Breaking News

‘ஒரு படம் என்ன.. ஒரு டஜன் கூட நடிப்பார் ரஜினி!’

Sunday, March 18, 2012 at 8:10 pm | 1,311 views

‘ஒரு படம் என்ன.. ஒரு டஜன் கூட நடிப்பார் ரஜினி!’

கோச்சடையான் என்ற படத்தின் அறிவிப்பு வந்த போது, அதை சிலர் நம்ப மறுத்துவிட்டனர். அவ்வளவு ஏன், ரஜினிக்கே தெரியாமல் வந்துவிட்டது இந்த அறிவிப்பு. படம் நடிக்கும் அளவு அவர் உடல்நிலை இல்லை என்று சொன்னவர்களும் உண்டு.

அப்படிச் சொன்ன ஒரு பத்திரிகையாள நண்பர், பின்னர் தன் கருத்தை மாற்றிக் கொண்டார்.

அதுகுறித்து அவர் இப்படி எழுதுகிறார்:

“இன்று காலை சரியாக 10.10 மணிக்கு ரஜினியை, அவரது காரில் இறங்கும்போது பார்த்ததற்கு முந்தின கணம் வரை, அவரால் இன்னொரு படம் நடிக்கமுடியும் என்ற நம்பிக்கை  எனக்கு ஏற்பட்டதில்லை.காரணம் அவர் உடல்நிலை குறித்து பரவியிருந்த கன்னாபின்னா வதந்திகள்.

இதனாலேயே ‘கோச்சடையான்’ படத்தைப் பற்றி தினமும் அடிக்கப்படும் கும்மிகளைப் பார்த்து’ கோச்சடையான்’ன்னு ஒரு படமே கிடையாது என்று நான் கிண்டல் செய்து கொண்டிருந்தேன்.

அவர் காரிலிருந்து இறங்கி, கைகுலுக்கச் சென்ற அனைவருக்கும் கும்பிடு போட்டபடி, சிங்கநடை போட்டு லிஃப்டில் ஏறியதை வேகத்தையும் சுறுசுறுப்பையும் பார்த்த போது, இன்னும் ஒரு படம் என்ன? ஒரு டஜன் படங்களிலே கூட நடிக்கலாம் என்று தோன்றியது!”

-முன்பைக் காட்டிலும் துடிப்பான இளமையான ரஜினியை கோச்சடையானில் பார்ப்பீர்கள் என விமான நிலையத்தில் ரஜினி சொன்னபோது இந்த நிகழ்வுதான் நினைவுக்கு வந்தது.

அப்பா பாட்டு… ஆனந்தப் பாட்டு!

 
கோச்சடையானுக்காக இத்தனை ஆண்டுகள் கழித்து சூப்பர் ஸ்டார் பாடியது குறித்து இயக்குநர் சௌந்தர்யாவிடம் கேட்டபோது, நான்கே வரிகளில் நச்சென்று இப்படிச் சொன்னார்:

“நான் இன்னும் பாடலைப் பற்றி யாரிடமும் சொல்லவில்லை. ஆனால் மிகவும் சுவாரஸ்யமான பாட்டு, ரசிகர்களை துள்ள வைக்கும் பாட்டு. அப்பா பாட்டு, ரஹ்மான் மெட்டு, வைரமுத்து சார் வரிகள்.. எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு. இந்தப் படத்துக்கு பெரிய வேல்யூ இந்தப் பாட்டால கிடைச்சிருக்கு,” என்றார்.

ரஜினி பாடுகிறார் என்பதற்காகவே, வரிகளை அழகுத் தமிழில் அமைத்தாராம் வைரமுத்து. ரஜினி பாடியபோது அந்த வரிகள் இன்னும் அழகு பெற்றன, என்கிறார் வைரமுத்து.

ரீடேக்கெல்லாம் எடுக்காமல், ஒன்றிற்கு இருமுறை முழுசாகக் கேட்டுக் கொண்டு, பாடிக் கொடுத்துவிட்டாராம் ரஜினி!

’3′ படத்துக்கு குவியும் கோடிகள்…

ஸ்வர்யா தனுஷ் இயக்கியுள்ள ’3′ படத்தின் ஆந்திர உரிமை கணிசமான விலைக்கு விற்பகப்பட்டிருக்கிறது. இந்தப் படத்தை வாங்கிய தெலுங்கு விநியோகஸ்தர், அதன் ஒரு ஏரியாவை மட்டுமே 3 கோடிக்கு விற்றுள்ளார்.

இதே ரேஞ்சுக்கு விற்கப்பட்டால் எப்படியும் ரூ 10 கோடியைத் தாண்டிவிடும் பிஸினஸ் என்கிறார்கள்!

எல்லாம் கொலைவெறி என்ற ஒத்தைப் பாட்டு பண்ற வேலை. அப்புறம்… படத்துக்கு யு சான்று கொடுத்திருக்கிறார்களாம்!

-என்வழி ஸ்பெஷல்

Related Posts with Thumbnails
© The content is copyrighted to Envazhi and may not be reproduced on other websites.

Comments

7 Responses to “‘ஒரு படம் என்ன.. ஒரு டஜன் கூட நடிப்பார் ரஜினி!’”
 1. தினகர் says:

  “எப்படியும் ரூ 10 கோடியைத் தாண்டிவிடும் பிஸினஸ்”… “படத்துக்கு யு சான்று கொடுத்திருக்கிறார்களாம்! ”

  நம்ம வீட்டு பொண்ணும் மாப்பிள்ளையும் நல்லா வெற்றி பெறட்டும் நமக்கு பெருமை தானே..

 2. தினகர் says:

  “இன்னும் ஒரு படம் என்ன? ஒரு டஜன் படங்களிலே கூட நடிக்கலாம் என்று தோன்றியது!”

  கவுண்டரின் பாபா பில்டப் ஞாபகத்திற்கு வந்து விட்டது..

  அவருக்கு என்ன விருப்பமோ அதை செய்யட்டும். அவ்வளவு தான்..

 3. devaraj says:

  Agree entirely with Dhinakar.

  cheers
  dev.

 4. குமரன் says:

  ///அவர் காரிலிருந்து இறங்கி, கைகுலுக்கச் சென்ற அனைவருக்கும் கும்பிடு போட்டபடி, சிங்கநடை போட்டு லிஃப்டில் ஏறியதை வேகத்தையும் சுறுசுறுப்பையும் பார்த்த போது, இன்னும் ஒரு படம் என்ன? ஒரு டஜன் படங்களிலே கூட நடிக்கலாம் என்று தோன்றியது!”///

  நல்ல செய்தி

 5. நடிங்க… நடிங்க… நடிச்சிக்கிட்டே இருங்க… எத்தனை படம் நடிச்சாலும் நாங்க பார்த்துக்கிட்டே இருப்போம்ல…
  உங்கள் இணையதளத்திற்கு ஏராளமான வாசகர்கள் வரவேண்டுமா. உங்கள் இணையதளத்தின் ஒவ்வொரு பதிவையும் http://www.hotlinksin.com/ இணையதளத்தில் இணைத்திடுங்கள். தினமும் 100 வாசகர்களைப் பெற்றிடுங்கள்.

 6. நேரமிருந்தால் வந்து செல்லவும்.

  நானும் ரஜினியும்
  http://www.muthusiva.in/2012/03/blog-post_19.html

 7. chithamparam says:

  சூப்பர் ஸ்டாரின் பன்ஞ், டயலாக்குகள் பகுதி 2
  http://vanavil7.blogspot.com/2012/03/2.html

Speak Your Mind

  Type in Tamil (Press Ctrl+g to toggle between English and Tamil)