BREAKING NEWS
Search

வெளியான சில நொடிகளில் பேஸ்புக், ட்விட்டரில் உலக அளவில் ட்ரெண்டான ரஜினி, லிங்கா!!

வெளியான சில நொடிகளில் பேஸ்புக், ட்விட்டரில் உலக அளவில் ட்ரெண்டான ரஜினி, லிங்கா!!

thalaivar-5

தலைவர் ரஜினியைத் தவிர இந்தியாவைச் சேர்ந்த வேறு எந்த பிரபலத்துக்கும் உலக அளவில் இத்தனை பெரிய புகழும், வரவேற்பும் கிடைத்திருக்குமா தெரியவில்லை.

லிங்கா டீசர் வெளியான சில நொடிகளில் பேஸ்புக் மற்றும் ட்விட்டரில் சர்வதேச அளவில் ட்ரெண்டாக மாறிவிட்டது லிங்கா.

லட்சக்கணக்கான அவரது ரசிகர்கள், சினிமா ஆர்வலர்கள் அவரது லிங்கா டீசரை சமூக வலைத் தளங்களில் ஷேர் செய்ய, அது உலக ட்ரெண்டாகிவிட்டது.

twitter

படத்தின் முதல் டீசர் (நவம்பர் 1) இன்று மாலை 4 மணிக்கு சரியாக வெளியானது. இதற்காக காலையிலிருந்தே பல லட்சம் ரசிகர்கள் தவம் கிடந்தனர். டீசர் வெளியானதும் அனைத்து ரசிகர்களும் ஷேர் செய்ய துவங்கிவிட்டனர்.

இந்தப் படத்தில் தலைவர் ரஜினியின் ஸ்டைலும் அழகும் கம்பீரமும் ரசிகர்களே எதிர்ப்பாராத
ஒன்று. பிரம்மாண்ட அரங்க காட்சிகள், அனுஷ்கா, சோனாக்‌ஷி சின்ஹாவின் ஷாட்கள் என டீஸர் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

#lingaa

வெளியான சில மணித் துளிகளில் ட்விட்டர், கூகுள். பேஸ்புக் உள்ளிட்ட தளங்களில் டிரெண்டாகியுள்ளது. இந்தியா மட்டும் அல்லாமல் உலக நாடுகளிலும் தற்போது #lingaa, #Rajini என்ற வார்த்தைகள் ஹாட் டிரெண்டாகி விட்டது.

இந்த டீசருக்குக் கிடைத்துள்ள வரவேற்பும் வெற்றியும், லிங்காவுக்கு சர்வதேச அளவில் இதுவரை எந்த இந்தியப் படத்துக்கும் கிடைக்காத வரவேற்பை உறுதி செய்வதாக உள்ளது.

லிங்கா டீசர்..

-என்வழி




6 thoughts on “வெளியான சில நொடிகளில் பேஸ்புக், ட்விட்டரில் உலக அளவில் ட்ரெண்டான ரஜினி, லிங்கா!!

  1. s venkatesan, nigeria

    தலைவரின் ரசிகன் போல சிந்திப்பதால் K.S.ரவிக்குமார் அவர்களுக்கு தலைவரின் படத்தை ரசிகனிடம் சேர்ப்பது எளிதாக இருக்கிறது. கொஞ்சம் கதை நல்ல பாடல்கள் இருந்து விட்டால் எந்திரனின் வசூல் முறியடிக்க படுவது உறுதி.

  2. மிஸ்டர் பாவலன்

    லிங்கா படம் ‘அண்ணாமலை’ போல் சூப்பர் ஸ்டார் அவர்களின்
    best படங்களில் ஒன்றாக வரும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை..
    குருவிக்கும், அவர் தந்தைக்கும் இந்தப் படத்தின் வசூல், நல்ல பேர்
    ஒரு பாடம் கற்பிக்கும்.. நன்றி!

    -== மிஸ்டர் பாவலன் ==-

  3. L. Ganesan

    தலைவர் தலைவர்தான் என்று நிருபித்துவிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *