BREAKING NEWS
Search

மழை வெள்ளம் பாதிப்பு… பிறந்த நாள் விழா கொண்டாட்டங்கள் வேண்டாம்! – ரஜினி முடிவு

 ‘பிறந்த நாள் விழா கொண்டாட்டங்கள் வேண்டாம்!’

11261590_894966670588091_4281103110683683165_n

சென்னை: கடும் மழை வெள்ளத்தால் தமிழக மக்கள் பாதிக்கப்பட்டுள்ள இந்த நேரத்தில் தனது பிறந்த நாள் விழாவை ரசிகர்கள் ஆடம்பரமாகக் கொண்டாட வேண்டாம் என்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அறிவுறுத்தியுள்ளார்.

ஆண்டுதோறும் டிசம்பர் மாதம் ரஜினி ரசிகர்களுக்கு திருவிழா மாதம். டிசம்பர் 12-ம் தேதி ரஜினியின் பிறந்த நாளை உலகெங்கும் உள்ள அவரது ரசிகர்கள் கோலாகலமாய் கொண்டாடுவது வழக்கம்.

இந்த பிறந்த நாளை தலைவர் தனது குடும்பத்தினர் மற்றும் ரசிகர்களுடன் கொண்டாட திட்டமிட்டிருந்தார். இந்த நிலையில் வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

குறிப்பாக சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர், கடலூர் மாவட்டங்களில் உள்ள மக்கள் பெரும் இழப்பை சந்தித்துள்ளனர். மக்கள் கடும் பாதிப்பில் இருக்கும் நிலையில் பிறந்த நாளை கொண்டாட ரஜினி விரும்பவில்லை.

எனவே ரஜினி பிறந்தநாள் விழா ரத்து செய்யப்பட்டுள்ளது.

இந்த முறை தனது பிறந்த நாளை ரசிகர்கள் ஆடம்பரமாகக் கொண்டாட வேண்டாம் அனைத்து மன்ற நிர்வாகிகளுக்கும் அறிவுறுத்தியுள்ளார். எனவே அந்த நாளில் மக்களுக்கு உதவும் வகையில் அமைதியாக நற்பணிகள் செய்ய ரசிகர்கள் திட்டமிட்டுள்ளனர்.

கடந்த சில ஆண்டுகளாக பிறந்த நாளன்று வீட்டு முன் ரசிகர்களைச் சந்தித்து வந்த ரஜினி, இந்த பிறந்தநாளன்று கோவாவில் இருப்பார் என்று அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்தன.

-என்வழி
5 thoughts on “மழை வெள்ளம் பாதிப்பு… பிறந்த நாள் விழா கொண்டாட்டங்கள் வேண்டாம்! – ரஜினி முடிவு

 1. Siva

  சென்னை: மழையால் பாதிக்கப்பட்ட சென்னை மக்களுக்கு காமெடி நடிகர்களான மயில்சாமி, இமான் ஆகியோர் உணவுகளை வழங்கி உதவிகள் செய்து வருகின்றனர்.சென்னையில் மழையால் பாதிப்படைந்த பகுதிகளுக்கு சென்று நடிக, நடிகையர் நேரடியாக உதவிகள் செய்து வருகின்றனர். மக்களுக்குத் தேவைப்படும் குடிநீர், உணவு, போர்வைகள் மற்றும் பிற அத்தியாவசியமான பொருட்களை இவர்கள் வழங்கி வருகின்றனர்.

 2. பார்த்திபன்

  தலைவர் ரஜினி அவர்கள் ரூ 5 கோடி மழை வெள்ள நிவாரண நிதியாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு அளித்து உள்ளார்.
  வாழ்க கலியுக கடவுள் ரஜினி அவர்கள்.

 3. Siva

  ரஜினி வழங்கியது வெறும் 10 லட்சம் ரூபாய் தான் …….. அவர் ஒட்டு மொத குடும்பத்தினரும் ஒவ்வொருவரும் இந்த மக்களை நம்பி செய்யும் அணைத்து பிசினசிலும் கோடி கொடியாக சம்பதிகிறார்கள் …….. அவர்கள் அனைவரும் சேர்ந்து செய்யும் செலவுதான் 5 கோடி …… ரஜினி பணத்தை அள்ளி கொடுத்ததாக சரித்திரம் இல்லை ……….. கும்பகோணம் தீ விபத்திற்கு அளித்தது வெறும் 2 லட்சம் ………… கமல் அளித்தது 10 லட்சம் …… இந்திரன் படத்திற்கு ரஜினி சம்பளம் வாங்கவில்லை …. அதற்கு பதில் பெரும் பங்கு தொகை வாங்கினார் ………. “என்னை வாழ வைக்கும் தெய்வங்களே ” கபாலியையும் 1000 , 2000 ருப்பை குடுத்து டிக்கெட் வாங்கி என்னை வாழ வைக்கவும் …..

 4. Nellai Siva

  இரண்டு தினங்களுக்கு முன்பே கோவாவிலிருந்து சென்னை திரும்பிவிட்டார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். கடந்த நான்காம் தேதியிலிருந்து சென்னை மற்றும் தமிழகத்தின் வெள்ளச் சேத விபரங்களை தனது நண்பர்கள் மற்றும் மண்டப நிர்வாகிகள் மூலம் கேட்டறிந்தவர், உடனடியாக சென்னை திரும்ப முயன்றாலும், கடுமையான மழைச் சூழல் காரணமாக முடியவில்லை.
  நேற்று முன்தினம் அமைதியாக சென்னை திரும்பியவர் முதலில் விசாரித்தது, வெள்ள நிவாரணத்துக்கு அரசை தாண்டி நாம் எப்படி நேரடியாகச் செய்ய முடியும் என்பதற்கான சாத்தியக்கூறுகளைத்தான் (ஆனால் அதற்குள் எந்திரன் 2 ஐ ஆரம்பித்துவிட்டதாக ஏக புரளிகள்). மகள்கள் ஐஸ்வர்யா, சவுந்தர்யா, மருமகன் தனுஷ் மற்றும் ரசிகர் மன்றப் பொறுப்பாளர்களுடன் கலந்து பேசிய பிறகு, நிவாரணப் பொருள்களை ரசிகர்கள் மற்றும் பிற தன்னார்வலர்களுடன் நேரடியாக பாதிக்கப்பட்டவர்களுக்குத் தர வேண்டும் என்று முடிவு செய்தாராம்.
  சென்னையில் போதிய அளவு பொருட்கள் கிடைக்காததால், பெங்களூர், ஹைதராபாத் போன்ற நகரங்களில் உள்ள தனது நண்பர்களைத் தொடர்பு கொண்டு நிவாரணப் பொருட்களை அனுப்பச் சொன்ன ரஜினியுடன், ஆர்ட் ஆப் லிவிங் போன்ற அமைப்பினரும் கைகோர்த்துள்ளனர். கூடவே ஏராளமான ரஜினி ரசிகர்கள்.. இணைய வழி செயல்படும் மிக இளம் வயது ரசிகர்கள்.
  இந்த முறை நிவாரணப் பொருட்கள் ரஜினியின் ராகவேந்திரா மண்டபத்தில் இருப்பு வைக்கப்படவில்லை. பொறுப்பை மகள்கள் மற்றும் மருமகன்கள் கையில் ஒப்படைத்தவர், விநியோகத்தை ரசிகர்களை நம்பி ஒப்படைத்துள்ளார்.
  கடந்த நான்கைந்து நாட்களாகவே தனுஷின் வுண்டர்பார் பிலிம்ஸ் (நுங்கம்பாக்கம் காவல் நிலையம் பின்புறம்) ஒரு வெள்ள நிவாரண விநியோக மையமாக மிக பிஸியாக உள்ளது. ரஜினியின் மகள்கள், மருமகன் தனுஷ், பிஆர்ஓ ரியாஸ் போன்றவர்கள் மிக பிஸியாக அங்கே பொருள்களைப் பிரித்து மாவட்டவாரியாக அனுப்பி வருகின்றனர். இதுவரை அனுப்பப்பட்டுள்ள உதவிப் பொருள்களின் மதிப்பு ரூ 10 கோடி என்கிறார்கள். இன்னும் சில தினங்களுக்கு நிவாரணப் பொருள் விநியோகம் தொடர்கிறதாம். இன்று காலை கூட ஹைதராபாத் மற்றும் பெங்களூரிலிருந்து 5-க்கும் மேற்பட்ட லாரிகளில் நிவாரணப் பொருள்கள் குவிந்தன. வெறும் அன்றாடத் தேவைகளுக்கான உணவு, தண்ணீர், போர்வை, நாப்கின், ரொட்டி, பால் பொருட்கள் என்றில்லாமல், பாதிக்கப்பட்ட ஒரு குடும்பத்தின் மறுவாழ்வுக்குத் தேவையான சமையல் சாதனங்கள், முக்கிய வீட்டு சாமான்கள், கட்டுமானப் பொருள்கள் போன்றவற்றை வழங்கவும் முடிவு செய்துள்ளார்களாம். இந்தப் பணியிலிருப்பவர்களுக்கு ரஜினி தரப்பிலிருந்து போடப்பட்ட முக்கிய நிபந்தனை…’எக்காரணம் கொண்டும் இந்த உதவிகளை விளம்பரப்படுத்த வேண்டாம்… தன் பெயர், படம் எதையும் பயன்படுத்த வேண்டாம்’ என்பதுதானாம். ஏற்கெனவே முதல்வரின் வெள்ள நிவாரண நிதிக்காக ரூ 10 லட்சத்தை ரஜினி அளித்துள்ளார். சென்னையை மழைவெள்ளம் கடுமையாகத் தாக்குவதற்கு முன்பே இந்தத் தொகையை அவர் தந்துவிட்டார். சமீபத்திய மழை வெள்ளத்தின்போது, தனது ராகவேந்திரா மண்டபத்தை ஏழை மக்கள் தங்குவதற்காகத் திறந்துவிட்டுள்ளார்.
  வரவேண்டிய நேரத்தில் கரெக்டாகத்தான் வந்திருக்கிறார் சூப்பர் ஸ்டார்!

 5. இந்திரன்

  தலைவர் fans எல்லா ருக்கும் ஒன்னு சொல்லனும் தலைவர் 5கோடிகொடுத்தார்10கோடி கொடுத்தார்இப்படி இல்லாத ஒன்றை தயவு பன்னி சொல்லாதிங்க அவர்10lakhs கொடுத்தது மட்டுமே உண்மை. 10லட்சம் கொடுத்தத மட்டும் மீடியாட்ட சொன்னவங்க கோடிகள் கொடுத்தா சொல்ல மாட்டார்களா பிறகு நமக்கும் விஜய் fanகும் என்ன வித்தியாசம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *