BREAKING NEWS
Search

போபாலில் மதிமுகவினரோடு ராஜபக்சேவுக்கு கறுப்புக் கொடி காட்டிய மும்பை ரஜினி ரசிகர்கள்!

போபாலில் மதிமுகவினரோடு ராஜபக்சேவுக்கு கறுப்புக் கொடி காட்டிய மும்பை ரஜினி ரசிகர்கள்!

போபால்: நியாயமான போராட்டம், தமிழர் வாழ்வாதார போராட்டம் எங்கு நடந்தாலும் அவற்றில் அரசியல் தாண்டி பங்கெடுத்து தங்கள் கடமையைச் செய்பவர்கள் ரஜினி ரசிகர்கள்.

அந்த வகையில் இனப் படுகொலையாளி ராஜபக்சேயின் சாஞ்சி வருகையைக் கண்டித்து, மதிமுகவினர் மேற்கொண்ட கறுப்புக் கொடி போராட்டத்தில் தங்களையும் இணைத்துக் கொண்டனர் மராட்டிய மாநில ரஜினி ரசிகர் மன்றத்தினர்.

வைகோவுடன் இணைந்து போராட்டத்தில் பங்கேற்பதுதான் இவர்களின் ஒரிஜினல் திட்டமாக இருந்தது.

நேற்று மும்பையிலிருந்து மாநில தலைவர் எஸ் கே ஆதிமூலம் தலைமையில் புறப்பட்ட ரஜினி ரசிகர்கள், நேராக போபாலுக்குப் போய்விட்டனர். அங்கே போலீசார் மிகுந்த கெடுபிடி காட்டியுள்ளனர்.

இதுகுறித்து ஆதிமூலம் நம்மிடம் கூறுகையில், “தமிழ்நாட்டிலிருந்து வந்தவர்கள் என்றாலே ஆயிரம் கேள்விகளைக் கேட்டனர் போலீசார். தகுந்த அடையாளம் காட்டாவிட்டால் உடனே கைது செய்தனர்.

இதில் நாங்கள் வந்த காரணத்தைத் தெரிந்ததும் ஒரு மண்டபத்தில் அடைத்துவிட்டனர்.

ஆனால் நாங்கள் ராஜபக்சே வந்த நேரத்தில் சரியாக எங்கள் எதிர்ப்பைக் காட்டினோம். நாங்கள் அனைவருமே, தங்கியிருந்த மண்டபத்தின் மாடிகளில் நின்றபடி கருப்புக் கொடிகளை ஆட்டியும் கோஷங்கள் எழுப்பியும் ராஜபக்சேவுக்கு எதிர்ப்பு தெரிவித்தோம்,” என்றார்.

ராஜாபக்சே திரும்பிச் சென்ற பிறகு, போபால் நகரில் தடுத்து வைக்கப்பட்டிருந்த மதிமுகவினர் மற்றும் ரஜினி ரசிகர்களை விடுவித்து, தங்கள் வாகனங்களிலேயே போபால் ரயில் நிலையத்துக்கு அழைத்துச் சென்றுவிட்டுள்ளனர் போலீசார்.

-என்வழி செய்திகள்




2 thoughts on “போபாலில் மதிமுகவினரோடு ராஜபக்சேவுக்கு கறுப்புக் கொடி காட்டிய மும்பை ரஜினி ரசிகர்கள்!

  1. தினகர்

    தலைவன் எவ்வழி, தொண்டன் அவ்வழி என்பதற்கு ரஜினி ரசிகர்கள் சான்று.

    தாங்கள் வசிக்கும் இடத்திற்கு அருகாமையில் உள்ள மாநிலத்தில் நடக்கும் ‘தமிழர் ஆதரவு’ போராட்டத்தில் கலந்து கொண்டதன் மூலம் மும்பை ரசிகர்கள், உண்மையான தொண்டர்கள் என நிருபித்துள்ளனர்.

    திரு.ஆதிமூலம் மற்றும் நண்பர்களுக்கு வாழ்த்துக்கள். தமிழர் நலனுக்காக உங்கள் குரல் தொடர்ந்து ஒங்கி ஒலிக்கட்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *