BREAKING NEWS
Search

ராஜபக்சே விவகாரம்: மோடி விழாவைப் புறக்கணித்தார் சூப்பர் ஸ்டார் ரஜினி!

ராஜபக்சே விவகாரம்: மோடி விழாவைப் புறக்கணித்தார் சூப்பர் ஸ்டார் ரஜினி!

DSC_7243

சென்னை: இலங்கை அதிபர் ராஜபக்சேவின் வருகை காரணமாக, மோடியின் பதவி ஏற்பு விழாவில் கலந்து கொள்ளாமல் புறக்கணித்துவிட்டார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.

நரேந்திர மோடி இன்று நாட்டின் 15வது பிரதமராக பதவியேற்றுக் கொள்கிறார். இந்த பதவியேற்பு விழாவில் இலங்கை அதிபர் ராஜபக்சே சிறப்பு விருந்தினராகக் கலந்து கொள்கிறார்.

ராஜபக்சேவை அழைத்ததற்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா, திமுக தலைவர் கருணாநிதி, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ உள்ளிட்ட பல தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர்.

ராஜபக்சே வருகையை கண்டித்து மோடியின் பதவியேற்பு விழாவை முற்றாகப் புறக்கணிக்கிறார் முதல்வர் ஜெயலலிதா. டெல்லியில் கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம் நடத்துகிறார் வைகோ.

இந்நிலையில் ராஜபக்சே வருவதால், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இந்த விழாவில் கலந்து கொள்ளாமல் புறக்கணித்துவிட்டார்.

அவர் இன்று லிங்கா படப்பிடிப்பில் கலந்து கொள்கிறார். முன்னதாக தேர்தல் பிரச்சாரம் செய்ய தமிழகம் வந்த மோடி ரஜினியை அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார். பின்னர் வெற்றி பெற்ற பிறகு தனது பதவியேற்பு விழாவுக்கு வருமாறு அவர் ரஜினிக்கு நேரடி அழைப்பு விடுத்தார், பாஜகவும் அழைப்பிதழ் அனுப்பியது  குறிப்பிடத்தக்கது.

-என்வழி
15 thoughts on “ராஜபக்சே விவகாரம்: மோடி விழாவைப் புறக்கணித்தார் சூப்பர் ஸ்டார் ரஜினி!

 1. Martin

  லதா ரஜினிகாந்த் அவர்கள் கலந்து கொள்கிறார் – டைம்ஸ் டுடே

 2. Martin

  லதா ரஜினிகாந்த் அவர்கள் கலந்து கொள்கிறார்

 3. குமரன்

  இந்த விழாவுக்கு போர்க் குற்றவாளி ராஜபக்செயையும், நமது இரு ராணுவ வீரர்களின் தலையைத் துண்டித்து எடுத்துப்போய் இன்னமும் திருப்பித் தராத பாகிஸ்தான் ஷெரிபையும் மோடி அழைத்தது மிகப் பெரிய கொடுமை.

  அவர் ஆரம்பமே சரியில்லை.

 4. sathya

  புறக்கணிப்பதால் எல்லாம் சரியாகிவிடாது. நமது தலைவர்களுக்கு உண்மையான உணர்வு இருந்தால் அவர் வரும் தருணத்தில் இதை பயன்படுத்தி ஒரு சந்திப்பை ஏற்படுத்தி கொண்டு நேருக்கு நேராக கேள்விகள் கேட்டு தமது உணர்வுகளை தெரிவித்து இருக்க வேண்டும். மறக்க கூடாது நமது இனத்துக்கு ஏற்பட்ட கொடுமைகளை அதே தருணம் நமது இனத்தினர் இன்னும் அங்கே வாழ்ந்து வருகின்றனர். அவர்களின் நல்வாழ்வு நமது குறிக்கோளாக இருக்கவேண்டும். நேரில் சந்தித்து அதற்கு உண்டான வழிகளை உருவாக்கி இருக்கவேண்டும். எத்தனை நாட்கள்தான் இந்த சிறுபிள்ளை தனமான அரசியல் செய்வார்கள்? நமது உணர்வுகளை இப்படியே பகடை காயாகி வைத்து விளையாடுகின்றனர், நாமும் அதற்க்கு பலியாகிறோம்

 5. jegan n

  srilanka Ku pesuravanukga anga poi sanda poda vendiathu tane?::::::::::ethanai nalaiku da ipdi vesam poduvunga ? anga uyiroda irukra tamilargalayavathu nimmathiya iruka vidunga da

 6. Krishna

  அண்டை நாட்டு தலைவர்களை ஆழம் பார்ப்பதற்கு இதை விட சரியான சந்தர்ப்பம் கிடைக்காது. ஆகவே இது நல்லது தான். ராஜபக்ஷே வருவதை ஒட்டி தமிழக மீனவர்களை விடுவிக்க இலங்கை அரசு முடிவு செய்திருப்பதை கவனிக்கவும். மோடி முந்தைய பிரதமர் போல் வேறு ஒருவருக்கு தலையாட்டி பொம்மை இல்லை. அதிலும் தனி மெஜாரிட்டி வேறு இருக்கிறது. அண்டை நாடுகள் இனி நம் நாட்டுக்கு பயந்து தான் ஆக வேண்டும். தவிர சாம – தான – பேத – தண்டம் என்பது தான் உலக வழக்கம். எதுவாக இருந்தாலும் முதலில் நேருக்கு நேர் பேச்சுவார்த்தையில் தான் ஆரம்பிக்க வேண்டும். பேச்சுவார்த்தை ஒத்து வரவில்லை என்றால் தான் மற்ற வழிகளில் போக வேண்டும்.

 7. subash

  true rajini fan from 5th age now crossed 30 … kandavanuku bayanthu modi function la kalantukala neenga ..yen na rajabachae vanthathunaala ……ithu avaru function illa .. modi function india pm function …oru mathipu kudutu athula kalanthukanum…neenga hospital la irrukum pothu vanthu paartha ore nation leader modi thaan ..avaruku nalla mariyatha kuduthinga… ithe srilanga la thamilar saaga karanama iruntha congress .. karuna jaya function na mattum poi front chair la ukarunga ….. pooya neeyum un manasaachiyum … anaiku neenga hospital la irrukum pothu …. ivanungala ungala vanthu paarthanunga….. anaiku modi onnum cm candidate illa

 8. subash

  inaiku ungala ethikura kootam onum unga nalam virubi kidaiyathu …eppovum ungala ethirkura kootam… neenga ena mudivuvu eduthalum atha unga nalam virumburavanga yeethupanga..aporam ethu bayam thalaiva ungaluku… kandavana paarthu…. padam oodanum illa athaan…eanaku theriyum … envazhi congress supported site…. jai hindustan … jaio modi …jai brave rajini….

 9. Sheshank

  The problem is people who don’t know politics wanna talk politics, how is it going to help if you keep building enmity with the neighboring countries? Modi is a great politician he knows the only way to build a strong nation is by converting your neighboring countries an ally! Then you can invest in the nation building as opposed to border strengthening! World is changing we should stop thinking borders and nations and grow to embrace humanity in the world.

 10. boopathi

  ஏன் நம்ப தலைவரை 2016 நடக்கும் தேர்தலில் பிஜேபி முதல் அமைச்சர் ராக தமிழ் நாட்டில் மோடி அவர்கள் அறிவிக்கலாமே ?

  என்ன வினோ நான் சொல்வது ரைட் தானே ?

  அன்புடன்
  பூபதி.க

 11. Manoharan

  ஈழ உணர்வுகளை ரஜினி தூண்டுவதுமில்லை ,அதை வைத்து ஆதாயம் தேடுவதுமில்லை ,ஆனால் சிங்கள நாய்களை நீங்க ஆம்பளைங்களா என்று பொதுமேடையில் கேட்ட ஒரே மனிதர் ரஜினி மட்டுமே….

 12. Krishna

  கீழ்கண்ட செய்தியை பாருங்கள். ராஜபக்சேவுக்கு மோடி மீது ஆத்திரம் போல. இலங்கைக்கு திரும்பி சென்றதும் ஆத்திரத்தில் வீட்டில் இருக்கும் கண்ணாடிகளை உடைத்து இருக்கிறார்.

  http://lankanewsweb.net/news/7729-modi-debased-me-at-swearing-in-president-rages

 13. மிஸ்டர் பாவலன்

  //அவர் படம் புடிசிதுன்ன பாருங்க இல்லேன்னா போயிக்கிட்டே இருங்க.அவ்வவுதான்.// (சுந்தர்)

  நல்ல விளக்கம்! ரஜினி அரசியலுக்கு கண்டிப்பாக வர மாட்டார்!
  ஆனால் கமல்ஹாசன் போல் இதை வெளிப்படையாக அறிவித்தால்
  அவரது படங்களுக்கு வசூல் பாதிக்கப் படலாம் என்பதால்
  தெளிவாக சொல்லாமல் ஒத்திப் போட்டுக் கொண்டு இருக்கிறார்..
  “ஆண்டவன் சொல்றான், அருணாசலம் செய்யறான்” என ரஜினி punch
  dialogue கேட்டு ரசித்து கொண்டு நம் வழி செல்வது யாவர்க்கும் நலம்!
  நன்றி, வணக்கம்!

  -== மிஸ்டர் பாவலன் ==-

 14. banurekha

  அடுத்த பிரதமர் ரஜினி. ரஜினி மனது வைத்தால் இந்தியா அமெரிக்காவை மிஞ்சி வல்லரசாகி விடும்

  நான் ஓட்டு போட ரெடி

 15. linga

  மிஸ்டர் பாவலன் வேற வேலை இருந்த போய் பாருங்க

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *