BREAKING NEWS
Search

தனி ஈழம் கோரி சூப்பர் ஸ்டார் ரஜினி ரசிகர்கள் உண்ணாவிரதம்!

தனி ஈழம் கோரி சூப்பர் ஸ்டார் ரஜினி ரசிகர்கள் உண்ணாவிரதம்!

IMG_7055
இலங்கைத் தமிழர்களுக்கு தனி ஈழம், இனப்படுகொலை செய்த ராஜபக்சேவுக்கு தண்டனை, கச்சத்தீவை திரும்பப் பெறுதல் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ரசிகர்கள் உண்ணாவிரதம் நடத்தினர்.

இலங்கைப் பிரச்சினையில் தமிழருக்கு ஆதரவான போராட்டம் இதுவரை இல்லாத அளவுக்கு இந்தியாவில் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. மாணவர்கள் ஆரம்பித்த இந்தப் போராட்டம் இப்போது மக்கள் போராட்டமாக வடிவம் பெற்றுள்ளது. இப்போது இதில் சூப்பர் ஸ்டார் ரஜினி ரசிகர்களும் கைகோர்த்துள்ளனர்.

thalaivar-fans-sholingar7

வேலூர் மாவட்ட ரஜினி ரசிகர் மன்ற பொருளாளர் என் ரவி தலைமையில் சோளிங்கர் நகரில் மார்ச் 19-ம் தேதி ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம் மேற்கொண்டனர்.

இந்தப் போராட்டத்தில் ஏராளமான ரஜினி ரசிகர்கள் பங்கேற்றனர். அவர்களுடன் அதிமுக, திமுக, விடுதலைச் சிறுத்தைகள், பாஜக உள்ளிட்ட அனைத்துக் கட்சி நிர்வாகிகளும் பங்கேற்று வாழ்த்திப் பேசினர்.

Rajini fans observes fast to create independent eelam for Tamils 2

ரஜினி ரசிகர் மன்றத்தின் சோளிங்கர் ஒன்றிய பொறுப்பாளர் கோவன், மார்லின், பாண்டியன், நடராஜன், வெங்கடேசன் ஆகியோர் உண்ணாவிரதத்தில் கலந்து கொண்டனர்.

அதிமுக தலைமை கழக பேச்சாளர் சோமு மணி, திமுக வேலூர் மாவட்ட துணைச் செயலர் அசோகன், வேலூர் கிழக்கு மாவட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சி செயலர் ரத்தின சுகுமார், பாஜக மாவட்ட துணை தலைவர் சுந்தரம், பாமக வக்கீல் சக்கரவர்த்தி, கவுன்சிலர்கள் ஏழுமலை, சேகர் உள்ளிட்டோர் உண்ணாவிரதத்தை வாழ்த்திப் பேசினர்.

சென்னையிலிருந்து சிறப்பு அழைப்பாளராக ‘என்வழி’ எஸ் சங்கர், பிஆர்ஓ ஜான் உள்ளிட்டோர் கலந்து கொண்டு பேசினர்.

IMG_7089

ரஜினி ரசிகர்கள் ஏற்கெனவே 2009-ம் ஆண்டு ஈழப் போர் உச்சக்கட்டத்தில் இருந்த போது தனி ஈழம் கோரி தொடர் உண்ணாவிரதம் இருந்தனர்.

இப்போது மீண்டும் ஈழப் பிரச்சினைக்கான போராட்டத்தில் தங்களின் உணர்வுகளைக் காட்ட ஆரம்பித்துள்ளனர்.

தலைவர் ரஜினி காந்தின் அனுமதி பெற்றே இந்த உண்ணாவிரதம் நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

 

IMG_7087

-என்வழி செய்திகள்

படங்கள்: குணா, சுரேஷ்

மேலும் படங்களுக்கு….




10 thoughts on “தனி ஈழம் கோரி சூப்பர் ஸ்டார் ரஜினி ரசிகர்கள் உண்ணாவிரதம்!

  1. chenthil UK

    வாழ்த்துக்கள் … போராட்டம் நமது காது கேளாத மத்திய அரசாங்கத்திற்கு கேட்கட்டும்… ஒட்டு மொத தமிழினத்தையும் தமிழனின் கோரிக்கையை கவனிக்காத அரசாங்கம் விரைவில் கவிழ வேண்டும்.. இனி ஒரு அரசாங்கம் வந்தால் தமிழனை மதிக்கும் மத்திய அமைச்சரை அனுப்ப வேண்டும்.. சிதம்பரம், நாராயணசாமி, வாசன், போன்ற செவிட்டு அமைச்சர்களை துரத்த வேண்டும்…

  2. Dinesh Murugesan

    அருமை தோழர்களுக்கு , என் முழு மனதுடன் ஆதரவு தெரிவிக்கிறேன் .

  3. RAMS

    இலங்கைக்கு ஆதரவு அளிக்கும் காங்கிரஸ்ஐ எதிர்த்து போராடும் திருப்பூர் மாணவர்களை பாராட்டுகிறேன். இது தமிழ்நாட்டின் ஆரம்பம் தான்!! இந்திய மாணவர்களே இலங்கைக்கு எதிராக குரல் கொடுங்கள். காங். ஐ வீழ்த்துங்கள். இந்தியாவின் எதிர்காலம் இனி நம் கையில்.. நான் திருப்பூரில் பிறந்ததற்கு பெருமை படுகிறேன்.. அதை விட இந்தியன் என்று பெருமை பட ஒரு வாய்ப்பு அளியுங்கள்… JAIHIND!!!!

  4. r.v.saravanan

    நண்பர்களுக்கு எனது ஆதரவும் வாழ்த்துக்களும்

  5. srikanth1974

    நானும் எனது ஆதரவையும்,வாழ்த்தையும்,தெரிவித்துக்கொள்கிறேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *