BREAKING NEWS
Search

முதல் நாள் முதல் காட்சியின் ஆரவாரத்தோடு நடந்த லிங்கா நூறாவது நாள் விழா!

 முதல் நாள் முதல் காட்சியின் ஆரவாரத்தோடு நடந்த லிங்கா நூறாவது நாள் விழா!

lingaa-100-8

லிங்கா’ படத்தின் 100–வது நாள் விழா சென்னை ‘ஆல்பட்’ தியேட்டரில் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. பல நூறு ரசிகர்கள் திரண்டுவந்ததால் அந்தப் பகுதியே திருவிழாக் கோலம் பூண்டது.

‘லிங்கா’ படம் கடந்த டிசம்பர் மாதம் 12-ம் தேதி ரஜினி பிறந்த நாளில் பிரமாண்டமாக ரிலீசானது. ரஜினி இரு வேடங்களில் நடித்திருந்தார். நாயகிகளாக அனுஷ்கா, சோனாக்ஷி சின்ஹா நடித்தனர்.

இப்படம் தமிழகம், வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் 3000 க்கும் அதிகமான திரையரங்குகளில் திரையிடப்பட்டது.

முதல் மூன்று நாட்களில் ரூ 108 கோடியைக் குவித்து புதிய சாதனைப் படைத்தது இந்தப் படம். முதல் வாரம் முழுக்க ரூ 250 வரை விலை வைத்து டிக்கெட்டுகள் விற்று, பணத்தை அள்ளினர் தியேட்டர்காரர்களும் விநியோகஸ்தர்களும்.

ஆனால் படம் வெளியான மூன்றாம் நாளிலிருந்தே படத்துக்கு எதிரான பிரச்சாரத்தை திட்டமிட்டு செய்தனர் சிலர். படத்தின் விநியோகஸ்தர்கள் என்று கூறிக் கொண்டே இந்த பிரச்சாரத்தை செய்தனர் அவர்கள். இது படத்தின் ஓட்டத்தைப் பெரிதும் பாதித்தது.

lingaa-100-1

ஆனாலும், சென்னையில் ‘லிங்கா’ படம் சென்னை ஆல்பட், அபிராமி, தேவி ஆகிய அரங்குகளில் 100 நாட்கள் ஓடியது.

ஆல்பர்ட் தியேட்டரில் 100–வது நாள் வெற்றி விழாவுக்கு நேற்று மாலை ஏற்பாடு செய்யப்பட்டது.

தியேட்டர் முன் ரஜினி கட் அவுட்கள் வைக்கப்பட்டு இருந்தன. கொடி தோரணங்களும் கட்டப்பட்டிருந்தன. தியேட்டரில் ஏராளமான ரசிகர்கள் திரண்டனர். ரஜினி உருவம் பொறித்த கொடிகளையும் கையில் வைத்து இருந்தார்கள்.

கிட்டத்தட்ட இரண்டு மணி நேரத்துக்கும் மேல் பட்டாசுகள் வெடிக்கப்பட்டன. இனிப்புகள் வழங்கப்பட்டன. ரஜினி பேனர் மற்றும் கட் அவுட்டுக்கு பாலாபிஷேகம் நடந்தது. சூப்பர் ஸ்டார் ரஜினி வாழ்க என கோஷங்களும் எழுப்பினார்கள். சைதை ரசிகர் மன்றம் உள்ளிட்ட பல பகுதிகளிலிருந்தும் ரசிகர்கள் திரண்டு வந்து ஆரவாரமாய் கொண்டாடினர். பலர் குடும்பத்தோடு வந்திருந்தனர்.

lingaa-100-4

‘லிங்கா’ 100–வது நாள் விழாவையொட்டி ராகவா லாரன்சின் ஆதரவற்றோர் இல்லத்தில் சைதை ரவி தலைமையில் உணவு வழங்கப்பட்டது. மயிலை கபாலீஸ்வரர் கோவிலில் மயிலை சிறப்பு பூஜை நடந்தது.

நேற்று ஆல்பர்ட் மெயின் அரங்கில் படம் திரையிடப்பட்டது. 100 வது நாள் என்பதால் திரையரங்கம் ஹவுஸ்புல்லாகிவிட்டது. படத்தை ஆரவாாரத்தோடு ரசித்து மகிழ்ந்தனர். ரஜினி படங்களின் முதல் நாள் முதல் காட்சிகளுக்கு எப்படி ரசிகர்கள் திரண்டு வந்து கொண்டாடுவார்களோ, அதே போல நேற்று லிங்கா 100வது நாள் விழாவைக் கொண்டாடினர் ரஜினி ரசிகர்கள்.

-என்வழி

 




4 thoughts on “முதல் நாள் முதல் காட்சியின் ஆரவாரத்தோடு நடந்த லிங்கா நூறாவது நாள் விழா!

  1. Radha Ravi

    உலக தமிழர்களின் பொக்கிஷம் கலை கடவுள் ரஜினி அவர்கள் தான். முதன்முதலில் சூப்பர் ஸ்டார் ரஜினி படம் தான் உலகில் அனைத்து நாடுகளிலும் குறிப்பாக தமிழர்கள் அதிகம் வசிக்காத நாடுகளிலும் வெளியாகியது. உலக நாடுகளுக்கு தமிழின் பெருமையை இந்தியாவின் பாரம்பரியத்தை உலகறிய செய்த பெருமை சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்களையே சாரும்.

  2. Radha Ravi

    லிங்கா படம் தோல்வி என்பதே ஒரு திட்டமிட்ட சதி. லிங்கா படம் வெளியான முதல் 10 நாட்கள் முன்பதிவு செய்யப்பட்டது. பின்பு எப்படி நட்டம் என்று சொல்ல முடியும் ?. ரஜினிக்கு எதிராக பரப்பப்படும் அரசியல் சதி. தலைவர் பக்கம் அந்த ஆண்டவன் உண்மையான ரசிகர்கள் மற்றும் மக்கள் சக்தி இருக்கும் வரை சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்களை எவனும் ஒன்றும் செய்ய முடியாது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *