BREAKING NEWS
Search

கோச்சடையானில் ரஜினியின் மூன்று நிமிட ருத்ர தாண்டவம்!

கோச்சடையானுக்காக சென்னை வந்த தீபிகா!

ன்ன ஆனாலும் சரி தீபிகா படுகோன் என் படத்தைமுடித்துக் கொடுத்தே தீர வேண்டும் என்று இந்தித் தயாரிப்பாளர் நெருக்கடி கொடுத்தாலும், அலட்டிக் கொள்ளாமல் சென்னைக்கு வந்து போனார் கோச்சடையான் நாயகி தீபிகா படுகோன்.

கோச்சடையான் படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு ஜோடியாக நடிக்கும் தீபிகா, அதற்கான போட்டோ ஷூட்டில் நேற்று முன்தினம் பங்கேற்றார்.

அப்போது அவரது தோற்றம் ஸ்கேன் செய்யப்பட்டது.

படத்துக்காக, ஸ்கின்டோன் உட்பட தீபிகாவின் தோற்றத்தை நவீன டெக்னிக்கை பயன்படுத்தி மாற்றம் செய்கின்றனர். அனைத்து நடிகர்களின் நடிப்புமே பர்மார்மன்ஸ் கேப்சரிங் என்ற புதிய தொழில்நுட்பத்தில் படமாக்கப்படுகிறது.

கோச்சடையானில் ரஜினியின் மூன்று நிமிட ருத்ர தாண்டவம்!

கோச்சடையானின் ஹைலைட் சூப்பர் ஸ்டார் ரஜினியின் மூன்று நிமிட ருத்ர தாண்டவ காட்சிதான் என இப்போதே பேச ஆரம்பித்துவிட்டனர்.

சிவபெருமான் போல ஆக்ரோஷமாக, ரஜினி நடனமாடும் இந்த மூன்று நிமிட காட்சிக்கு சிவசங்கர் மாஸ்டர் நடனம் அமைக்கிறார்.

மார்ச் முதல் வாரத்தில், பாடல் காட்சிகளைப் படமாக்க லண்டன் செல்கின்றனர் கோச்சடையான் உள்ளிட்ட குழுவினர்.

அந்த ருத்ர தாண்டவத்தின் ஒரு காட்சிதான் படத்தின் முதல் ஸ்டில்லாக வெளிவந்தது.

-என்வழி ஸ்பெஷல்




3 thoughts on “கோச்சடையானில் ரஜினியின் மூன்று நிமிட ருத்ர தாண்டவம்!

  1. sathish

    தலைவா உன் ருத்ர தாண்டவம் காண ஆசை,,சீக்கிரம் வா தலைவா

  2. கணேசன் நா

    தலைவா உன் ருத்ர தாண்டவம் காண ஆசை,,சீக்கிரம் வா தலைவா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *