BREAKING NEWS
Search

தலைவர் எப்பவுமே கொடுத்த வாக்கையும் கொடுத்த பொருளையும் திரும்ப வாங்கினதா சரித்திரமில்லை!

ரூ ஒரு கோடி ரெடி… நதி நீர் இணைப்பு திட்டம் ரெடியா?

 

sathya

‘எப்பவுமே கொடுத்த வாக்கையும் கொடுத்த பொருளையும் திரும்ப வாங்கினதில்லை’ என்று முத்து படத்தில் சொல்வார் தலைவர் ரஜினி. அதை அந்தப் படத்தின் வெற்றி விழாவிலும் சொன்னார். தன் வார்த்தையை என்றுமே காப்பாற்றியவர் ரஜினி.

நதி நீர் இணைப்புக்காக 2002-ம்  ஆண்டில் தான் கொடுப்பதாகச் சொன்ன ரூ 1 கோடி நிதியை, ரஜினிகாந்த் அப்போதே வங்கியில் டெபாசிட் செய்திருக்கிறார். என்று அந்தத் திட்டம் தொடங்கப்பட்டாலும் அந்த நிதி திட்டத்துக்குப் போய்விடும் வகையில் டெபாசிட் செய்திருக்கிறார். இதனை ரஜினி அண்ணன் சத்யநாராயணா ராவ் நேற்று உறுதிப்படுத்தினார்.

கடந்த 2002-ம் ஆண்டு, உச்ச நீதிமன்ற ஆணைப்படி தமிழகத்துக்கு கர்நாடகம் காவிரி நீரைத் திறந்து விட வேண்டும் என்று கோரி ரஜினிகாந்த் சென்னையில் உண்ணாவிரதம் இருந்தார்.

இந்த உண்ணாவிரதத்தின் முடிவில் ஆளுநரிடம் காவிரி நதி நீர் மற்றும் நதிகள் இணைப்பு குறித்து மனு கொடுத்த ரஜினி, நதிகள் இணைப்புத் திட்டத்தை ஆரம்பித்தால் தன் சொந்தப் பணத்திலிருந்து ரூ 1 கோடி தருவதாக வாக்களித்தார்.

அதன் பிறகு 14 ஆண்டுகள் கடந்தும், இன்னும் நதி நீர் இணைப்பு குறித்து பாஜக அரசோ, காங்கிரஸ் அரசோ எதுவும் பேசவில்லை. எந்தத் திட்டமும் போடவில்லை. மன்மோகன் சிங் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில், நதிகளை இணைப்பது இயற்கைக்கு விரோதமானது. எனவே அது சாத்தியமில்லை என்று காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி கூறிவிட்டார்.

rajnikanth-wallpaper

இந்த நிலையில் திடீரென விவசாயிகள் என்ற பெயரில் சிலர் ரஜினி கொடுப்பதாகச் சொன்ன ஒரு கோடி ரூபாயை உடனே கொடுக்க வேண்டும் இல்லாவிட்டால் அவர் வீட்டு முன் போராட்டம் நடத்துவோம் என மிரட்ட ஆரம்பித்தனர்.

இவர்கள் உண்மையில் விவசாயிகள்தானா அல்லது பப்ளிசிட்டிக்காக பண்ணுகிறார்களா என பலரும் பேச ஆரம்பித்த நிலையில், இதற்கு ரஜினியின் அண்ணன் சத்யநாராயண ராவ் கெய்க்வாட் ஒரு முற்றுப் புள்ளி வைத்துள்ளார்.

இன்று தஞ்சை பெரிய கோயிலுக்கு தரிசனத்துக்காக வந்த அவர் கூறுகையில், “ரஜினி அமெரிக்காவில் நலமுடன் இருக்கிறார். கபாலி ரிலீசின்போது திரும்பி விடுவார்.

நதி நீர் இணைப்புக்காக ரஜினி தருவதாகச் சொன்ன அந்த ஒரு கோடியை அப்போதே தேசிய வங்கியில் டெபாசிட் செய்து விட்டார். மத்திய அரசு நதிகள் இணைப்பை அறிவித்த உடனை அந்தத் தொகை முழுவதும் அப்படியே நதிகள் இணைப்பு திட்டத்துக்கு போகுமாறு ஏற்பாடு செய்துள்ளார் ரஜினி,” என்றார்.

-என்வழி




3 thoughts on “தலைவர் எப்பவுமே கொடுத்த வாக்கையும் கொடுத்த பொருளையும் திரும்ப வாங்கினதா சரித்திரமில்லை!

  1. Rajagopalan

    any confirmation regarding thalaivar return?
    More than Kabali, i want thalaivar to be hale & healthy.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *