஆட்சி மாற்றம் நிகழ்ந்ததும், பின்னர் ரஜினிக்கு உடல் நலமில்லாமல் போனதும் தெரிந்ததே. அவர் மனதாலும் உடலாலும் நன்கு தேறி, அரசியலுக்குத் தலைமை ஏற்கத் தயாரான நேரம்தான் ஜெயலலிதா நோயில் விழுந்து, மரணத்தைத் தழுவியது. இரண்டு தலைமைகளும் இல்லாத வெற்றிடம். இருக்கும் யாரும் சாரியானவர்களாக, இந்த மக்களுக்கு நல்லது செய்பவர்களாக இல்லை. அதை பல விதங்களிலும் அலசி, ஆலோசித்து தனது தலைமையில் புதிய அரசியலை அறிவித்துள்ளார் ரஜினிகாந்த்.

எப்படிப் பார்த்தாலும் அரசியலில் இதைவிடப் பொருத்தமான சூழல் ரஜினிக்குக் கிடைத்திருக்காது. இப்போது அவரது அரசியல் முடிவை சிலர் கிண்டலடிக்கலாம், விமர்சிக்கலாம் அல்லது எதிர்க்கலாம். அப்படி மாற்றுக் கருத்துக் கொண்டிருப்பவர்கள் மிகச் சிறுபான்மையினர், மக்களால் நிராகரிக்கப்பட்டவர்கள். செல்லாக்காசுகளை விட சிறுமையானவரகள். இந்த எதிர்ப்புகளும் கிண்டல்களும் மக்கள் வெள்ளத்தில் குப்பைகளாக ஒதுக்கித் தள்ளப்பட்டுவிடும். காரணம் ரஜினியின் அரசியலுக்குப் பின் சுயநலமோ, தனிமனித லாப நோக்கமோ, குடும்ப ஆதாயத்துக்கான முயற்சிகளோ இல்லை. முழுக்க முழுக்க மக்கள் நல்வாழ்க்கைக்காக ரஜினி எடுத்துள்ள ஒரு முயற்சி. பெருந்தலைவர் காமராஜருக்குப் பின், இப்படி ஒரு நோக்கத்துடன் அரசியலுக்கு எந்தத் தலைவரும் வந்ததில்லை. அந்த நோக்கமே அவரை இந்த மண்ணின் அதிகார மையமாக்கும். ஆட்சியில் அமர வைக்கும்!

-டாக்டர் எஸ் ஷங்கர்
2 thoughts on “ரஜினி அரசியல்…. இது மக்களுக்கான அரசியல்! #RajiniForThePeople

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *