BREAKING NEWS
Search

நடிகர் சங்க உண்ணாவிரதம் – வந்துவிட்டார் சூப்பர் ஸ்டார் ரஜினி!

உண்ணாவிரதம் – வந்துவிட்டார் சூப்பர் ஸ்டார் ரஜினி!

DSC_9379
சென்னை: நடிகர் சங்க உண்ணாவிரதத்தில் கலந்து கொண்டார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.

ஈழத் தமிழர்களுக்காக நடிகர் சங்கம் அறிவித்த உண்ணாவிரதம் இன்று காலை தொடங்கியது. அஜீத், சூர்யா, கார்த்தி, சிவகுமார், பிரபு உள்ளிட்ட நடிகர்கள் இதில் கலந்து கொண்டுள்ளனர்.

ஏற்கெனவே அறிவித்தபடி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பகல் 11.30 மணிக்கு உண்ணாவிரதப் பந்தலுக்கு வந்தார். வெள்ளைச் சட்டை, கருப்புக் கண்ணாடி அணிந்து காட்சி தந்தார்.

கமலும் விரைவில் வருவார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

முன்னணி நடிகைகளில் தன்ஷிகா வந்துள்ளார். ராதிகா சரத்குமார், ஊர்வசி, அம்பிகா, நளினி ஆகிய பழைய நடிகைகளும் வந்துள்ளனர்.

சென்னை, தியாகராய நகர், நடிகர் சங்க வளாகத்தில், காலை 9 மணிக்கு சரத்குமார் தலைமையில் உண்ணாவிரதம் தொடங்கியது.

Rajini-pc-book-envazhi4

பகல் 11 மணி வரை பங்கேற்ற நடிகர்கள் விவரம்:

நடிகர்கள் ராதாரவி, வாகை சந்திரசேகர், சிவகுமார், அஜித், சூர்யா, கார்த்தி, தனுஷ், பிரசாந்த், சத்யராஜ், பிரகாஷ்ராஜ், பிரபு, விக்ரம் பிரபு, அருண் விஜய், கே. பாக்யராஜ், வி.எஸ். ராகவன், எஸ்.வீ. சேகர், கருணாஸ், பவர் ஸ்டார் சீனிவாசன், டெல்லி கணேஷ், விஜயகுமார், பாண்டியராஜன், பெப்ஸி விஜயன், தலைவாசல் விஜய், கே. ராஜன், ஹரிகுமார் மன்சூரலிகான், நிழல்கள் ரவி,  எம்.எஸ். பாஸ்கர் உள்ளிட்டோர் கலந்து கொண்டு பேசி வருகின்றனர்.

-என்வழி செய்திகள்

மேலும் படங்களுக்கு…




3 thoughts on “நடிகர் சங்க உண்ணாவிரதம் – வந்துவிட்டார் சூப்பர் ஸ்டார் ரஜினி!

  1. Ravi. S

    தலைவரின் ஆதரவு மட்டும் போதும். தலைவா உண்ணா நோன்பு இருக்க வேண்டும். உடல் நலன் தான் முக்கியம். தனி ஈழம் நிச்சயம் ஒரு நாள் மலரும். தலைவர் ரஜினியின் ஆசிர்வாதத்தில் இலங்கையில் புது விடியல் பிறக்கட்டும்.

  2. Anandh

    லட்சம் பேர் வந்தாலும் தலைவர் ஒருவர் வந்தால் மட்டும் தான் உண்ணாவிரதம் நிறைவுபெறும்…
    தலைவா…

  3. srikanth1974

    இன்னும் என்ன தலைவா யோசனை?
    இனி தாங்கள் செய்யப் போவதெல்லாம் சாதனை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *