BREAKING NEWS
Search

லிங்கா எந்த வகையிலும் நஷ்டமில்லை: விநியோகஸ்தர்களுக்கு எதிராக கிளம்பும் ரஜினி ரசிகர்கள்!

லிங்கா எந்த வகையிலும் நஷ்டமில்லை: விநியோகஸ்தர்களுக்கு எதிராக கிளம்பும் ரஜினி ரசிகர்கள்!

fdfs3

நெல்லை: சென்னையில் உண்ணாவிரதம் மேற்கொண்டு வரும் ‘லிங்கா’ பட விநியோகஸ்தர்கள் மற்றும் திரையரங்கு உரிமையாளர்களுக்கு  சூப்பர் ஸ்டார் ரஜினி ரசிகர் மன்றங்களிடையே கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

ரஜினி நடித்து வெளியான ‘லிங்கா’ திரைப்படம் நஷ்டத்தை ஏற்படுத்தி விட்டதாக கூறி, சென்னை வள்ளுவர்கோட்டத்தில் இன்று அப்படத்தின் விநியோகஸ்தர்களும், திரையரங்கு உரிமையாளர்களும் உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர்.

இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள நெல்லை மாவட்ட ரஜினி ரசிகர் மன்ற தலைவர் பானுசேகர் கூறுகையில், ”லிங்கா திரைப்படம் விநியோகஸ்தர்களுக்கும், திரையரங்கு உரிமையாளர்களுக்கும் எந்த விதத்திலும் இழப்பை ஏற்படுத்தவில்லை.

லிங்கா படம் வெளிவந்த நாளில் 6 காட்சிகள் திரையிடப்பட்டன. ஒரு டிக்கெட்டை 400 ரூபாய் வரை விலை நிர்ணயித்து விற்பனை செய்தார்கள். தற்போது வரை அரசு நிர்ணயித்த கட்டணத்தைவிட கூடுதல் கட்டணமே வசூலிக்கப்பட்டு வருகிறது. அதிக விலைக்கு டிக்கெட்டுகள் விற்கப்பட்டதால் பலதடவை படத்தை பார்க்கும் பொதுமக்களும், ரசிகர்களும் கடும் சிரமத்திற்குள்ளாகி உள்ளனர்.

முதலீடு செய்த பணத்தை எடுத்துவிட்ட போதிலும் கூடுதல் லாபத்தை எதிர்பார்த்தார்கள், ஆனால் டிக்கெட் விலை அதிகமாக இருந்ததால் திரையரங்குக்கு வருபவர்களின் வருகை குறைந்து அதிக லாபம் சம்பாதிக்க முடியவில்லை என்கிற உண்மை விநியோகஸ்தர்களுக்கும், திரையரங்கு உரிமையாளர்களுக்கும் நன்றாகவே தெரியும்.

fdfs

ஆனாலும், தனிப்பட்ட விதத்தில் ரஜினியை குறை சொல்ல வேண்டும் என்பதற்காக சிலரது தூண்டுதலின் பேரில் இன்று உண்ணாவிரதம் மேற்கொண்டு வருகின்றனர்.

ஏற்கனவே, சில நடிகர்களின் ரசிகர்களும், விநியோகஸ்தர்கள் மற்றும் திரையரங்கு உரிமையாளர்கள் மீது  இதே பிரச்னைக்காக கடும் கோபத்தில் இருக்கிறார்கள். அவர்கள் தொடர்ந்து இதே போக்கினை கடைபிடித் தால், அனைத்து ரசிகர்மன்றங்களையும் ஒருங்கிணைத்து பெரும் போராட்டம் நடத்தவும் தயங்க மாட்டோம்,” என்றார்.

விநியோகஸ்தர்களின் உண்ணாவிரதத்தை தொடர்ந்து, ரஜினி ரசிகர்களிடையே அது கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. பெரிய போராட்டத்துக்கு அவர்களும் தயாராகி வருகின்றனர். இதனால் திரையுலகில் பரபரப்பான சூழல் நிலவுகிறது.

– என்வழி
8 thoughts on “லிங்கா எந்த வகையிலும் நஷ்டமில்லை: விநியோகஸ்தர்களுக்கு எதிராக கிளம்பும் ரஜினி ரசிகர்கள்!

 1. Arun

  விரைவாக ரசிகர்களை ஒருங்கிணைத்து நமது மிகப்பெரிய எதிர்ப்பை காட்டுவோம்!

 2. V. SURESH

  சினிமாவில் நல்லவர்கள் யாரும் இல்லையா? தலைவரை வைத்து பணம் சம்பதிர்வர்கள் எத்தினை பேர்? அனைவரும் அமைதி காப்பது ஏன்?சீமான் வேல்முருகன் இவர்கள் எல்லாம் தமிழ் துரோகிகள். சீமான் போன்றவர்கள் புப்ளிசிடிகாக இந்த மானங்கெட்ட செயலில் ஈடுபட்டு உள்ளனர்.

 3. Murali

  Yes. Its time for a great show of strength. Its time for the GRAND ANNOUNCEMENT. The pigs have entered Lion’s den. All the pigs should pay the price for their misdeeds. Not only that our state needs a break from all misrules.

 4. GANESH

  சிவாஜி படத்துல ரஜினி ஒபெநிங் ஸ்கீன் பதா தெரியும். அறிவுகெட்ட, பருதேசி பய, ரஜினி எ பத்தி துப்ப சொல்ற வாங்க ல நாம் வேடிக்கை பார்த்து கொண்டு இருந்தால் என்ன அர்த்தம். சீமான் குச்சி கார பயலுக்கு 64 ஏஜ் மகான் ரஜினி எ பத்தி சீமான் பிச்ச கார பயலுக்கு என்ன தெரியும்.

  நாம் ரஜினி மீது உண்மை யான பற்று இருந்தால் போராடுவோம்.

 5. yaseenjahafar

  சிங்கார வேலன் மாதரி உள்ள சக்கடை போன்ற நபர்களுக்கு ஒரு காசு கொடுக்க கூடாது யார் இந்த சிங்கார வேலன் அட்ரஸ் இல்லாத ஆளாகா இருந்த இந்த சிங்கார வேலன் லிங்கா சூப்பர் ஸ்டார் ரஜினி சாரின் படம் மூலியாமாகா அட்ரஸ் தேடி கொண்டார் எல்லுரும் அப்படி தான் தேடி கொண்டார்கள் சிங்கார வேலன் மட்டும் என்ன விதி விளக்கா என்ன ஒரு 5 வருடம் 10 வருடம் கழித்து ஏதாவது இது மாதரி சக்கடை போன்ற பிரச்சனை
  வரும் வந்தால் யார் இந்த சிங்கார வேலன் கேட்பார்கள் அப்பொழுது சொல்லலாம் நம்ம சூப்பர் ஸ்டார் லிங்கா படத்துக்கு பொய் நாடகம் ஆடினார் அல்லே அவர் தான் இவர் என்று அறிமுகம் செய்து கொள்ளலாம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *