BREAKING NEWS
Search

கமல் பிறந்த நாள் பார்ட்டியில் சூப்பர் ஸ்டார்!

கமல் பிறந்த நாள் பார்ட்டியில் சூப்பர் ஸ்டார்!


கமல் ஹாஸனின் பிறந்த நாள் பார்ட்டியில் பங்கேற்று, இரண்டு மணி நேரம் அவருடன் இருந்தாராம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.

நேற்றுமுன் தினம் தனது 58 வது பிறந்தநாளை ‘விஸ்வரூபம்’ ட்ரெயிலர் வெளியீட்டு விழாவுடன் கொண்டாடினார் கமல். அன்று இரவு தனக்கு மிகவும் நெருக்கமான நண்பர்களுக்கு மட்டும் ஒரு விருந்துக்கு ஏற்பாடு செய்திருந்தார்.

கமலின் நெருக்கமான நண்பர்கள் என்றால் அங்கே சூப்பர் ஸ்டார் இல்லாமலா?

விருந்தில் பாடகர்கள் ஸ்ரீராம், ஸ்ரீலேகா பார்த்தசாரதி, ஸ்ரீனிவாஸ் ஆகியோர் கமல் பட ஹிட்களை பாடினர்.

பத்து மணிக்கு பார்ட்டிக்கு வந்தாராம் ரஜினி.  வழக்கம்போல் வந்த வேகத்தில் மின்னலாக மறைந்துவிடாமல், சுமார் இரண்டு மணிநேரம் கமலுடன் இருந்து பழைய நினைவுகளைப் பேசி அவரை நெகிழ வைத்தாராம்.

அடுத்து இரவு 12 மணியளவில் பிரம்மாண்டமான பிறந்த நாள் கேக்கை வெட்டினார்.

கமலின் ‘ஹேப்பி பர்த் டூ யூ’ பாடலை எஸ்.பி.பி பாட, சூப்பர் ஸ்டாரும் மற்ற பாடகர்களும் அவருடன் சேர்ந்து பாட, ரஜினியை கட்டி அணைத்து பரவசப்பட்டாராம் கமல்!

‘கண்ணா எதிரின்னா வேட்டு. நண்பன்னா பாட்டு’- இதான் நம்ம சூப்பர் ஸ்டாரோட வழி!




4 thoughts on “கமல் பிறந்த நாள் பார்ட்டியில் சூப்பர் ஸ்டார்!

  1. r.v.saravanan

    கண்ணா எதிரின்னா வேட்டு. நண்பன்னா பாட்டு’

    ஹாய் இது நல்லாருக்கே

  2. sellanarayanan

    தல போல வருமா ரஜினி என்றும் ரஜினிதான் உலகில் ஆயிரம் நட்சத்திரங்கள் இருந்தாலும் மின்னும் நட்சத்திரம் இவர் மட்டும் தானே

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *