BREAKING NEWS
Search

கருணாநிதியை நேரில் சந்தித்து பிறந்த நாள் வாழ்த்து சொன்னார் சூப்பர் ஸ்டார்!

கருணாநிதியுடன் ரஜினி சந்திப்பு –  பிறந்த நாள் வாழ்த்து சொன்னார்!

சென்னை: திமுக தலைவர் கருணாநிதியை அவரது கோபாலபுரம் இல்லத்தில் நடிகர் ரஜினிகாந்த் இன்று (16.06.2012) காலை சந்தித்து பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தார்.

இச்சந்திப்பின் போது திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின், தயாளு அம்மாள் ஆகியோர் உடனிருந்தனர்.

இச்சந்திப்புக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ரஜினி, “திமுக தலைவர் கலைஞரின் பிறந்த நாளின்போது நான் பெங்களூரில் இருந்தேன். நேற்றுதான் சென்னை வந்தேன். இன்று காலை அவருக்கு பிறந்த நாள் வாழ்த்து சொல்ல நேரில் சந்தித்தேன். இந்த சந்திப்பு மரியாதை நிமித்தமான சந்திப்பு,” என்றார்.

கருணாநிதியின் பிறந்த நாளான ஜூன் 3-ம் தேதி பெங்களூரிலிருந்து தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்திருந்தார் ரஜினி என்பது குறிப்பிடத்தக்கது.

-என்வழி செய்திகள்




8 thoughts on “கருணாநிதியை நேரில் சந்தித்து பிறந்த நாள் வாழ்த்து சொன்னார் சூப்பர் ஸ்டார்!

  1. Manoharan

    தலைவா உனக்கு வேலையே இல்லையா ? இதெல்லாம் எதுக்கு.

  2. mani

    பதவியில் இல்லாத ஒருவருக்கு நேரில் வாழ்த்து. அது தான் ரஜினி

  3. lotus

    மூத்த தலைவனுக்கு மரியாதை செய்த தலைவா வாழ்க வளமுடன்

  4. enkaruthu

    //தலைவா உனக்கு வேலையே இல்லையா ? இதெல்லாம் எதுக்கு.//

    என்ன தவறு மனோகரன் அவர்களே. கோச்சடையன் ரிலீஸ் ஆகும் நேரத்தில் கூட ஆளும் கட்சி கோபம் கொண்டு தன் படத்துக்கு சிக்கல் கொடுப்பார்களோ என்ற பயம் இல்லாமல் நான் இப்படிதான் என்று உரக்க கூறும் தலைவனின் நெஞ்சுரம்தான் எனக்கு தெரிகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *