BREAKING NEWS
Search

28 நாள் மலேசிய ஷெட்யூல் முடிந்தது… தாய்லாந்தில் கபாலி டீம்!

தாய்லாந்தில் கபாலி டீம்!

thai2

பாலி பட ஷூட்டிங்குக்காக தலைவர் ரஜினி மலேசியா போனாலும் போனார்… அவர் போகுமிடங்களிலெல்லாம் பின்னாலேயே ஒட்டு மொத்த மலேசியாவும் ஓடிக் கொண்டிருந்தது.

சமூக வலைத் தளங்களைத் திறந்தால் எங்கும் மலேசியாவில் ரஜினி என்ற தலைப்புடன் ரசிகர்கள் பகிர்ந்த படங்கள், தகவல்கள்.

சூப்பர் ஸ்டார் ரஜினி கோலாலம்பூர் விமான நிலையத்தில் இறங்கியதிலிருந்து, கடந்த 28 நாட்களாக அவர் படப்பிடிப்புக்காக சென்ற இடங்கள் அனைத்திலும் ரசிகர்களின் திருவிழாக் கோலம்தான்.

thai3

ஒரு வழியாக மலேசிய ரசிகர்களின் அன்புப் பிடியிலிருந்து மீண்டு, இப்போது தாய்லாந்து சென்றுள்ளார் ரஜினி. இங்குள்ள மார்க்கெட் மற்றும் தெருக்களில் நடைபெறுவது போன்ற சில காட்சிகள் கபாலி படத்தில் இடம்பெறுவதால், பாங்காக் சென்றுள்ளார் ரஜினி.

பாங்காக் விமான நிலையத்தில் ரஜினியை பூங்கொத்து கொடுத்து வரவேற்று அழைத்துச் சென்றனர்.

தாய்லாந்து படப்பிடிப்பு முடிந்ததும், மீண்டும் மலேசியா திரும்பும் ரஜினி, கபாலியின் இன்னொரு கெட்டப்பில் நடிக்கவிருக்கிறார்.

-என்வழி

 




One thought on “28 நாள் மலேசிய ஷெட்யூல் முடிந்தது… தாய்லாந்தில் கபாலி டீம்!

  1. Rajagopalan

    Thalaivar has come back to chennai yesterday morning it seems.. Todays Dinakaran news…. Aslo he has met Sanjay Wadhwa it seems…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *