BREAKING NEWS
Search

ரசிகனுக்கே ரசிகனான சூப்பர் ஸ்டார்… அதான் ரஜினி!

ரசிகனுக்கே ரசிகனான சூப்பர் ஸ்டார்… அதான் ரஜினி!

rajini1
க்கீரனில் அந்தக் கட்டுரையைப் படித்த அத்தனைப் பேருக்குமே நெகிழ்ச்சி, வியப்பு…

இப்படி ஒரு ரசிகர்… அந்த ரசிகரை ரசித்து மரியாதை செய்த இத்தனை அரிய சூப்பர்ஸ்டார்.. இப்படியெல்லாம் கூட நடக்குமா? என்று கேட்டுக் கொண்டனர்.

அந்தக் கட்டுரை இதோ…

தமிழ் சினிமா ரசிகர்களால் கொண் டாடப்படும் ரஜினியை இதுவரை யாரும் பார்த்திராத கோணத்தில் பார்க்கின்ற வாய்ப்பு கிடைத்தது அவரது வெறித்தனமான ரசிகர் ரஜினி பாலாவுக்கு. ஒரு குழந்தை போல் ரஜினியும் குதூகலித்த அந்த தருணத்தில் நாமும் அங்கிருந்தோம்.

சென்னை வியாசர்பாடி உதயசூரியன் நகரைச் சேர்ந்த இளைஞர் ரஜினி பாலா. ரஜினி யின் ரசிகர் மட்டுமல்ல, வெறியன் மட்டுமல்ல, அதற்கும் மேலே. ரஜினியைப் பார்க்கலாம் வா என யார் கூப்பிட்டாலும் அவர்களுடன் கிளம்பிவிடுவார். வீட்டில் சதா நேரமும் ரஜினி படம் பார்ப்பது, ரஜினியைப் போல் நடை, உடை, பாவனை, பேச்சு, இப்படி ரஜினியே மூச்சென இருக்கும் ரஜினி பாலா வுக்கு வயது 36. ஆனால் செயல்பாடுகள் எல் லாமே ஒரு குழந்தை யைப் போல்தான்.

“நாலு வயசு வரைக்கும் நல்லாத்தான் இருந்தான். திடீர்னு மூளைக் காய்ச்சல் தாக்கி இப்படி ஆகிட்டான். ஆனா அவனுக்கு ரஜினி அய்யா மட்டும்தான் தெரியும். ரஜினி அய்யா உடல்நலம் பாதிக்கப் பட்டப்ப, இவன் தற் கொலை பண்ணிக்கப் போய்ட்டான். ரஜினி அய்யா மாத்திரை கொடுத்து விட்டார்னு சொன்னாத்தான் மாத்திரை சாப்பிடுவான். ரஜினி அய்யாவை நேரில் ஒரு முறையாவது பார்த்துடணும்கிறதுதான் லட்சியம், கனவு எல்லாமே. ஆனா அது நடக்குமான்னு தெரியல..’’ ரஜினிபாலாவின் தாய் பானுமதியின் இந்த ஏக்கத்தை “கிடைக்குமா ரஜினி தரிசனம்? -ஏங்கும் ஓர் உயிர்!’ என்ற தலைப்பில் கட்டுரையாக வெளியிட்டிருந்தோம்.

கடந்த செவ்வாய் மாலை நமக்கு ரஜினி வீட்டிலிருந்து அழைப்பு வந்தது. உடனே ரஜினி பாலா குடும்பத்தாருக்கு விஷயத்தைச் சொன்னோம். மகிழ்ச்சியில் திக்குமுக்காடியது அந்தக் குடும்பம். புதன் காலை 10 மணிக்கே ரஜினியின் போயஸ் கார்டன் வீட்டில் ஆஜரானோம். ரஜினிபாலா வருவதற்கு சற்று தாமதமாகிவிட்டது. சரியாக 10.28-க்கு இண்டர்காம் லைனில் வந்து ‘அந்தப் பையன் வந்துட் டாரா?’ என உதவியாளர் சுப்பையாவிடம் விசாரிக்கிறார் ரஜினி.

rajini-fan1 (1)

“இல்ல சார், நக்கீரன்லருந்து வந்துட்டாங்க. அந்தப் பையன் அண்ணா மேம்பாலத் துக்கிட்ட வந்துக்கிட்டிருக்கான்னு தகவல் சார்’’ என்கிறார். மீண்டும் 10.40-க்கு ரஜினி விசாரிப்பதற்கும் ரஜினிபாலா குடும்பம் வருவதற்கும் சரியாக இருந்தது.

“தம்பி உனக்காக சார் காத்துக்கிட்டிருக்காரு” என்று சொல்லியபடி, ரஜினிபாலாவுக்கும் அவரது தாயாருக்கும் மோர் கொடுத்து உபசரிக்கிறார் சுப்பையா. சில நிமிடங்கள் கரைகிறது… கதவைத் திறந்து கொண்டு மின்னலென அந்த ஹாலுக்குள் பிரவேசிக்கிறார் ரஜினி.

“கண்ணா எப்படி இருக்க?” என கேட்டபடியே ரஜினிபாலாவை கட்டி அணைக்கிறார் ரஜினி.

“தலைவா…’’ எனக் கூறியபடி சடாரென ரஜினியின் காலில் விழுகிறார் ரஜினி பாலா. மகிழ்ச்சியில் அதிர்ச்சியாகி நின்ற ரஜினி பாலாவின் தாய் பானுமதிக்கு இந்தக் காட்சியை நம்பவே முடியவில்லை.

ரஜினி பாலாவை தூக்கி நிறுத்திய ரஜினி, “உட்காரு கண்ணா…’’என்றவாறு தன் அருகில் உட்கார வைக்கிறார். “வெளியில நிக்கிறவங்களை உள்ள வரச்சொல்லுங்க” என ரஜினி சொல்லியதும், ரஜினிபாலாவின் தங்கை மற்றும் உறவினர்கள் உள்ளே அழைத்து வரப்படுகிறார்கள்.

“தம்பிக்கு வயசு என்ன, ஏன் இப்படி ஆயிட்டான்” என அக்கறையாக ரஜினிபாலாவின் தாயாரிடம் விசாரித்துவிட்டு, “அந்த ஷாலை கொடுங்க’’என தன் உதவியாளரிடம் சால்வையை வாங்கி ரஜினிபாலாவுக்குப் போர்த்தி தன்னுடைய வெறித்தனமான ரசிகனை கவுரவிக்கிறார் ரஜினி.

சடாரென சேரிலிருந்து எழுந்து ரஜினியின் முன்பு தரையில் உட்கார்ந்து, “அண்ணாமலை’ பாம்பு சீன், துள்ளிக் குதித்து எழுந்து “பாட்ஷா’ ஸ்டைல், விசுக்கென ஆள்காட்டி விரலை ஆட்டி “ஆண்டவன் சொல்றான், அருணாச்சலம் செய்றான்’ என விதம் விதமாக நடித்துக் காட்டுகிறான் ரஜினிபாலா. எல்லாவற்றையும் குழந்தை போல் கைதட்டி ரசித்து, வாய் விட்டுச் சிரித்து மகிழ்கிறார் ரஜினி. அடுத்து கிஃப்ட் பாக்ஸ், ஸ்வீட் பாக்ஸ், கையடக்க ரஜினி சிலை ரஜினிபாலாவுக்கு ரஜினி கொடுக்க, கண்ணீரைக் கட்டுப்படுத்த முடியாமல் நெக்குருகுகிறது குடும்பம்.

“அய்யா ஒங்க பேரைச் சொன்னாத்தான்யா மாத்திரை சாப்பிடுறான்” என ரஜினிபாலாவின் தங்கை கூறியதும், “கண்ணா மாத்திரயை ஒழுங்கா சாப்பிடணும், அம்மாகிட்ட நான் விசாரிப்பேன்… என்ன சரியா?” என்றதும் “இனிமே ஒழுங்கா சாப்பிடுவேன்’’என மழலை மொழியில் சொல்கிறான் ரஜினிபாலா.

“பார்த்து பத்திரமா கூப்பிட்டுப் போங்க’’என உள்ளத்திலிருந்து வருகிறது ரஜினியின் வார்த்தகள்.

“அவரை நேரில் பார்த்துட்டான் என் மகன். இனிமே அவன் குணமாயிருவான்கிற நம்பிக்கை வந் திருச்சு,” என்றார் ரஜினி பாலாவின் தாய் பானுமதி.

கட்டுரை – படங்கள்: நக்கீரன்
12 thoughts on “ரசிகனுக்கே ரசிகனான சூப்பர் ஸ்டார்… அதான் ரஜினி!

 1. குமரன்

  சில மகத்தான மனிதர்கள் குறித்துப் பலரும் கேட்கும் கேள்வி.:

  இவர் கிட்ட என்ன இருக்குன்னு இப்பிடி இவர் பின்னாலே அலையிறாங்க?

  உண்மையான நிலையை உணராதவர்கள் அப்படித்தான் கேட்பார்கள்.

  ஒவ்வொரு மகத்தான மனிதரிடமும் அவரவருக்கே உரித்தான சிறப்பான குணம் ஒன்று இருக்கும், எம்.ஜி.ஆரிடம் இருந்த வள்ளல்தன்மை, கருணாநிதியிடம் இருக்கும் கடின உழைப்பும், அறிவார்ந்த சிந்தனையும் போல நமது தலைவரிடமும் எளிமை, அடக்கம், எவரிடமும் கனிவான பண்பான நடத்தை, உள்ளார்ந்த கலப்படமில்லாத அன்பு எனத் தனித்துவம் மிக்க குணங்கள். ரஜினியை நடிகர் என்ற நிலை தாண்டி, சிறந்த மனிதர் என்ற நிலையிலேயே அனைவரும் பார்க்கின்றனர், அனுபவிக்கின்றனர், அதுதான் அவரது மகத்துவம்.

  ஆறுமனமே ஆறு என்று ஒரு சிவாஜி படப்பாடல், அதில் வரும் ஒரு வரி நமது தலைவர் பற்றி நினைக்கும் போதெல்லாம் மனதில் தோன்றும்.

  நிலை உயர்ந்தபோதும் பணிவு கொண்டால் உலகம் உன்னை வணங்கும்..

  கவிஞரின் சத்திய பூர்வமான இந்த வரியை நித்தமும் நிரூபிப்பவர் ரஜினி!

 2. Rajagopalan

  Thanks for this news… Iam little egoistic because i told in a comment to put this news…

  🙂

 3. anbudan ravi

  இரவு முழுதும் கண் விழித்து (என் தவறுதான்) பார்த்து கிரிக்கெட்டில் இந்தியா தோல்வி என்றதால் சற்று மன உளைச்சலோடு இருந்தேன்…..நம் என்வழியில் என்ன செய்தி என்று இணையத்தை தட்டினால் இப்படி ஒரு செய்தி. படிக்க படிக்க கண்கள் குளமாகிவிட்டன, மனதும் இலகுவாகிவிட்டது. தலைவரின் மனித நேயத்திற்கு இது ஒரு சிறிய எடுத்துக்காட்டு. வெளியே தெரியாத இன்னும் பல வெளிவராத செய்திகள் நிறைய இருக்கிறது. சகோதரர் ரஜினிபாலா விரைவில் குணமடைய வேண்டும். அவரது குடும்பமும் அனைத்து வளமும் பெற வேண்டும்.

  வினோ அவர்களே, ரஜினிபாலாவின் முகவரியோ அல்லது அவரது வங்கி கணக்கோ தெரிந்தால், அவரின் குடும்பம் வறுமையில் இருந்தால், அவருக்கு என்னால் முடிந்த சிறு உதவியை செய்வேன்.

  அன்புடன் ரவி.

 4. Rajagopalan

  Hearth broken after seing India losing ….
  This is not the place to put this… But cant control my feelings….

 5. Radha Ravi

  சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்கள் ஒரு மகான். ஒரு சித்தர். நடமாடும் கடவுள் தலைவர் ரஜினி அவர்கள். ரஜினியை நான் தமிழ் கடவுளாகவே பார்கிறேன்.

 6. Arun

  இதனால் தான் இவரை தலைவர் என்கிறோம்.

 7. KUMARAN

  கடந்த வருடமே இந்த பையனை பற்றி கேள்விபட்டிருக்கேன் ( என் கண்ணில் நீர் )

 8. murugan

  தலைவா
  உங்களுக்கு ரசிகனாய் இருப்பதில் பெருமையும் கர்வமும் கொள்கிறோம் !!!
  நண்பர் ரஜினி பாலா அவர்கள் விரைவில் குணமடைய தலைவரை போல் நாமும் எல்லாம் வல்ல இறைவனை வேண்டுவோம் !!!

 9. S.dhinesh kumar

  Vino anna shankar direction la rajini kamal nadika porangalam maalai malar newsla parthan உண்மையாவா நீங்க சொல்லுங்க Anna please

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *