BREAKING NEWS
Search

ரஜினி சார் என்னைப் பாராட்டியது வாழ்நாளில் மறக்க முடியாதது! – நடிகை ரித்விகா

ரஜினி சார் என்னைப் பாராட்டியது வாழ்நாளில் மறக்க முடியாதது! – நடிகை ரித்விகா

kabali4பாலாவின் பரதேசி படத்தில் அறிமுகமான ரித்விகாவுக்கு, மெட்ராஸ் படத்தில் நல்ல பாராட்டும் புகழும் கிடைத்தது.

இப்போது கபாலி படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பு அவருக்குக் கிடைத்துள்ளது. அதுமட்டுமல்ல, படத்தில் அவரது நடிப்பைப் பார்த்து ரஜினி பாராட்டு தெரிவித்திருக்கிறார். இதனை ஊடகங்களில் சொல்லிச் சொல்லி மகிழ்ந்து வருகிறார் ரித்விகா.

நான்காவது படத்திலேயே ரஜினியுடன் நடிக்கும் வாய்ப்பைப் பெறுவது சாதாரண விஷயமா என்ன… அந்த சந்தோஷத்தை அவர் இப்படிப் பகிர்ந்து கொண்டிருக்கிறார்.

rithvika-photos-1-large“ரஜினி சாரும், நானும் இணைந்து நடித்த காட்சிகள் சமீபத்தில் சென்னையில் மூன்று நாட்கள் படமாக்கப்பட்டது.

முதலில், அவர் முன் நடிக்கும்போது எனக்கு பயமாக இருந்தது. ஆனால், அவருடைய எளிமையை பார்த்ததும், அவருடன் நடிப்பதில் ரொம்பவும் சிரமம் இல்லை என்பதைப் புரிந்து நடித்தேன்.

படப்பிடிப்பு முடிந்ததும், என்னுடைய நடிப்பைப் பாராட்டினார். நான் இதை எதிர்பார்க்கவே இல்லை. நாம் ரொம்பவும் நெகிழ்ந்துபோனேன். இந்த தருணத்தை என்னுடைய வாழ்க்கையில் மறக்கவே மாட்டேன்,” என்றார் ரித்விகா.

-என்வழி




One thought on “ரஜினி சார் என்னைப் பாராட்டியது வாழ்நாளில் மறக்க முடியாதது! – நடிகை ரித்விகா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *