BREAKING NEWS
Search

கோச்சடையான் வெற்றி பெற இமயமலை பாபா குகைக்குப் பயணம் செய்த ரஜினி ரசிகர்கள்!

கோச்சடையான் வெற்றி பெற இமயமலை பாபா குகைக்குப் பயணம் செய்த ரஜினி ரசிகர்கள்!

1549522_431000407043709_7297138859049746442_n

லகிலேயே சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு மட்டும்தான் இப்படியெல்லாம் ரசிகர்கள் இருப்பார்கள்…

முன்பு அவருக்காக மண் சோறு சாப்பிட்டவர்கள்… வெறும் காலில் பல கிலோமீட்டர்கள் பாதயாத்திரை போனவர்கள், முழங்காலில் மலைக் கோயில் படியேறியவர்கள்… இப்போது இமயமலையில் உள்ள பாபாவின் குகைக்குப் போய் பிரார்த்தனை செய்துள்ளனர்.

ரஜினி நீண்ட ஆயுளுடன் வாழ வேண்டியும், இந்தியாவின் முதல் அதிநவீன தொழில்நுட்பப் படமான கோச்சடையான் பெரும் வெற்றி அடைய வேண்டியும் இந்தப் பயணத்தை  ‘தலைவர் ரஜினியின் முரட்டு பக்தர்கள்’ என்ற பேஸ்புக் குழுவைச் சேர்ந்த 8 பேர் மேற்கொண்டுள்ளனர்.

மதுரை துவரிமான் எஸ் காமாட்சி, மீஞ்சூர் எம் ரஜினி வெங்கட், எஸ் நிர்மல் (திருவள்ளூர்), வள்ளியூர் பி ராஜா, ஜி கார்த்திகேயன் (திருநெல்வேலி), கக்கம்பட்டி பிரபு (சேலம்), திருப்பூர் ரஞ்சித் பாபா, பொள்ளாச்சி ஆர் வி ராஜ்குமார் ஆகியோர் இந்தப் பயணத்தில் பங்கேற்றனர்.

10151265_618694834873261_5314387149874593379_n

கடந்த மே 19-ம் தேதி சென்னையிலிருந்து புறப்பட்ட இவர்கள், மூன்று நாட்கள் பயணம் செய்து இமயமலையில் உள்ள பாபாஜி குகையை அடைந்தனர். பாபாஜி குகைக்குள் அமர்ந்து ரஜினிக்காகவும் கோச்சடையான் வெற்றிக்காகவும் பிரார்த்தனை செய்தனர்.

இந்தப் பயணம் குறித்து பொள்ளாச்சி ஆர்வி ராஜ்குமார் நம்மிடம் கூறுகையில், “வாழ்க்கையில் மறக்க முடியாத பயணம் இது. இன்னும் அந்த மலையும் குகையும் என் மனதைவிட்டு அகலவில்லை. தலைவர் ரசிகனாக இருந்ததால் எனக்கு இந்த பாக்கியம் கிடைத்திருக்கிறது.

இமயமலைப் பற்றியோ பாபாஜி குகை பற்றியோ எனக்கு எதுவும் தெரியாது. போய் பார்த்துக் கொள்ளலாம் என்ற ஒரு முடிவோடு கிளம்பினோம். கிளம்பும் முன் தலைவர் வீட்டுக்குப் போனோம். அங்கு தலைவரும் இல்லை, லதா அம்மாவும் இல்லை. எனவே வீட்டுக்கு முன்பு படம் எடுத்துக் கொண்டு, நாங்கள் சென்னையிலிருந்து டெல்லிக்கு விமானத்தில் சென்றோம்.

10153830_623356887740389_243707913524652225_n

அங்கே தமிழில் பெயர்ப்பலகை வைத்திருந்த வாடகைக் காரை பேசி அமர்த்திக் கொண்டோம். நாங்கள் அனைவரும் கோச்சடையான் டி ஷர்ட் அணிந்திருந்ததால் இந்தப் பயணமே மிக சுலபமாக இருந்தது. தலைவர் படத்தைப் பார்த்ததுமே ஆர்வத்துடன் வந்து விசாரிக்கிறார்கள். தேவையான விவரங்கள், உதவிகள் தருகிறார்கள். எங்கு போனாலும் ரசிகர்களுக்கு அவர் பெரிய அடையாளத்தைத் தருகிறார்.
காரில் ரிஷிகேஷுக்குச் சென்றோம். அதற்கே ஒரு நாள் ஆகிவிட்டது. ரிஷிகேஷில் தங்கினோம். வெளியில் சாப்பிடப் போனோம். அப்போதும் கோச்சடையான் டி ஷர்ட்தான். அதைப் பார்த்ததுமே ஒரு தமிழர் வந்து, விசாரித்தார். அவரிடம் விவரங்கள் சொன்னதும், தலைவர் இமயமலை வந்தால் பாபாஜி குகைக்கு அவரை அழைத்துப்போகும் நண்பரின் எண் தந்து தொடர்பு கொள்ளச் சொன்னார்.

10304439_623830187693059_7992753328495734130_n 10176151_622883781121033_8687648734157147766_n (1)

நாங்கள் போன் செய்து விஷயத்தைச் சொன்னதும் அந்த நண்பர் எங்களுக்கு வேண்டிய அனைத்து ஏற்பாடுகளையும் செய்து தந்தார். ஒரு வழிகாட்டியையும் நியமித்தார்.

ரிஷிகேஷிலிருந்து பாபாஜி குகைக்குச் செல்ல 1 நாள் ஆகிறது. ஒரு குறிப்பிட்ட இடத்துக்குப் பிறகு, நடந்துதான் செல்ல வேண்டும். 5 கிலோமீட்டர். பாதை கரடுமுரடாக இருந்தாலும் நண்பர்கள் துணை, தலைவரின் நினைப்புடன் சென்றதால் ஒன்றும் தெரியவில்லை.

10304439_623830187693059_7992753328495734130_n

குகைக்கு முன்னால் போனதும் உள்ளே நுழைவதா வேண்டாமா என யோசிக்க ஆரம்பித்துவிட்டோம். கொஞ்சம் பயம்தான். உள்ளே மிருகங்கள் சென்று அடைந்து கொள்ளவும் வாய்ப்பிருப்பதால் வேண்டாம் என்றுதான் அந்த வழிகாட்டியும் சொன்னார்.

ஆனால் பின்னர் துணிந்து இறங்கினோம். முதலில் இறங்குவது மட்டும்தான் சற்று சிரமம். ஆனால் உள்ளே போன பிறகு நடக்க சிரமம் இல்லை. ஒரு நூறு அடி தூறம் இருக்கும். அங்கே தலைவர் அமர்ந்து தியானம் செய்த இடத்தில் நாங்களும் அமர்ந்து தலைவருக்காகவும் கோச்சடையானுக்காகவும் தியானம் செய்தோம்.

10285356_1416944245235621_1939173151806747958_o

கர்ணப் பிரயாகில் தலைவர் வழக்கமாக சாப்பிடும் விடுதியில்தான் நாங்களும் சாப்பிட்டோம். அங்கு தலைவர் படத்தை மாட்டி வைத்துள்ளனர். அங்கிருக்கும் பணியாளர்கள், சிறுவர்கள் தலைவருடன் நின்று படமெடுத்துக் கொண்டதைக் காட்டினர். பெருமையாக இருந்தது.

அடுத்த நாளே நாங்கள் திரும்ப டெல்லி செல்வதற்கான ஏற்பாடுகளை செய்து கொடுத்தார் தலைவரின் நண்பர்.

இங்கு வந்த பிறகுதான், அடடா இன்னும் நான்கைந்து நாட்கள் இருந்திருக்கலாமே என்று தோன்றுகிறது,” என்றார்.

893707_434652580011825_3141070963683009722_o

இந்தக் குழுவினர் பாபாஜி குகைக்குப் போய்வந்த தகவல் அறிந்து விசாரித்து வாழ்த்துகள் சொன்ன ரஜினியின் நண்பர்கள் ராஜ்பகதூர், ஹரி ஆகியோர், பின்னர் இதனை ரஜினிக்கும் தெரியப்படுத்தியுள்ளனர்.

விஷயத்தைக் கேட்டு வியந்து, நெகிழ்ந்து போயிருக்கிறார் ரஜினி.

-என்வழி ஸ்பெஷல்
5 thoughts on “கோச்சடையான் வெற்றி பெற இமயமலை பாபா குகைக்குப் பயணம் செய்த ரஜினி ரசிகர்கள்!

 1. நிகண்டு.காம்

  வணக்கம்,

  நிகண்டு.காம்(www.Nikandu.com) தமிழ் பதிவர் சமுக வலைத்தளம்
  வழியாக உங்கள் வலைப்பூக்கள், You Tube வீடியோக்கள், புத்தகங்கள் மற்றும் உங்கள் கருத்துகளை மன்றம்(Forum) வழியாக உலகம் முழுவதும் உள்ள தமிழர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம்.

  http://www.Nikandu.com
  நிகண்டு.காம்

 2. கிரி

  “நாங்கள் அனைவரும் கோச்சடையான் டி ஷர்ட் அணிந்திருந்ததால் இந்தப் பயணமே மிக சுலபமாக இருந்தது. தலைவர் படத்தைப் பார்த்ததுமே ஆர்வத்துடன் வந்து விசாரிக்கிறார்கள். தேவையான விவரங்கள், உதவிகள் தருகிறார்கள். ”

  அருமை 🙂

 3. arulnithyaj

  தலைவர் வாங்கி வந்த வரம் இவர்களைப் போன்ற ரசிகர்கள் தான் வேறு யாருக்கும் இந்த வரம் இல்லை

 4. murugan

  வாழ்த்துக்கள் நண்பர்களே
  தலைவருக்காக அவரது ரசிகர்கள் எதையும் செய்வார்கள் என்பதை மீண்டும் ஒரு முறை நிரூபித்து காட்டி இருக்கிறீர்கள்
  உங்களைபோல் தலைவரின் ரசிகர்களாகிய நாங்களும் அவருக்காகவும் அவர்தம் குடும்பத்திர்க்காகவும் கோச்சடையான் சாதனை படைக்கவும் பிரார்த்தித்து வாழ்த்துவோம்
  வாழ்க தலைவர்
  வாழ்க வளமுடன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *