BREAKING NEWS
Search

ஒரிஜினல் தாடி… சூப்பர் ஸ்டார் ரஜினியின் சந்தோஷம்!

ஒரிஜினல் தாடி… சூப்பர் ஸ்டார் ரஜினியின் சந்தோஷம்!

11953035_913968508650784_6897403340055493618_n

தாடியுடன் நடிப்பதென்றால் தலைவர் ரஜினிக்கு தனி உற்சாகம். “அதென்னமோ தாடியோட இருக்கும்போது, ஒரு கூடுதல் பவர் இருப்பது போல நம்பிக்கை.. இருந்துட்டுப் போகட்டுமே” என்று அவர் சந்திரமுகி வெற்றி விழாவில் கூறியதை நினைவுபடுத்திக் கொள்ளுங்கள்.

இப்போது கபாலியில் மீண்டும் சொந்த தாடியுடன் நடிக்கிறார். இதனை தயாரிப்பாளர் தாணுவிடம் சொல்லி சந்தோஷப்பட்டாராம் ரஜினி.

பொதுவாக விக் வைத்துக் கொள்வதை விரும்பாதவர் ரஜினி. கொடி பறக்குது படத்துக்காக விக் வைத்து நடித்தபோது இதை பத்திரிகை பேட்டிகளில் தெரிவித்திருந்தார். ஆனால் இப்போது அவர் விக் வைத்தே தீர வேண்டிய கட்டாயம்.

இப்போது கபாலி படத்துக்காக சொந்த தாடியுடன் நடிக்கிறார். “இத்தனை ஆண்டுகளில் சொந்தத் தாடியுடன் வள்ளியில் நடித்தேன். பாட்ஷாவில் சில காட்சிகள் மட்டும். ஆனால் இந்த அளவு தாடி வைத்து நடிப்பது இதுதான் முதல் முறை,” என்று தயாரிப்பாளர் தாணுவிடம் கூறினாராம் ரஜினி.

கபாலி படத்தின் முதல் கட்டப்படப்பிடிப்பு முதலில் சென்னையில் தொடங்குகிறது. பிறகு மலேசியா பயணமாகிறார்கள் படக் குழுவினர்.

கபாலி ஷூட்டிங் ஆகஸ்ட் முதல் வாரத்தில் மலேசியாவில் தொடங்கும் என முதலில் அறிவித்திருந்தனர். ஆனால் விசா மற்றும் மலேசிய அரசியல் போன்ற சில காரணங்களுக்காக ஒரு மாதம் தள்ளிப் போட்டனர்.

இப்போது முதல் பத்து நாட்கள் படப்பிடிப்பை சென்னையிலும், அதன் பிறகு மீதிப் படப்பிடிப்பை மலேசியாவிலும் நடத்த முடிவு செய்துள்ளனர்.

ரஞ்சித் இயக்கும் இந்தப் படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.

என்வழி




2 thoughts on “ஒரிஜினல் தாடி… சூப்பர் ஸ்டார் ரஜினியின் சந்தோஷம்!

  1. srikanth1974

    வெள்ளை மனம் கொண்ட – எங்கள்
    வெண்தாடி வேந்தனே! விரைந்து வா
    வெற்றிக்கொடி நாட்ட.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *