BREAKING NEWS
Search

தமிழ் தொலைக்காட்சிகளையும் வாழ வைக்கும் ரஜினி படங்கள்!

தமிழ் தொலைக்காட்சிகளையும் வாழ வைக்கும் ரஜினி படங்கள்!

thalapathy-1

மிழ் தொலைக்காட்சிகளில் நாளொன்றுக்கு குறைந்தது நூறு படங்களாவது ஒளிபரப்பாகின்றன. ஆனால் ஒரு ரஜினி படம்தான் அந்த நாளை மட்டுமல்ல, தொலைக்காட்சியின் டிஆர்பியையும் தீர்மானிக்கிறது.

வாரம் ஒரு முறை பாட்ஷாவோ அண்ணாமலையோ ஆறிலிருந்து அறுபது வரையோ எங்கோயோ கேட்ட குரலோ முரட்டுக் காளையோதான் சேனல்களுக்கு முட்டுக் கொடுக்கின்றன.

முதல் முதலில் பாட்ஷாவை தொலைக்காட்சியில் ஒளிபரப்பியபோது தமிழகத்தில் மட்டும் பந்த் நடக்கிறதா என்று கேட்டன வட இந்திய மீடியாக்கள். 3.30 மணி நேரம் பல கடைகள் கூட அடைக்கப்பட்டிருந்தன.

Padaiyappa14

சந்திரமுகி, சிவாஜி, எந்திரன் ஒளிபரப்பான போது அந்த தொலைக்காட்சி சேனல்களின் டிஆர்பி பல மடங்கு எகிறின.

சில தினங்களுக்கு முன் படையப்பா ஒளிபரப்பானது. அந்தப் படம் வெளியானபோது பிறந்துகூட இருக்காத பல சிறுவர்கள், மாணவர்கள் இந்தப் படத்தை ஒன்றிப் போய் பார்த்துக் கொண்டிருந்தனர். அந்த நான்கு மணிநேரமும் குழந்தைகள் விரும்பும் டோரிமான், டாம் அண்ட் ஜெர்ரி சேனல்கள் பக்கம் ரிமோட்கள் திரும்பவில்லை. நூறு முறை அந்தப் படத்தைப் பார்த்தவர்கள் கூட, திரும்ப ரசித்துக் கொண்டிருந்தார்கள்.

-superstars-thalapathi-goes-to-bollywood

சமூக வலைத்தளங்களில் படையப்பனின் ஆட்சிதான்.

இன்று தளபதி. இது ஒன்றும் முதல் ஒளிபரப்பல்ல. ஆனால் இந்தப் படத்துக்காக இந்த நள்ளிரவிலும் விழித்துக் கொண்டிருக்கிறது உலகம்!

அதான் ரஜினி… அவரது நடிப்பும், ராஜாவின் இசையும்… விருதுகள் அனைத்தையும் வென்றவை!

தமிழ் சினிமா மட்டுமல்ல, தொலைக்காட்சியையும் ரொம்ப காலமாக வாழவைத்துக் கொண்டிருக்கிறார் ரஜினி!

-என்வழி ஸ்பெஷல்




2 thoughts on “தமிழ் தொலைக்காட்சிகளையும் வாழ வைக்கும் ரஜினி படங்கள்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *