BREAKING NEWS
Search

நான் தமிழகத்தின் முதல்வராவது கடவுள் கையில்! – சூப்பர் ஸ்டார் ரஜினி பேட்டி

நான் தமிழகத்தின் முதல்வராவது கடவுள் கையில்! – சூப்பர் ஸ்டார் ரஜினி பேட்டி

unnamed

மங்களூர்: நான் அரசியலுக்கு வருவது கடவுள் கையில். மக்கள் மனது வைத்தால்தான் முதல்வராக முடியும், என்றார் சூப்பர் ஸ்டார் ரஜினி.

தலைவர் ரஜினி அரசியலில் ஈடுபட வேண்டும் என்பது பலகோடி ரசிகர்களின் விருப்பமாக இருக்கிறது. இதனை அவ்வப்போது சுவரொட்டிகள் மூலமும் அறிக்கைகள் மூலமும் வெளிப்படுத்தி வருகிறார்கள். ஆனால் ரஜினி இது வரை அரசியல் பற்றி எந்த முடிவும் எடுக்கவில்லை.

1996 சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. தமிழ் மாநில காங்கிரஸ் கூட்டணியை உருவாக்கி அதற்கு வெளிப்படையாக ஆதரவளித்து வெற்றி பெற வைத்தார். தன்னைத் தேடி வந்த முதல்வர் வாய்ப்பையும் ஏற்க மறுத்தார்.

2008-ல் கோவையைச் சேர்ந்த ரஜினி ரசிகர்கள் தேசிய திராவிட மக்கள் முன்னேற்ற கழகம் என்ற பெயரில் கட்சி துவங்கி பரபரப்பு ஏற்படுத்தினர். கொடி மற்றும் சின்னத்தையும் வெளியிட்டார்கள். இதனை ரஜினி கண்டித்தார். கட்சி துவங்கப்பட்டதற்கும் தனக்கும் சம்பந்தம் இல்லை என்றும் கூறினார்.

ஆனால் அரசியலுக்கு வருமாறு அவருக்கு தொடர்ந்து வற்புறுத்தல்கள் இருந்து கொண்டுதான் உள்ளது. இந்த நிலையில் லிங்கா படப்பிடிப்புக்காக தற்போது மங்களூர் சென்றுள்ள ரஜினியிடம் நிருபர்கள் அரசியல் பற்றி கேள்வி எழுப்பினார்கள்.

நீங்கள் அரசியலுக்கு வருவீர்களா என்ற கேள்விக்கு ரஜினி சிரித்துக் கொண்டே, ‘அது கடவுளின் விருப்பம் கடவுள் விரும்பினால் எது வேண்டுமானாலும் நடக்கும்,’ என பதில் அளித்தார்.

அரசியல் பற்றி உங்களுடைய விருப்பம் என்னவாக இருக்கிறது என்ற கேள்விக்கு ‘கடவுள் விருப்பம்தான் என் விருப்பம்’ என்று பதில் அளித்தார்.

அரசியலுக்கு வந்தால் முதல் அமைச்சராக முடியும் என்று நினைக்கிறீர்களா? என்ற கேள்விக்கு ‘மக்கள் மனது வைத்தால்தான் முதல்வராக முடியும்’ என்றார்.

பல ஆண்டுகளுக்கு முன்பு தான் சாலையில் இறங்கிச் செல்ல நேர்ந்ததையும், அதனால் பெரிய போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதையும், அதில் அன்றைக்கு முதல்வராக இருந்த ஜெயலலிதாவின் கார் மாட்டிக் கொண்டதையும், பின்னர் போலீசார் ஓடிவந்து தன்னைக் காரில் ஏற வைத்து நெரிசலை சீர்ப்படுத்தியதையும் நினைவு கூர்ந்தார் ரஜினி.

பின்னர் மங்களூரில் இருந்து ஷிமோகாவுக்கு சென்றார். அங்குள்ள தீர்த்த ஹள்ளி ஸ்ரீ ராமேஷ்வரா கோவிலுக்கு சிறப்பு பூஜைசெய்து சாமி கும்பிட்டார். அதன் பிறகு அங்குள்ள ஜோக் அருவி அருகே நடந்த லிங்கா படப்பிடிப்பில் கலந்து கொண்டார்.

-என்வழி ஸ்பெஷல்
20 thoughts on “நான் தமிழகத்தின் முதல்வராவது கடவுள் கையில்! – சூப்பர் ஸ்டார் ரஜினி பேட்டி

 1. bahrainbaba

  சீக்கிரம் முடிவெடுங்க தலைவா.. இப்ப்போவும் ஒன்னும் கெட்டுப்போகல.. உங்கள் பின்னால் அணிவகுக்க தயாராகவே இருக்கிறோம்..

 2. குமரன்

  அப்போ, நம் தமிழ் நாட்டுக்கு ஜெயா-கருணா விடமிருந்து சுதந்திரம் கிடைக்கக் கடவுள் அருள் புரிய வேண்டும்….. வேண்டிக் கொள்வோம்.

 3. Karthick

  Thalaivaa !!! Excellent. Super Star will come soon in Politics. Next Tamil Nadu Chief Minister our beloved Super Star Rajini vazga.

 4. ravi

  Our thalaivar used to speak about politics whenever his movie is in the making or about to get released. Leave it. His time has gone.

 5. Krishna

  ஔவையார் திரைப்படத்தில் கே.பி.சுந்தராம்பாள் பாடிய பாடலின் ஒரு வரி:

  இன்று என்பாரினும் நாளை என்பாரினும்
  இல்லை என்பார் மிக நல்லோரே
  நன்று செய்ய நினைத்தால் அதை இன்றே செய்தல் வேண்டும்
  நாளை வருவதை யார் அறிவாரே.

  இது தான் நினைவுக்கு வருகிறது இந்த செய்தியை பார்த்து.

 6. Elango

  ஹிந்து நாளிதழ் குறிப்பிட்டிருந்ததை போல …..
  லிங்கா படம் ரிலீஸ் ஆகிறவரைக்கும் ரஜினியிடம் இதலாம் சகஜம் ….ரொம்ப சந்தோஷ பட வேண்டாம் மக்களே!

 7. Elango

  இன்றைய அரசியல் சூழ்நிலையும் மக்கள் மனபாண்மையும் நன்கு அறிந்த இவருக்கு அரசியலில் வரமாட்டார்!

 8. srikanth1974

  மிக்கத் துணிவுண்டு -இளைஞர்கள்

  பக்கத் துணையுண்டு -உடன்வர

  மக்கள் படையுண்டு -மேலும் எல்லாம் வல்ல இறைவனின்

  அருளாசியும் உமக்குண்டு விரைவில் முடிவெடு படையப்பா

 9. குமரன்

  அவர் சொல்லும் ஒரு வரியை வைத்து, பத்திரிகைகள் என்னென்னவெல்லாம் கற்பனை செய்கிறார்கள்!!
  அண்மைச் செய்தி:
  /// அதன் ஒரு வழி தான், நடிகர் ரஜினிகாந்தை பா.ஜ.,வுக்கு அழைத்து வரும் திட்டம். அடுத்ததாக அவரை, பா.ஜ., முதல்வர் வேட்பாளராக அறிவிக்கவும் திட்டம் இருக்கிறது.அந்த அடிப்படையில் தான், அமித் ஷா, சமீபத்தில், நடிகர் ரஜினிகாந்திடம் பேசியிருக்கிறார். அப்போது, பா.ஜ.,வின் எண்ணங்களை அவர், தெள்ளத் தெளிவாக, ரஜினியிடம் சொல்லி, ஒப்புதல் பெற்று விட்டதாக கூறுகின்றனர். அதற்கேற்றவாறு, நடிகர் ரஜினியும், கர்நாடகாவில், சமீபத்தில் நிருபர்களை சந்தித்தபோது, அரசியலில் இறங்குவது குறித்து பேசியிருக்கிறார். ‘நீங்கள் அரசியலில் களமிறங்கி, தமிழக முதல்வர் ஆவீர்களா?’ என, நிருபர்கள் கேட்டதும், ‘மக்கள் மனசு வைத்தால், அது நடக்கும்’ என, சொல்லி சந்தோஷப்பட்டிருக்கிறார்.வழக்கமாக, இப்படிப்பட்ட கேள்விகள் எழும்போது, ‘ஆண்டவன் மனசு வைத்தால், நடக்கும்’ என்பது தான், ரஜினியின் பதிலாக இருக்கும்.இம்முறை மாற்றி, மக்களை குறிப்பிட்டு சொன்னதற்கான காரணம், ரஜினி, அமித் ஷா பேச்சு, என்கின்றனர்.இதற்கிடையில், ‘லிங்கா’ படத்தில், அரசியல் சம்பந்தப்பட்ட ‘பஞ்ச்’ வசனங்கள் இடம்பெற, ரஜினி விருப்பம் தெரிவித்திருக்கிறார். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவன் செயல்பாடுகளை, ஜாதியின் பெயரால் தடுக்கக் கூடாது; ஜாதியை வைத்து சமூகத்தை பிளக்கக் கூடாது; நாட்டின் வளர்ச்சியை தடுக்கக் கூடாது என்பது போன்ற, அரசியல் வசனங்கள் இடம்பெறுகிறது. இது எல்லாமே, பிரதமர் மோடியை வைத்து எழுதப்பட்ட வசனங்கள்.///

 10. bahrainbaba

  ரவி
  உங்களோட விரக்தி புரியுது.. ஒன்றும் சொல்வதற்கில்லை..
  என்னை பொருத்தமட்டில் தலைவரன்றி இன்னொருவர் மீது இதே அன்பு வருவதென்பது சாத்தியமே இல்லை..
  அதனால் நான் தலைவரை விமர்சிப்பதைவிட அவரை ஆதரிப்பதையே விரும்புகிறேன்..
  ஏனென்றால்.. என்றும் என்றென்றும்.. தலைவர் என்றால் திரு ரஜினிகாந்த் அவர்கள் மட்டுமே..

 11. மிஸ்டர் பாவலன்

  இளங்கோ, கிருஷ்ணா சொன்னது 100% சரி – நான் வரவேற்கிறேன்.

  ரஜினி அரசியலுக்கு வருவது சாத்தியம் இல்லை! இருந்தாலும் இன்று
  கமல், அஜீத், விஜய் என திரை உலகத்தில் போட்டி பலத்து வருவதால்
  “லிங்கா” படம் நன்கு ஓட வேண்டும் என்பதற்காக ரஜினி வழக்கமாக
  பேசும் ‘பஞ்ச் டையலாக்’ தான் இது! “கடவுள் நினைத்தால் வரலாம்”,
  “மக்கள் மனது வைத்தால் வரலாம்”, “நாளை ஆண்டவன் கையில்” என
  இது போல் தான் ரஜினி டையலாக் வரும் – புது படம் ரிலீஸ் ஆகும் சமயம்..

  கேப்டன் அரசியலுக்கு வருவதாக தெளிவாக முடிவெடுத்தார்.. அதன் படி
  கட்சி துவங்கி அரசியல் செய்து வருகிறார்.. உலக நாயகன் கமல் ஹாசன்
  “அரசியலில் நாட்டம் இல்லை” என முற்றிலும் ஒதுங்கி விட்டார். அஜீத்
  அவர்களிடம் ஒரு தெளிவு இருக்கிறது. இவர்களை நான் பாராட்டுகிறேன்.

  -== மிஸ்டர் பாவலன் ==-

 12. ranganathan

  நாம் தலைவரை குறை கூறகூடாது. அவராக வலிய சென்று இந்த கருத்துகளை சொல்வதில்லை. பத்திரிகையாளர்கள் இந்த கேள்விகளை கேட்டு நச்சரிபதல்தன் சொல்கிறார்

  ranganathan

 13. Elango

  \\ ரஜினி வழக்கமாக பேசும் ‘பஞ்ச் டையலாக்’ தான் இது!

  படம் வெளிவந்த உடன் …”No Politics Please…” என்று தனது ஸ்டைலில் நைசாக நழுவிவிடுவார் பாருங்கள் 😉

 14. மிஸ்டர் பாவலன்

  /// படம் வெளிவந்த உடன் …”No Politics Please…” என்று தனது ஸ்டைலில்
  /// நைசாக நழுவிவிடுவார் பாருங்கள் (இளங்கோ)

  “ரஜினி தனிக் கட்சி துவங்கப் போகிறார்” என ஒரு இணைய தளம் தன்னால்
  இயன்ற புரளியைக் கிளப்பி உள்ளது. ரஜினி புதுப் படம் ரிலீஸ் ஆகும் சமயம்
  இது போல் செய்திகளும், படம் ஓடி வசூல் பார்த்ததும் அவர் “எல்லாம்
  ஆண்டவன் கையில்..” என ஒதுங்கி விடுவதும் பார்த்துப் பார்த்து
  சலித்து போன காட்சிகள். இது விஷயத்தில் உலக நாயகனின் தெளிவையும்,
  துணிச்சலையும் நாம் பாராட்ட வேண்டி உள்ளது. “அரசியலில் நான்
  இறங்கலாம்” என அவர் ரசிகர்களை என்றும் ஏமாற்றியது இல்லை.

  -=== மிஸ்டர் பாவலன் ==-

 15. Elango

  விஜயகாந்தின் தைரியத்தையும் துணிச்சலையும் கூட பாராட்டுங்க பாவலன்!

 16. Anniyan

  ரவி, இளங்கோ போன்று ரஜினியின் அணைத்து ரசிகர்களும் புத்திசாலி தனமாக இருக்க கற்று கொள்ள வேண்டும்.

 17. Anniyan

  பாவலன் கூட மிக அருமையான கருத்துக்களை தெரிவித்து இருக்கிறார். ரஜினி ஏன் அரசியலுக்கு வர கூடாது? அல்லது ஏன் வர தகுதி இல்லை. கீழே பார்ப்போம்.

  1. தலைவன் என்பவன் மக்களோடு மக்களாக இருக்க வேண்டும். இவர் எப்பொழுதும் மக்களிடமிருந்தும் ஏன், தன் ரசிகர்களிடம் இருந்தும் கூட விலகியே இருக்கிறார்.

  2. சினிமா விலும், சமுதாயத்திலும் பெரிய இடத்திற்கு வந்த பிறகு, இவரது செயல்பாடுகள் எப்பொழுதும் மோடி, கருணாநிதி, ஜெயலலிதா, வாஜ்பாய் என பெரிய மனிதர்களை சுற்றிய இருக்கிறது. எவரையும் எதிர்க்கிற துணிவு இவருக்கு இல்லை.

  3. சமுதாயத்தில் நிகழும் கொடுமைகள், மக்களுக்கு எதிரான மதிய, மாநில அரசின் செயல் பாடுகள் குறித்து இவர் எப்போதும் எந்த அறிக்கையும் விடுவது இல்லை. (அது தேவையும் இல்லை). அதே சமயம், ராஜ்குமார், சஞ்சய்தத், அமிதாப் என தனக்கு நெருக்கமானவர்களுக்கு எதாவது ஒன்று என்றால் அதனை கண்டிப்பார். இது அவரது சுயநலத்தை காட்டுகிறது.

  4. இவரை எப்படியாவாது சிம்மாசனத்தில் வைத்துவிட துடிக்கும் இவரது ரசிகர்களுக்கும், இவர் வந்தால் நன்றாக இருக்கும் என நினைக்கும் பொது மக்களுக்கும், இது வரை இவர் தெளிவான ஒரு முடிவை அறிவிக்க வில்லை. குழப்பம்தான் மிச்சம்.

  5. அவரை பொறுத்த வரை, அடி மட்டத்தில் இருந்து வந்த தனக்கு இதுவே அதிகம் என்ற மன நிலையில் இருக்கிறார். கஷ்ட பட்டு சேர்த்த பணத்தை அரசியலில் விட்டு விடுவோமோ என்ற பயமும் இவரிடம் அதிகம் இருக்கிறது. எந்த வகையிலும் தனது பணத்தை இழந்து விட கூடாது என்பதில் தெளிவாக இருக்கிறார்.

  6. அரசியலில், வெற்றியும் தோல்வியும் சகஜம். தொடர்ந்து மூன்று சட்ட மன்ற தேர்தல்களில் வெற்றி பெற்ற எம்.ஜி.ஆர். அவர்களே நாடாளுமன்ற தேர்தலில் தோல்வி அடைந்தார். கருணாநிதி, ஜெயலலிதா பார்க்காத தோல்விகளா?. இதனை ஏற்கும் பக்குவம் இவருக்கு இருப்பதாக தெரி யவில்லை.

  7. சினிமாவில் சூப்பர் ஸ்டாராக இருந்தாலும், இதுவரை இவர் தனது நிர்வாக திறமையை எங்கும் நிருபிக்க வில்லை. நிழல் வேறு நிஜம் வேறு என்பதனை புத்திசாலிகள் நன்கு உணர்ந்து உள்ளனர்.

  8. காலத்தின் கையில் உள்ளது, கடவுளின் கையில் உள்ளது, மக்களின் விருப்பம் என்பது எல்லாம் மழுப்பலான பதில்கள். இவற்றை நம்பி 1996 ரசிகன் வேணும்னாலும் ஏமாறுவானே தவிர 2014 ரசிகனை ஏமாற மாட்டான்.

  9. ரஜினியிடம் இருந்து, நாம் கடின உழைப்பு, பழைய விசயங்களை மறக்காத குணம், அடுத்தவரை மதிக்கும் பண்பு, சேர்த்த பணத்தை பாது காத்து கொள்வது, நட்பு – போன்றவற்றை நாம் கற்று கொள்ள வேண்டும்.

  10. மொத்தத்தில், தனது ரசிகர்களின் அரசியல் ஆசையை தனது பட வியாபாரத்திற்கு நன்கு பயன் படுத்தி கொண்டு கடந்த 22 வருடங்களாக லாபம் பார்த்து கொண்டு இருக்கிற நல்ல வியாபாரி.

  வாழ்க ரஜினி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *