BREAKING NEWS
Search

ஜூன் 10-ம் தேதி சூப்பர் ஸ்டார் ரஜினியின் புதிய படம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

ஜூன் 10-ம் தேதி சூப்பர் ஸ்டார் ரஜினியின் புதிய படம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

rajini_2419917f

லைப்புலி தாணு தயாரிப்பில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் புதிய படத்தின் அறிவிப்பு வரும் ஜூன் 10-ம் தேதி வெளியாகும் என்று கூறப்படுகிறது.

லிங்கா படத்துக்குப் பிறகு தலைவர் ரஜினி நடிக்கும் புதிய படம் குறித்து கடந்த மூன்று மாதங்களாக பல்வேறு செய்திகள் வந்தவண்ணம் உள்ளன.

ரஜினி அடுத்த மூன்றாண்டுகளில் அடுத்தடுத்து மூன்று படங்களில் நடிக்கப் போவதாகவும், அதற்கான இயக்குநர்களையும் தயாரிப்பாளர்களையும் அவர் முடிவு செய்துவிட்டார் என்றும் கூறப்பட்டது.

முதலில் அவர் கலைப்புலி தாணுவுக்கு ஒரு படம் நடித்துத் தரப் போகிறார் என்றும், அந்தப் படத்தை மெட்ராஸ் ரஞ்சித் இயக்குவார் என்று செய்தி வெளியானது. ஆனால் படு ரகசியமாக இருந்த இந்த செய்தி ஒரு நாள் திடீரென கசிந்துவிட்டது.

எனவே அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடுவதைத் தள்ளி வைத்தனர். இதற்கிடையில் லிங்கா படப் பிரச்சினை தொடர்ந்து கொண்டிருப்பதால், அது சுமூகமாகவோ, சட்ட ரீதியாகவோ முடியும் வரை காத்திருக்குமாறு கூறிவிட்டார் ரஜினி.

இப்போது வரும் ஜூன் 10-ம் தேதி ரஜினி – ரஞ்சித் படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என தெரிய வந்துள்ளது. ஜூலை மாதத்திலிருந்து படப்பிடிப்பு தொடங்கும் என்கிறார்கள்.

இந்தப் படத்தில் மலேசியாவைச் சேர்ந்த டான் வேடத்தில் ரஜினி நடிக்கிறாராம். அவருக்கு ஜோடி இல்லை என்று முதலில் கூறப்பட்டது. இப்போது நயன்தாரா முக்கிய வேடத்தில் நடிப்பார் என்றும், ஆனால் அவருக்கும் ரஜினிக்கும் டூயட் காட்சிகள் எதுவும் இருக்காது என்றும் சொல்கிறார்கள்.

-என்வழி




5 thoughts on “ஜூன் 10-ம் தேதி சூப்பர் ஸ்டார் ரஜினியின் புதிய படம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

  1. ஸ்வேதா ரவி

    தலைவா !!! தலைவா !!! எளிமையின் சிகரம் சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்கள். நீங்கள் நலமுடன் வாழ எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.

  2. kumaran

    வருக வெல்க (தமிழக மக்களின் இதயங்களை )

  3. prakash

    மலேசியா don othu varathu..typical chennai padam a iruntha better..no risk..

  4. Balasubramanian

    தலைவா உங்களுக்கு ஒன்றும் நேராது. உங்கள் நலனே எங்கள் நலம். உங்களுக்கு சுவாமி தயானந்த சரஸ்வதி, எங்களுக்கு நீங்கள் கடவுள். உங்களை பற்றி சில குறிக்கு பயல்கள் உளறி கொண்டு இருப்பார்கள். சூரியனை பார்த்து நாய் குலைக்கிறது என்று விட்டு தள்ளுவோம்.
    அவர்கள் பாவம் அவர்களால் அவ்வளவு தான் செய்ய முடியும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *