BREAKING NEWS
Search

லிங்கா நஷ்டம் என பொய்ப் பிரச்சாரம் செய்யும் விஷம கும்பலுக்கு ரசிகர்களின் 10 கேள்விகள்!

லிங்கா நஷ்டம் என பொய்ப் பிரச்சாரம் செய்யும் விஷம கும்பலுக்கு ரசிகர்களின் 10 கேள்விகள்!

lingaa-box-office-collection

லிங்கா விநியோகஸ்தரான வேந்தர் மூவீஸிடமிருந்து இடைத் தரகராக நின்று படத்தை வாங்கி வெளியிட்ட சிங்கார வேலன் மற்றும் அவருக்கு துணை போகும் சிலருக்கு ரசிகர்களான நாங்கள் முன்வைக்கும் 10 கேள்விகள்… உங்களை கேள்வி கேட்க எங்களை விடவும் தகுதியானவர்கள் யாருமில்லை. காரணம் இந்தப் படத்தை குறைந்தது ரூ 250 முதல் அதிகபட்சமாக ரூ 1000 வரை காசு கொடுத்து பார்த்து உங்கள் கல்லாவை நிரப்பியவர்கள் நாங்களே…

1. லிங்கா முதல் நாள் திருச்சி தஞ்சையில் 126000 இருக்கையில் 76000 தான் நிரம்பியது என்கிறார். இது ரஜினி படங்களுக்கு சாத்தியமா? முதல் மூன்று நாட்கள் ரஜினி படங்களுக்கு எவ்வளவு கூட்டம் இருக்கும் என்று அனைவரும் அறிந்தது. லிங்காவுக்கு ப்ளாக்கில் கூட டிக்கெட் கிடைக்காமல் திரும்பியவர்களே அதிகம்.

2. நான்காவது நாளே 4 கோடி வசூல் ஆகியது என்கிறார். ஆனால் 25 வது நாளும் அதையேதான் கூறுகிறார். அப்படியெனில் இடைப்பட்ட நாட்களில் ஓடியதெல்லாம் காலியாகத்தானா? 25 நாட்கள் காலியாகவே ஓட்டும் அளவுக்கு தியேட்டர்காரர்கள் நல்லவர்களா?

3. 8 கோடிக்கு வாங்கிய இவர் எத்தனை கோடிக்கு மற்றவர்களுக்கு விற்றார்? மயிலாடுதுறையில் ஒரு திரையரங்கம் ரகூ 25 லட்சம் கொடுத்துள்ளது. பட்டுக்கோட்டையில் ரு 30 லட்சம். மொத்தம் 55 அரங்குகள்.. எத்தனை கோடியை இந்த சிங்கார வேலன் வசூலித்திருக்கிறார் என்பதை கணக்கிட முடிகிறதா?

4. முதல் மூன்று நாளில் அனைத்து டிக்கெட்டுகளையுமே சராசரியாக ரூ 250- 300-க்கு விற்ற கணக்கை ஏன் காட்ட மறுக்கிறார்கள்? ஒரு படம் இரண்டாம் நாளே தோல்வி என்றால் 30 நாட்கள் எப்படி காலியான 21 திரையரங்குகளில் (திருச்சி – தஞ்சை) ஓட முடியும்?

5. கன்னட தயாரிப்பாளர் கொள்ளை அடித்துச் செல்கிறார் என்று கூறும் இவர் ஏன் கன்னட தயாரிப்பாளர் படம் என்று தெரிந்தும் எட்டுக் கோடி கொடுத்து படத்தை வாங்கினார்?

6. படத்தின் வசூலை விட, தொடர்ந்து துவக்கத்தில் இருந்து ரஜினியை, அவர் இமேஜை மட்டுமே தரக்குறைவாக பேசி வருவது ஏன்? அவரை குறிப்பிட்டு தாக்கி வருவது ஏன்? யாருக்காக இந்த வேலை பார்க்கிறார் இந்த நபர்?

7. படம் வெளியாகி ஒரு வாரம் கூட முடியாத நிலையில், நன்றாக ஓடிக்கொண்டு இருந்தும் நான்காவது நாளே எதற்கு நட்டம் என்று கூற வேண்டும். இது படத்தின் வசூலை பாதிக்கும் என்று ஒரு விநியோகஸ்தருக்குத் தெரியாதா! இவர் கூற்றுபடியே நட்டம் என்றாலும், இது போல நடந்து கொண்டால் இன்னும் கூடுதல் நட்டம் தானே ஏற்படும். அப்படி இருக்கும் போது இது போல எப்படி ஒரு விநியோகஸ்தர் கேட்பார்! இதில் என்ன லாஜிக் இருக்கிறது? இவர் உண்மையில் விநியோகஸ்தர்தானா? அல்லது வேறு யாருக்காகவாவது வேலை பார்க்கும் கைக்கூலியா?

8. சிங்காரவேலன் ஏன் தன் சங்கத்தை அணுகாமல் தொடர்ந்து YouTube, Whatsapp இணைய ஊடகங்கள் வழியே பிரச்சாரம் செய்து வருகிறார்? இவர் நோக்கம் நஷ்ட ஈடு கேட்பது போலத் தெரியவில்லையே?

9. தமிழகத்தில் கொள்ளை அடித்து கர்நாடகா கொண்டு செல்கிறார்கள் என்று கூறும் இவர் ஏன் அதற்கு துணை போவது போல இந்தப் படத்தை வாங்கினார். ஒருவேளை இவருக்கு இவர் நினைக்கும் லாபம் கிடைத்து இருந்தால்… கூடுதல் பணம் கர்நாடகாவிற்குப் போகுமே.. அப்போது மட்டும் கர்நாடகாக்கு பணம் செல்வது சரியா?

10. ஒரு வியாபாரத்தில் பணம் சம்பந்தப்பட்ட விசயத்தை ஏன் சம்பந்தமே இல்லாமல் இரு மாநிலப் பிரச்சனை ஆக்க முயற்சிக்கிறது சிங்கார வேலன் அன்ட் கோ?

– இந்தப் பத்துக் காரணங்களை முன்வைத்து உங்கள் மீது ஏன் பொது நல வழக்கு தொடரக் கூடாது?

-இப்படிக்கு

தலைவர் ரஜினியின் ரசிகர்கள்
11 thoughts on “லிங்கா நஷ்டம் என பொய்ப் பிரச்சாரம் செய்யும் விஷம கும்பலுக்கு ரசிகர்களின் 10 கேள்விகள்!

 1. baba

  நண்பர்களே…

  நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து போராட வேண்டிய தருணமிது…நாம் அனைவரும் சேர்ந்து அவனின் இந்த பேட்டியை வைத்தே அவர்கள் மீது பொது நல வழக்கு தொடரலாம்…தலைவருக்காக….யாரவது வழக்கறிஞர் ரசிகர்கள் இருக்கிங்களா…தயவு செய்து உதவுங்கள்…

  Jaihind

 2. arulnithyaj

  நெத்தியடி kelvigal..நிச்சயம் நமது ரசிகர் மன்ற நிர்வாகிகள் இதைப் பற்றி முடிவு எடுக்க வேண்டும்

 3. Manoharan

  இந்த பன்னாடைகள் சொல்வதுபடி வைத்துக் கொண்டாலும் 45 கோடியில் எடுக்கப்பட்ட படம் 220 கோடிக்கு விற்பனை ஆகியுள்ளது, இதில் 40 கோடி நஷ்டமாம். அப்படி என்றால் படம் 180 கோடி வசூல் செய்துள்ளது என்று இந்த நாய்களே சொல்கிறார்கள். அதாவது படத்தின் லாபம் மட்டும் 135 கோடி. 45 கோடியில் எடுக்கப்பட்ட ஒரு படம் 180 கோடி வசூலித்து 135 கோடியை லாபமாக கொடுத்துள்ளது என்று இந்த மடையன்களே சொல்கிறார்கள். ஒரு கட்டத்தில் இந்த சிங்காரவேலன் நாய் சொல்கிறது படத்தின் லாபத்தில் தயாரிப்பாளர் எங்களுக்கு பங்கு தரவேண்டும் என்று..ஏண்டா நாயே நீயே படம் நஷ்டம்னு சொல்றே ..பின் நீயே படத்தின் லாபத்தில் பங்கு வேண்டும்னு சொல்றே ..பின் என்ன சொல்கிறான் என்றால் MG ஒப்பந்தத்தை கேன்சல் செய்துவிட்டு சதவித அடிப்படையில் லாபத்தை பங்கிடவேண்டுமாம். இவனே சொன்ன இன்னொன்று வேந்தர் மூவிசுக்கு 15 கோடி நஷ்டம் என்று . ஏண்டா MG அடிப்படையில்; . வேந்தர் படத்தை விற்றிருந்தால் எப்படி அவர்களுக்கு நஷ்டம் வரும், நஷ்டம் வந்த ஒரு படத்துக்கு மெகா ஹிட் என்று எந்த மடையன் விளம்பரம் கொடுப்பான் ?இன்னொன்று ஆந்திரா, கர்நாடகா,கேரளா வெளிநாடு என்று எந்த இடத்தில் இருந்தும் படம் நஷ்டம் என்று யாரும் சொல்லவில்லை.இவர்கள் சொன்னபடி சென்னை மற்றும் சேலத்தில் படம் லாபமாம். அதெப்படி ஒரு படம் குறிப்பிட்ட சில இடங்களை தவிர மீதி எல்லா இடங்களிலும் ஹிட் ஆகும் ? இவன்கள் நடந்துகொள்வதை பார்க்கும் பொழுது உறுதியாக சில விஷயங்கள் தெரிகிறது. அதாவது இவர்கள் நோக்கம் நஷ்டஈடு கேட்பதல்ல ..அப்படி கேட்பவர்கள் சம்பந்தபட்டவர்கள் மேல் மீடியாவை கூட்டி கண்டபடி பேசமாட்டார்கள். ஆக இவர்கள் நோக்கம் வேறு ஏதோ ..அது என்ன ..??? ரஜினியின் பெயரை கெடுக்கவேண்டும் , ரஜினி சூப்பர்ஸ்டார் இல்லை என்று வேறு எந்த பன்னாடையையோ முன் நிறுத்தவேண்டும் . அதற்கு சம்மந்தப்பட்ட தொடர் தோல்விகளை கொடுத்து வரும் கரும் குரங்கு மூஞ்ச்சி நடிகனிடம் இருந்து பணம் வாங்கியாகிவிட்டது,. வாக்கிய பணத்துக்கு இந்த நாய்கள் குலைக்கிறது. இதை தெரிந்து கொண்ட வேந்தர் மூவிஸ் சிவா ரஜினி என்பவர் இமயமலை அவருக்கு அருகில் வேறு யாரையும் நிறுத்தினாலும் நடக்காது என்று பேட்டியளித்தார். அதையேதான் நாமும் சொல்கிறோம் எந்த நாய் வந்தாலும் ரஜினி என்பவர் மலை .மற்றவர்கள் வெறும் மடு. அவ்வளவுதான்.

 4. Murali

  Dear Vino,
  Please start a campaign among Rajini fans to boycott all the detractors’ movies for the next full year. This is the only way we can retaliate and make them realize what is the price to even think harm for our superstar. Something serious needs to be done. This time is not like other previous occasions. It will be a grave mistake, if you don’t create an intelligent solution this time. Rajini fans need to see at least one occasion where we show the power of our unity and force the hooligans and their behind the seen bosses to realize their stupidity and surrender.
  Let it be a show case for Rajini , the hope to declare his announcement for his entry into disarrayed TN politics. Let this be the beginning.

 5. Karthick shadi

  Singaravelan Yeruma Maadu, thev. Payalae. Kasu vaenum na un amm va vachi sambathi da.
  Nera vanthana serupala adipaen da.

 6. sk

  its high time that a thorough probe is done to find out the money trails , phone conversations, of this person. he is been doing a personal attack on thalaivar and wondering whats the gameplan behind all this ?
  can we get some investigative journalism on this or should it be a PIL to know the truth ?
  there is some other political twist to all this !!!!

 7. srikanth1974

  நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து போராட வேண்டிய தருணமிது…நாம் அனைவரும் சேர்ந்து அவனின் இந்த பேட்டியை வைத்தே அவர்கள் மீது பொது நல வழக்கு தொடரலாம்…தலைவருக்காக….யாரவது வழக்கறிஞர் ரசிகர்கள் இருக்கிங்களா…தயவு செய்து உதவுங்கள்…

  ஜைஹிந்த்

  எனது கருத்தும் இதுவே .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *