BREAKING NEWS
Search

மீடியாக்களே… எப்போதான் திருந்துவீங்க?

Rajini-fans

குசேலன் படம் வெளியாவதற்கு முதல் நாள்…

காவிரி பிரச்சினையின் போது, கலவரம் செய்த கன்னடர்களுக்கு எதிராக ரஜினி பேசியது பெரிதாக்கப்பட்டது கன்னட கலவரக்காரர்களால். படம் நல்ல முறையில் வெளியாக வேண்டும், தயாரிப்பாளர்களுக்கு நஷ்டம் ஏற்படக் கூடாது என்ற நோக்கில், “கன்னடர்களுக்கு எதிராக கடுமையான வார்த்தையைப் பயன்படுத்தியதற்காக வருத்தப்படறேன், ஆனா இதை மன்னிப்புக் கேட்டதா எடுத்துக்கக் கூடாது”, என்று ரஜினி ஒரு அறிக்கைக் கொடுத்தார்.

அன்று இரவே அதனை சன் குழும சேனல்கள், ‘கன்னடர்களிடம் மன்னிப்பு கேட்டார்’னு, மாத்தி வாசித்தனர். உதயா டிவியில் மட்டும் வருத்தம் தெரிவித்ததாகக் கூறினர். இங்கு வெளியான அத்தனை நாளிதழ்களும் சொல்லி வைத்த மாதிரியே, “ரஜினி மன்னிப்புக் கேட்டார்,” எனத் திரித்தே செய்தி வெளியிட்டன. அதன் பிறகு அந்தப் படத்துக்கு நடந்ததெல்லாம் அனைவரும் அறிந்ததே.
திரும்பத் திரும்ப அதே தவறை செய்தி தொலைக்காட்சிகள் செய்கின்றன. அதாவது செய்தித் திரிப்பு. சொல்லாத விஷயத்தைச் சொன்னதாகச் சொல்வது.. அல்லது சொன்னதை மாற்றிச் சொல்வது. குறிப்பாக நியூஸ் 7, பு.த.வுக்கு அப்படி என்ன குழப்பமோ தெரியவில்லை.

ரசிகர்கள் சந்திப்புக்கு முன்பு அரசியல் நிலை குறித்து ரஜினி தன் பேச்சில், “போர் வரும்போது பார்த்துக்கலாம் என்று சொன்னேன். போர் என்று சொன்னால் தேர்தல்தான். ஸோ.. இப்ப என்ன போர் வந்துடுச்சா?” என்று கேட்டார்.

அதை நியூஸ் 7 இப்படி வெளியிடுகிறது: “போர் என்று சொன்னால் அரசியலா?”

புதிய தலைமுறை: “போர் என்று சொன்னால் தேர்தல்தானா?”

தந்தி டிவி: “போர் என்றால் தேர்தல்தானா?”

News7
அடுத்தது…

ரஜினி சொன்னது: “அரசியலுக்கு நான் புதுசில்ல… 1996-ம் ஆண்டு முதல் அரசியலில் உள்ளேன். அதில் உள்ள கஷ்ட நஷ்டங்கள், ஆழம் என்ன என்பதெல்லாம் தெரிந்திருப்பதால் தயங்குகிறேன்.”

நியூஸ் 7:  “அரசியல் பத்தி முழுசா தெரிஞ்சதுனாலதான் இறங்க பயப்படறேன்…”

தயக்கத்துக்கும் பயத்துக்கும் எவ்ளோ வித்தியாசம் இருக்குன்னு தெரியாதா?

எப்போதான் திருந்துவீங்க? எடுத்த வீடியோவை ஒருவாட்டி போட்டுக் கேட்டுட்டு நியூஸ் அடிக்கலாமே! நீங்க போடற ப்ளாஷ்களை வைத்து அதுக்குள்ள கருத்து கந்தசாமிகள் வேற களத்துல இறங்கிடறாங்க!

– வினோ




3 thoughts on “மீடியாக்களே… எப்போதான் திருந்துவீங்க?

  1. கிரி

    இதை பார்த்த போது செம்ம காண்டாக இருந்தது. அவர் சொன்னதை விமர்சித்தால் ஒரு நியாயம் இருக்கு… அவர் சொல்லாததை எல்லாம் சொன்னதாக கூறி அதையும் உண்மை என்று நம்பி பலர் விமர்சித்துட்டு இருக்காங்க.

    தலைவருக்கு கடவுள் தான் உதவனும். ஊடகங்கள் சாக்கடையாகி விட்டது.

  2. bond of james

    good thalaiva nice eappa arasial varinga please come fast we are waiting

    by

    your fan
    ramesh chandrasekar

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *