BREAKING NEWS
Search

கோச்சடையான் வசூலில் புதிய சாதனை படைக்க ரஜினி ரசிகர்கள் திருப்பதிக்கு பாத யாத்திரை!

கோச்சடையான் வசூலில் புதிய சாதனை படைக்க ரஜினி ரசிகர்கள் திருப்பதிக்கு பாத யாத்திரை!

unnamed (2)
சூப்பர் ஸ்டார் ரஜினியின் கோச்சடையான் மிகப் பெரிய வெற்றி பெற்று வசூலில் புது சாதனைப் படைக்க வேண்டி சூப்பர் ஸ்டார் ரஜினியின் ரசிகர்கள் திருப்பதி திருமலைக்கு பாதயாத்திரை மேற்கொண்டுள்ளனர்.

ரஜினி மூன்று வேடங்களில் நடித்துள்ள, இந்தியாவின் முதல் நடிப்பு பதிவாக்க தொழில்நுட்பப் படம் கோச்சடையான். ரஜினி மகள் சவுந்தர்யா ரஜினி இயக்கியுள்ளார்.

இந்தப் படத்தின் இசை, ட்ரைலர் மார்ச் 9-ம் தேதி வெளியாகி ரசிகர்களின் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

இந்தப் படத்தை வரவேற்கவும், வெற்றி பெறச் செய்யவும் ரசிகர்கள் பல்வேறு நடவடிக்கைகளில் இறங்கியுள்ளனர்.

வேலூர் மாவட்டம் சோளிங்கரைச் சேர்ந்த ரஜினி ரசிகர்கள், இந்தப் படம் பெரிய வெற்றி பெற வேண்டும் என்ற பிரார்த்தனையுடன் திருப்பதி திருமலைக்கு நடைபயணம் மேற்கொள்ளவிருப்பதாக அறிவித்துள்ளனர்.

unnamed (2)

ஏப்ரல் 2-ம் தேதி சோளிங்கர் நகரிலிருந்து ஏராளமான ரசிகர்கள் குழுவாக இந்த நடைபயணத்தைத் தொடங்குகிறார்கள்.

வேலூர் மாவட்ட ரஜினி ரசிகர் மன்றப் பொருளாளரும், சோளிங்கர் ரஜினி மன்றத் தலைவருமான என் ரவி தலைமையில் இந்த பாதயாத்திரை தொடங்குகிறது.

தலைவர் உடல்நலம் பெற வேண்டி சோளிங்கர் மலை மீதுள்ள லட்சுமி நரசிம்மர் ஆலயத்துக்கு 108 படிகள் முழங்காலால் ஏறி பிரார்த்தனை செய்தவர்கள் இதே சோளிங்கர் ரசிகர்கள் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

-என்வழி




One thought on “கோச்சடையான் வசூலில் புதிய சாதனை படைக்க ரஜினி ரசிகர்கள் திருப்பதிக்கு பாத யாத்திரை!

  1. suresh kumar

    I wish You all the best taking padyatra by thalaivar fans for the huge success of Kochadaiiyaan.I specially thank the organiser of vellore rajinifans club headed by Sholingar N.Ravi
    All IS well

    Venkat Somu Jewellery,SH KUMAR,Prakash BABU H, VRKannan,SS KUMAR and Members of admin@Vellorerajinifans.com,Gandhi Road,Vellore:632001

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *