முதல் பக்கம்    வணக்கம்!    ரசிகர் பக்கம்   தேர்தல்    புனைவுகள்    வணிகம்    நட்புடன்    சும்மா தமாசு    வீடியோ    இன்றைய கார்ட்டூன்    கேள்வி பதில்
  உலகம் சுத்தலாம் வாங்க!    நினைவுகளை மீட்டும் இசை!    இது எப்படி இருக்கு...!    அசத்தல் படங்கள்    ஃபிளாஷ்பேக்    எனது பக்கங்கள்    ஸ்போர்ட்ஸ்

ரஜினி படம் பார்க்கும்போதெல்லாம் புதிய அதிர்வு.. நல்ல வாய்ப்பு கிடைக்கிறது! – ஜப்பான் ரசிகர்

Friday, February 24, 2012 at 11:12 am | 1,192 views

ரஜினி படம் பார்க்கும்போதெல்லாம் புதிய அதிர்வு.. நல்ல வாய்ப்பு கிடைக்கிறது! – ஜப்பான் ரசிகர்


சூப்பர் ஸ்டார் ரஜினி படத்தை ஒவ்வொரு முறை பார்க்கும்போதும் எனக்குள் அதிர்வுகளை உணர்கிறேன். படம் பார்த்த அடுத்த நாள் அல்லது அடுத்த வாரத்தில் எனக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கின்றன, என்கிறார் ரஜினியின் தீவிர ஜப்பான் ரசிகர் ஒருவர்.

நோரிகோ இனாககி… இவர்தான் டோக்கியோ ரஜினி ரசிகர் மன்றத்தின் முதல் உறுப்பினர்!

ரஜினி படங்கள் குறித்த தனது அனுபவத்தை அவர் இப்படி எழுதியுள்ளார்:

“1998-ம் ஆண்டுதான் முதல் முறையாக நான் டோக்கியோவில் ரஜினி படம் பார்த்தேன். அந்தப் படம்தான் முத்து. அந்த நேரத்தில் கார்ப்பரேட் உலகில் நடந்த வீழ்ச்சி காரணமாக நான் பெரிதும் பாதிக்கப்பட்டு, வேலை இழந்து, ஒன்றரை ஆண்டுகள் தனிமையில் இருந்தேன். அப்போதுதான் இந்தப் படம் வெளியாவதை அறிந்தேன். படம் பார்த்து முடித்ததும் என் மனநிலையில் புதிய மாறுதல்களை உணர்ந்தேன். மீண்டும் அதே படத்தை அடுத்த நாள் பார்த்தேன். சில தினங்களிலேயே எனக்கு நல்ல வேலையும் கிடைத்தது.

அதன் பிறகு ஒவ்வொரு முறை ரஜினி படம் பார்க்கும்போதும் என் மனதுக்குள் ஒரு பாஸிடிவ் அதிர்வுகளை உணர்ந்தேன். அந்த வகையில் எனக்கு அவர் (ரஜினி) குரு. பாபா வெளியான போது சென்னைக்கே போனேன். சந்திரமுகி பார்க்க சிங்கப்பூர், சிவாஜி பார்க்க கோலாலம்பூர், குசேலனுக்கு ஜோகூர் பார் (மலேசியா) போயிருக்கிறேன். ஒவ்வொரு முறையும் எனக்கு புதிய அனுபவங்கள். அதுமட்டுமல்ல, என் நிஜ குருவை நேரில் சந்திக்கவும் பல வாய்ப்புகள் கிட்டின.


ஆனால் இப்போதெல்லாம் அவரது புதிய படங்கள் ஜப்பானில் வெளியாவதில்லை. எனவே ஆயிரக்கணக்கான ரஜினி ரசிகர்கள் வெளிநாடுகளில் கிடைக்கும் அவரது டிவிடிகளை வாங்கி வந்து பார்த்தோம். ஆனால் அவற்றில் ஜப்பானிய சப் டைட்டில் இல்லாததால் பெரிய ஏமாற்றமாகிவிட்டது. ரஜினியின் படங்கள் உலகெங்கும் ரிலீஸ் எனும்போது, அந்தப் படம் ஜப்பானிலும் பெரிய அளவில் ரிலீசாகும் என எதிர்ப்பார்ப்போம். ஆனால் ரிலீஸாவதில்லை. ஜப்பான் இந்த உலகிலேயே இல்லையோ என்ற விரக்திதான் ஏற்படுகிறது…”, என்கிறார்.

அதானே… ஏன் சந்திரமுகிக்குப் பிறகு ஜப்பானில் தலைவர் படங்கள் ரிலீசாகவில்லை?

கேட்டு எழுதுவோம்ல!

-என்வழி ஸ்பெஷல்

Related Posts with Thumbnails
© The content is copyrighted to Envazhi and may not be reproduced on other websites.

Comments

5 Responses to “ரஜினி படம் பார்க்கும்போதெல்லாம் புதிய அதிர்வு.. நல்ல வாய்ப்பு கிடைக்கிறது! – ஜப்பான் ரசிகர்”
  1. lings says:

    people on purpose trying to malign thalaivar’s name by writing these articles..behindwoods sucks
    ********************************************
    _________________

    200 pc false story!
    -Envazhi

  2. kabilan says:

    அது என்ன கதை வினோ அண்ணா ?

  3. Deen_uk says:

    Mr.Lings..
    Neva Eva believe behindwoods alias kabsawoods alias fakenewswoods..just avoid that site if u need real news..they r big supporters for ”kuruvi”..and also they r against our thalaivar..

  4. Srinivas says:

    I saw chandramugi at Tokyo. In theater only three people were indian including myself. Full theater filled with Japanese, even i could not believe how much they are enjoying when he appears first. Basically japanese are very calm in public. But his appearance changed lot.

  5. sam says:

    சூப்பர் ஸ்டார் ஆட்சி

Speak Your Mind

  Type in Tamil (Press Ctrl+g to toggle between English and Tamil)