BREAKING NEWS
Search

‘தலைவரு’க்காக மீண்டும் ஒரு யாத்திரை – சென்னை ரசிகர்கள் பயணம்!

‘தலைவரு’க்காக மீண்டும் ஒரு யாத்திரை – சென்னை ரசிகர்கள் பயணம்!

சூப்பர் ஸ்டார் ரஜினியின் ரசிகர்கள் ஏப்ரல் 29-ம் தேதியை வேண்டுமானால் மறந்துவிடலாம்… ஆனால் ஜூலை 13-ம் தேதியை ஒருபோதும் மறக்க மாட்டார்கள்.

கடந்த ஆண்டு ஏப்ரல் 29-ம் தேதி ராணா படத்தின் தொடக்க விழாவின்போதுதான் ரஜினிக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டது. பின்னர் சிகிச்சைக்காக சிங்கப்பூர் போனார். அதிசயப் பிறவியாக, பூரண நலத்துடன் அவர் மீண்டும் சென்னையில் கால் வைத்த தினம்தான் இந்த ஜுலை 13.

அவர் உடல் நலம் பாதித்த நாளிலிருந்து, நலமுடன் நாடு திரும்பி வரும் வரை நடந்த ரசிகர்களின் பிரார்த்தனைகள் கொஞ்சமல்ல. மன்றத்திலிருப்பவர்கள் என்றில்லாமல், சாதாரண பொதுமக்களும் மனமுருகி வேண்டினர். தாய்மார்கள் பலர் விரதமிருந்தனர். சிலர் முடிகாணிக்கை கூட செலுத்தினர்.

இப்போது ரஜினி நலமுடன் உள்ளார். அவர் நடிப்பில் அடுத்த படமும் வெளிவரவிருக்கிறது.

தங்களை தலைவரின் உடல் நிலை சரியானதற்கு இறைவனுக்கு நன்றி செலுத்தும்விதமாக சென்னை மாவட்ட மன்றத்தைச் சேர்ந்த ரசிகர்கள் வியாழக்கிழமை காலை யாத்திரை புறப்பட்டுள்ளனர். ரஜினி உடல் நலமின்றி இருந்தபோது எந்தெந்த புனிதத் தலங்களுக்குப் போய் வேண்டிக் கொண்டார்களோ, அந்த கோயில்களுக்கெல்லாம் போய் நேர்த்திக் கடன் செலுத்தப் போகிறார்கள்.


சென்னை மன்ற நிர்வாகிகள் ராமதாஸ், கே ரவி, சூர்யா மற்றும் சைதை ரவி உள்ளிட்ட நிர்வாகிகள் இந்தப் பயணத்தில் பங்கேற்றுள்ளனர்.

பகல் 11 மணிக்கு ராகவேந்திரா மண்டபத்திலிருந்து ஒரு மினி பஸ்ஸில் அனைவரும் புறப்பட்டுச் சென்றனர்.

-என்வழி செய்திகள்

மேலும் படங்கள்:




3 thoughts on “‘தலைவரு’க்காக மீண்டும் ஒரு யாத்திரை – சென்னை ரசிகர்கள் பயணம்!

  1. jhony

    தலைவர் ரசிகர்கள் என்றும் நன்றி மறக்காதவர்கள் ……….

  2. Sanjev

    தலைவர் நிச்சயம் ரசிகர்கல்கு எதாவது செய்வார் என்பதே எனது நம்பிக்கை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *