BREAKING NEWS
Search

ரஜினி மக்கள் மன்றத்தினரின் கோடை ட்ரீட்… ஓடி ஓடி பயணிகளின் தாகம் தணித்த ரசிகர்கள்!

கோடை தன் கொடும் கரங்களை நீட்டி வாட்ட ஆரம்பித்துவிட்டது. குளிர்சாதன வண்டிகளில் போனால் கூட தாங்க முடியாத அளவுக்கு 2018 கோடை வறுத்தெடுக்கிறது.

இதனை உணர்ந்த ரஜினி மக்கள் மன்றத்தினர், அத்தனை கட்சிகளுக்கும் முன்னோடியாய், மக்களின் தாகம் தணிக்கக் கிளம்பிவிட்டனர், தமிழகம் முழுவதும்.

ஒவ்வொரு மாவட்டத்திலும் கிராமங்கள், ஒன்றியங்கள், பேரூராட்சிகள், மாவட்ட தலைநகரங்கள் என அனைத்து மட்டங்களிலும் நீர் மோர்ப் பந்தல்களை அமைத்து வருகின்றனர். ஒருபடி மேலே போய், பழச்சாறு, தர்பூசணிப் பழங்களையே மக்களுக்கு இலவசமாக அளித்து வருகின்றனர்.

நேற்று ஞாயிற்றுக் கிழமை காஞ்சிபுரம் மாவட்டம் கருங்குழி ஒன்றியத்திலும் இதுபோல் நீர் மோர்ப் பந்தல்கள், அமைத்து பழச்சாறு, பழக்கீற்றுக்களை பொதுமக்களுக்கு வழங்கி அசத்தினர் ரஜினி மக்கள் மன்றத்தினர்.

காஞ்சிபுரம் மாவட்டச் செயலாளர் அன்பழகன், இணைச் செயலாளர் பாபு, கருங்குழி சீனிவாசன் ஆகியோர் இதற்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தனர்.

தேசிய நெடுஞ்சாலையில் செல்லும் வாகனங்கள் கருங்குழிப் பகுதியில் நின்ற போது ஓடிச் சென்று நீர் மோர் மற்றும் பழக்கீற்றுகளைக் கொடுத்து அவர்களின் தாகம் தணித்தனர் ரஜினி மக்கள் மன்றத்தினர்.

மக்கள் மிகுந்த அன்புடன் இவற்றைப் பெற்றுக் கொண்டு, ரஜினியின் காவலர்களுக்கு நன்றி தெரிவித்தனர்.

 

மேலும் படங்கள்…

 

-என்வழி




One thought on “ரஜினி மக்கள் மன்றத்தினரின் கோடை ட்ரீட்… ஓடி ஓடி பயணிகளின் தாகம் தணித்த ரசிகர்கள்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *