BREAKING NEWS
Search

20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அதே கட்டுடலோடு காட்சி தரும் சூப்பர் ஸ்டார் ரஜினி!


சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் ‘தர்பார்’ படத்தின் 2-வது லுக் போஸ்டரை லைக்கா நிறுவனம் வெளியிட்டது. இது ரசிகர்கள் மத்தியில் கடந்த இரு தினங்களாக வைரலாகி வருகிறது.

ரஜினிகாந்த் – ஏஆர் முருகதாஸ் கூட்டணியில் உருவாகி வரும் ‘தர்பார்’ படத்தின் 3-ம் கட்ட படப்பிடிப்பு மும்பையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தில் ரஜினி என்கவுன்டர் சிறப்பு போலீசாகவும், தாதாவாகவும் இரட்டை வேடத்தில் நடிப்பதாக சமீபத்தில் தகவல் வெளியாகியுள்ளது.

இதில் ரஜினிக்கு மகளாக நிவேதா தாமஸ் நடிக்கிறார். சந்திரமுகி, குசேலன் படங்களுக்குப் பிறகு ரஜினிக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். இந்த படத்தின் தொடக்கத்திலேயே தர்பார் என்ற தலைப்புடன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை ரிலீஸ் செய்துதான் ஷூட்டிங்கை தொடங்கியது படக்குழு.

இதனை அடுத்து ஷூட்டிங்கில் இருந்து ரஜினியின் பல புகைப்படங்கள் கசிந்து கொண்டே இருந்தன. இதனால் படக்குழு இரண்டு நல்ல புகைப்படங்களை வெளியிட்டு ஃபர்ஸ்ட் லுக்கை உருவாக்குங்கள் என்று ரசிகர்களுக்கு அறிவுறுத்தியது.

இந்நிலையில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு தர்பார் படத்தின் செகண்ட் லுக்கை வெளியிட இருப்பதாக லைகா நிறுவனம் அறிவித்தது.

 

இந்த நிலையில் இன்று மாலை ஆறு மணிக்கு நடிகர் ரஜினியின் ‘தர்பார்’ படத்தின் 2-வது லுக் போஸ்டரை லைக்கா நிறுவனம் வெளியிட்டது. படையப்பா படத்தில் சட்டையில்லாமல் தனது கட்டுடலைக் காட்டியபடி ரஜினி ஒரு போஸ் தருவார். அதே போன்ற தோற்றத்தில் ரஜினி இந்தப் படத்தில் காட்சி தருகிறார். படையப்பா வெளியானது 1999ம் ஆண்டு. அப்போது ரஜினிக்கு வயது 48. கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்குப் பிறகு தனது 68வது வயதில் அதே போன்ற கட்டுடலோடு திரையில் காட்சி தருகிறார் ரஜினிகாந்த்.

தர்பார் திரைப்படம், வரும் ஜனவரி 14-ம் தேதி, பொங்கலுக்கு திரைக்கு வருகிறது. இதனை இரு தினங்களுக்கு முன் ரஜினியே உறுதி செய்துள்ளார்.

– என்வழி




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *