BREAKING NEWS
Search

உற்சாகத்தின் உற்சவமே… உன்னையெழுதும் வரலாறு!

மூன்றெழுத்துச் சூரியனே… – ரஜினிக்கு அமெரிக்க தமிழ் பெண் கவிஞரின் வாழ்த்து

lingaa-rajini-latest-stills2-60

மூன்றெழுத்தில்  முழு சூரியனே!
முழு நிலவினொளி மன்னவனே!
பித்தாக்கும்  நடை  வித்தகனே!
முத்தான  புதுத்  தத்துவனே!
படபடப் பேச்சில்
பட்டாம்பூச்சியாய்…
கடகடச் சிரிப்பில்
கட்டிப்போடும்…
குட்டிக் கதை சொல்லும்
புதுவத் கீதனே!

சிந்திப்பதின் அழுத்தம்
சிரிப்பில் கூட உதிக்கும்!
நட்பில் காட்டும் உருக்கம்
கற்பை போலச் சிறக்கும்!
ஆழப் பதியுமுன்னுள்
அனுபவங்கள்! அவை
ஆழப்பதிக்குமெம்முள்  புதுத்துவங்கள்!
ஆர்ப்பரிக்கும் அலைகளில்லா
ஆழக்கடல்….
நீ ….
செல்லும் பாதைகள்
சொல்லும் பல கீதைகள்!
ஆன்மீக வெளிச்சம்
நேர்மையின் உச்சம்
பார்வையில் சுத்தம்
எதிர்ப்புகள் துச்சம்
வெற்றிகள் மொச்சும்
போற்றிகள் கொஞ்சும்
உந்தன் இதயம் தான்
ரசிகர்தன் இமயம்!
உற்சாகத்தின் உற்சவமே
உன்னையெழுதும் வரலாறு…
இமயம் என்ன? – உன்
உதயம் மட்டும் போதும்!
இதயம் வாழ்த்திப்பாடும்!

தலைவா!  நீ…
ஆளுயர மாலையிலும்
அர்த்தப்படும் எளிமை
6 முதல் 60 வரை
ஆசைப்படும் புதுமை!
புதியதோர் ஆண்டில் புறப்படும் ராஜா லிங்கேஸ்வரனே!
புண்ணியப்படக் காத்திருக்கும்
பாதைகள் பல…

-மகிழ்வுடன்

மகித்ரா




2 thoughts on “உற்சாகத்தின் உற்சவமே… உன்னையெழுதும் வரலாறு!

  1. murugan

    அன்புச்சகோதரி மகித்ரா அவர்களுக்கு
    அருமையான கவிதை
    தலைவரின் ரசிகர்கள் சார்பாக எங்களின் மனமார்ந்த நன்றிகள் !!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *