BREAKING NEWS
Search

சென்னை முழுவதும் ரஜினி பிறந்த நாள் விழா.. நலத்திட்ட உதவிகள்! – ரசிகர்கள் ஏற்பாடு

சென்னை முழுவதும் ரஜினி பிறந்த நாள் விழா.. நலத்திட்ட உதவிகள்! – ரசிகர்கள் ஏற்பாடு

thalaivar-spl-4சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினியின் 64வது பிறந்த நாள் விழா சென்னை நகர் முழுவதும் நான்கு தினங்கள் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.

இந்திய சினிமாவின் மகத்தான கலைஞராக, உலகம் முழுவதும் அறியப்பட்டுள்ள நடிகர் ரஜினிகாந்த் பிறந்த தினம் டிசம்பர் 12-ம் தேதி கொண்டாடப்படுகிறது.

இந்த நாளில் உலகெங்கும் உள்ள ரஜினி ரசிகர்கள் தங்களால் முடிந்த நலத்திட்ட உதவிகளை ஏழைகளுக்கும் மாணவர்களுக்கும் தன்னிச்சையாக செய்து வருகிறார்கள்.

பொதுமக்களும்..

சினிமா, அரசியலுக்கு அப்பால் அனைத்து தரப்பினருக்கும் பொது மனிதராக பார்க்கப்படும் ரஜினியின் பிறந்த நாள் விழாக்களில் பொதுமக்களும் பங்கேற்பது சமீப ஆண்டுகளில் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

கடந்த ஆண்டு 12.12.12 என அபூர்வ தேதியில் ரஜினி பிறந்த நாள் அமைந்ததால் ரசிகர்கள் பெரும் உற்சாகத்துடன் ரஜினி பிறந்த நாளை ஒரு மாதம் முழுக்க பல்வேறு நலத்திட்ட உதவிகளுடன் கொண்டாடினர்.

இந்த ஆண்டு..

இந்த ஆண்டு ரஜினி பிறந்த நாள் 12.12.13 ல் வருகிறது. இந்த மாத தொடக்கத்திலிருந்தே பல்வேறு மாவட்டங்களிலும் ரஜினி ரசிகர் மன்றத்தினர் பிறந்த நாள் விழாக்களை நடத்தி வருகின்றனர்.

தலைநகர் சென்னையில் கடந்த இரு தினங்களுக்கு முன்பே ரஜினி பிறந்த நாள் விழாக்கள் களைகட்டத் தொடங்கிவிட்டன.

பல்வேறு பகுதி ரசிகர்களும் 4 நாட்கள் ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்கள்.

தாம்பரத்தில்

தாம்பரம் பகுதியில் ஊனமுற்றோருக்கு இஸ்திரி பெட்டி, தையல் எந்திரங்களை எம்.எஸ்.முருகன், தாம்பரம் கேசவன், பழக்கடை ஆர்.முருகன் வழங்கினார்கள்.

அண்ணா நகரில்..

அண்ணா நகரில் 64 பேருக்கு வேட்டி, 64 பேருக்கு புடவை, மற்றும் உணவு வழங்கப்பட்டது. அண்ணா நகர் எம்.ரஜினி டில்லி, செனாய் நகர் ஜி.எஸ்.ஸ்ரீகாந்த், அரும்பாக்கம் டி.தாமஸ் இதற்கான ஏற்பாடுகளை செய்தனர்.

நெல்சன் மாணிக்கம் சாலை

நெல்சன் மாணிக்கம் ரோடு ஆஷ நிவாஸ் சிறுவர் இல்லத்தில் 100 பேருக்கு உணவும்

சைதாப்பேட்டையில்..

சைதாப்பேட்டை சுப்ரமணியசாமி கோவிலில் 64 பேருக்கு வேட்டி, 64 பேருக்கு புடவை வழங்கும் நிகழ்ச்சியும் சைதை ரவி, சைதை ஆர்.முருகன், ரஜினி கிரிதரன் ஆகியோர் ஏர்பாட்டில் நாளை நடக்கிறது.

சூளைமேடு

12–ந்தேதி காலை 7 மணிக்கு ராகவ லாரன்ஸ் டிரஸ்ட் குழந்தைகளுக்கு சூளைமேடு ரவிச்சந்திரன், வீரா. ஜி.சம்பத்குமார் ஏற்பாட்டில் அறுசுவை உணவு வழங்கப்படுகிறது.

தி நகர்

தி.நகர் திருப்பதி தேவஸ்தானத்தில் வெங்கடேச பெருமாளுக்கு சிறப்பு பூஜை செய்யப்படுகிறது. தி.நகர் பேப்பர் நியூஸ் சீனு இதற்கான ஏற்பாட்டை செய்துள்ளார்.

வளசரவாக்கம்

வளசரவாக்கம் ரஜினி ரசிகர் மன்றம் சார்பில் நேசம் காப்பகத்தில் வளசை எம்.ஆனந்த், வாஸ்து விநாயகம், சுந்தரபாபு, வி.எஸ்.குமார் ஏற்பாட்டில் அன்னதானம் வழங்கப்படுகிறது.

அம்பத்தூர்

அம்பத்தூர் ரஜினி ரசிகர் மன்றம் சார்பில் கொரட்டூர் சரஸ்வதி அம்மாள் ஆதரவற்றோர் இல்லத்தில் அம்பத்தூர் ஐ.அப்துல்துரைராஜ், மகேஷ், ஆல்பரட் கெனி, ஜி.ரமேஷ், ரஜினிமூர்த்தி ஆகியோர் உணவு வழங்குகிறார்கள்.

ரசிகர்களின் சொந்தப் பணம்

இந்த பிறந்த நாள் விழாக்களுக்கான அனைத்து செலவுகளும் ரசிகர்கள் மற்றும் பொதுமக்களுடையதே. ‘ஏழைகளுக்கு உதவி செய்ய வேண்டும் என்ற எண்ணமிருக்கிறதா.. அதை உங்கள் செலவிலே செய்துவிடுங்கள். என் பிறந்த நாள் அதற்கொரு காரணமாக அமைவதில் மகிழ்ச்சிதான்’, என ரஜினி ஏற்கெனவே ரசிகர்களுக்கு அறிவுரை கூறியுள்ளது நினைவிருக்கலாம்.

-என்வழி ஸ்பெஷல்
6 thoughts on “சென்னை முழுவதும் ரஜினி பிறந்த நாள் விழா.. நலத்திட்ட உதவிகள்! – ரசிகர்கள் ஏற்பாடு

 1. suresh kumar.s

  எங்கள் அன்பு தலைவர் அண்ணன் சூப்பர் ஸ்டார் ரஜினி பிறந்தநாள் வாழ்த்துக்கள் .வாழ்க பல்லாண்டு வாழ்த்த வயதில்லை வணங்குகிறோம்
  என்றும் உங்களின் அன்பு ரசிகர்கள்
  admin@vellorerajinifans.com,e-fans welfare association, Gandhi road, Vellore 632 001

 2. sidhique

  அன்புள்ள ரஜினி அய்யா அவர்களுக்கு,

  காலம் கடந்து கொண்டே செல்கிறது …. !

  இப்பொழுது உதித்த …ஆம் அத்மி …கட்சிக்கே இவளவு வரவேற்பு என்றால் …மக்கள் நம்பிக்கைக்கு காலம் காலமாய் …பாத்திரமாய் இருக்கும் உங்களுக்கு????

  நமக்கு அரசியல் தேவை இல்லை ….ஆனால் ரஜினி இயக்கம் போதும் ..!

  “காலம் பொன் போன்றது ..கடமை கண் போன்றது …” தமிழக மக்களுக்காக நீங்கள் சொல்லி …செய்ய வேண்டிய … கடமை கடனை .. உணர்ந்து.. உங்கள் மக்கள் பனி விரைவில் … விஸ்வரூபம் எடுக்க என் வேண்டுகோளுடன் …. திரு.அன்பு ரஜினி அவர்களுக்கு என் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *