BREAKING NEWS
Search

இந்த விருதினை திரையுலகுக்கும் ரசிகர்களுக்கும் சமர்ப்பிக்கிறேன் – சூப்பர் ஸ்டார் ரஜினி

மத்திய அரசின் விருது பெருமை தருகிறது.. விருதினை திரையுலகுக்கும் ரசிகர்களுக்கும் சமர்ப்பிக்கிறேன்! – ரஜினி

gfoa7

கோவா: மத்திய அரசு தனக்கு வழங்கிய சினிமா பிரபலம் 2014 விருதினை திரைத் துறைக்கும் தனது ரசிகர்களுக்கும் சமர்ப்பிப்பதாக ரஜினிகாந்த் கூறினார்.

கோவாவில் நடைபெறும் 45வது சர்வதேச திரைப்பட விழாவில், மத்திய அரசு வழங்கிய நூற்றாண்டு விழா காணும் இந்திய சினிமாவின் சிறந்த பிரமுகர் 2014 என்ற உயர்ந்த விருதினைப் பெற்றுக் கொண்ட ரஜினி, அதற்கு நன்றி தெரிவித்து சுருக்கமாக பேசியதாவது:

கோவா ஆளுநர் அவர்களே, மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை அருண் ஜெட்லி அவர்களே, என் அண்ணா அமிதாப்ஜி அவர்களே..

B240jr9CYAAJpEv

விருதுக்காகத்தான் மேடைக்கு வந்தேன். என்ன பேசுவது என்ற திட்டம் ஏதுமில்லை. அமிதாப் பச்சன் இத்தனை அருமையாகப் பேசிய பிறகு நான் என்ன பேசுவது?

கடந்த ஐந்தாறு ஆண்டுகளாகவே இந்த விழாவுக்கு வரவேண்டும் என நினைத்தேன். அந்தமுறைதான் எனக்கு அந்த வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்த விருது எனக்கு பெருமையாகவும் கவுரவமாகவும் உள்ளது. விருதினை அளித்த மத்திய அரசுக்கும் தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சகத்துக்கும் நன்றி.

இந்த விருதினை எனது தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள் மற்றும் என் ரசிகர்களுக்கு சமர்ப்பிக்கிறேன். நன்றி,” என்றார்.

-என்வழி




6 thoughts on “இந்த விருதினை திரையுலகுக்கும் ரசிகர்களுக்கும் சமர்ப்பிக்கிறேன் – சூப்பர் ஸ்டார் ரஜினி

  1. chozhan

    அபூர்வ ராகத்துக்கு, அபூர்வமாக கிடைத்த (100 ஆண்டு ) விருதை //எனது தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள், எழுதியவர்கள், சக கலைஞர்கள் மற்றும் என் ரசிகர்களுக்கு சமர்ப்பிக்கிறேன்// என்பது பெருந்தன்மையை/நன்றியை காட்டுகிறது.

    உயர்ந்த உள்ளம்.

  2. srikanth1974

    வாழ்த்துக்கள் தலைவா’ இன்னும் உங்களுக்கு பல விருதுகளும்,வெற்றிகளும்,
    காத்திருக்கின்றன.

  3. குமரன்

    வாழ்த்துக்கள்.

    இன்னமும் பல விருதுகள் காத்திருக்கின்றன என்பது மிகை அல்ல.

    நிச்சயம் உண்டு. ஒருநாள் தாதாசாகேப் பல்கே விருது கூட வர உள்ளது.

  4. srikanth1974

    திரு.குமரன்.சார் அவர்களுக்கு நன்றி .
    தலைவருக்கு மிக உயரிய விருதான தாதாசாஹேப் பால்கே விருது
    விரைவில் கிடைக்கட்டும் உங்கள் வாக்கு பலிக்கட்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *