BREAKING NEWS
Search

ரஜினி 38.. சில நினைவுகள்: பாபா!

ரஜினி 38.. பாபா

baba-thalaivar

சூப்பர் ஸ்டார் ரஜினியின் 38 ஆண்டு திரை வாழ்க்கையில் மிகப் பெரிய சோதனை, பாபா திரைப்பட வெளியீட்டின் போது மரம் வெட்டி கும்பல் கொடுத்த தொல்லைகள்தான். அதாவது நேருக்கு நேர் நின்று மோதவில்லை. திருட்டுத்தனமாக தியேட்டரில் புகுந்து படப்பெட்டிகளைக் கடத்தினார்கள். அதற்குக் கூடுதல் முக்கியத்துவம் தந்து பதட்ட சூழலை உருவாக்கின தினமலர்கள்.

ஆனால் ரஜினி யாரையும் துணைக்கு அழைக்கவில்லை. முதல்வர் இதில் தலையிட வேண்டும் என்று கேட்கவில்லை. இத்தனைக்கும் இது சட்டம் ஒழுங்குப் பிரச்சினை. அன்றைய முதல்வர் ஜெயலலிதாவின் அரசோ கண்டுகொள்ளவில்லை.

ரசிகர்கள் யாரும் எந்த போராட்டத்திலும் ஈடுபட வேண்டாம், இது எனது சொந்தப் பிரச்சினை. நான் பார்த்துக் கொள்கிறேன் என்று அறிவித்த ரஜினி, அந்தப் பிரச்சினையிலிருந்து சில வாரங்களில் வெளியில் வந்தார். காட்ட வேண்டிய நேரத்தில் அந்த எதிர்ப்பைக் காட்டினார்.

திரையுலக வரலாற்றில் முதல் முறையாக நஷ்டக் கணக்கு காட்டிய அத்தனை விநியகஸ்தர்கள் – திரையரங்க உரிமையாளர்களுக்கும் அந்த நஷ்டத் தொகையோடு கூடுதலாக ஒரு தொகையும் கொடுத்து அனுப்பினார் (ஆனால் அந்தப் படம் நல்ல வெற்றிப் படம் என இப்போது சொல்கிறார்கள் அதே தியேட்டர்காரர்கள்!).

அந்தப் படத்தோடு அவர் முடிந்துவிடுவார் என்று தப்புக் கணக்குப் போட்டு பார்ட்டி கொடுத்தவர்களையும், சந்திரமுகியின் இமாலய வெற்றிப் பார்ட்டிக்கு அழைத்து விருந்தளித்தார்!

ந்தப் படத்தின்போதுதான் உச்ச நட்சத்திரமாக இருந்தாலும் அனைவரையும் அனுசரித்துப் போகும் அந்த மகத்தான மனிதன் மீது தமிழ் சினிமாக்காரர்கள் சிலர் எவ்வளவு குரோதம் கொண்டிருந்தனர் என்பதும் தெளிவாகத் தெரிந்தது.

அந்த குரோதங்களை அவர் வென்ற விதம் ஒரு விறுவிறு த்ரில்லருக்கு இணையானது, தமிழக அரசியல் சரித்திரத்தில் இடம்பெற்றது.

காரணம், அவர் வெறும் நடிகர் மட்டுமல்ல… வெற்றி தோல்விகளை தாண்டிய, மக்கள் மனங்களை ஆளும் ‘தலைவர்’!

-தொடரும்…




11 thoughts on “ரஜினி 38.. சில நினைவுகள்: பாபா!

  1. SIVA

    ஒரு உண்மையான மக்கள் தலைவர்….. நல்ல மனிதர் அவரின் ரசிகராக இருப்பதற்கு நான் பெருமைப்படுகிறேன் 😉

  2. senthilbabu

    அதனால் தான் அவரை “தலைவா” என அன்புடன் அழைக்கிறோம்….தன்னை தானே தலைவா என்று சொல்லிக்கொள்பவர்களுக்கு இதெல்லாம் தெரியுமா????

  3. kabilan.k

    தொடரும் நு போட்டு பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி விட்டிர்கள் அண்ணா.தொடரில் பார்ட்டி வைத்த துரோகிகளை அடியாளம் காட்டுங்கள் அண்ணா .

  4. Babu

    தலைப்பைப் பார்த்துவிட்டு ஆவலாக வந்தேன் ! ஆனால் வினோ ஜி சுருக்கமாக முடித்துவிட்டார் ! இன்னும் கொஞ்சம் எழுதி இருக்கலாமே ?

  5. SARGUNARAJ

    எனக்கு இந்த தொடர் ரொம்ப பிடிச்சி இர்ருக்கு
    தயவு செய்து தொடரவும் >>>>>>>>>>>>

  6. NAREN

    ‘பாபா’ படம் சரியாய் போகல அப்டின்னு சொல்ல முடியாது பாஸ்…

    சும்மா கட்டு கதை … இழப்பீடும் பெருசா இருந்திருக்காது …

    ஏனென்றால் கிட்ட தட்ட 3 வருஷம் கழிச்சு நடிச்ச படம்…

    எல்லாரும் ஸ்க்ரீன் ல பாக்க ரொம்ப ஆர்வமா போனாங்க …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *