BREAKING NEWS
Search

ரஜினி பாராட்டினதில் வானத்தில் மிதக்கிறேன்! – எஸ்எஸ் ராஜமவுலி

ரஜினி பாராட்டினதில் வானத்தில் மிதக்கிறேன்! – எஸ்எஸ் ராஜமவுலி

நான் ஈ படம் பார்த்துவிட்டு சூப்பர் ஸ்டார் ரஜினி பாராட்டியதில் நான் இன்னும் வானத்தில் மிதந்து கொண்டிருக்கிறேன், என்று தெரிவித்துள்ளார் இயக்குநர் எஸ் எஸ் ராஜமவுலி.

தொடர்ந்து 9 சூப்பர் ஹிட் படங்களைக் கொடுத்தவர் என்ற அசாதாரண பெருமைக்குச் சொந்தக்காரர் எஸ்எஸ் ராஜமவுலி.

தமிழ் மற்றும் தெலுங்கில் நான் ஈ, ஈகா என இரு படங்களை எடுத்து ஒரே நேரத்தில் வெளியிட்டு, இரண்டையுமே ப்ளாக்பஸ்டர் ஆக்கியுள்ளார்.

தெலுங்குப் பட இயக்குநர் என்ற வரையறைக்குள் இவரை ஒதுக்கிவிட முடியாது. காரணம் இவருக்கு தமிழ் சினிமா உலகின் மீது அதீத காதல். எனக்கு இந்திப் படங்கள் கூட வேண்டாம். தெலுங்கு மற்றும் தமிழ்ப் பட உலகம் போதும் என்கிறார்.

ஏன் என்று கேட்டால், “தமிழ், தெலுங்கு ரசிகர்களின் ரசனை கிட்டத்தட்ட ஒரே மாதிரிதான். என் படங்கள் அவர்களுக்காக இருந்தாலே போதும். இந்திப் பட உலகம் வேறு. எனக்கு அது வேண்டாம்,” என்கிறார் உறுதியாக.

நான் ஈ-யை இந்தியில் எடுக்கப்போவதாக சொல்கிறார்களே, என்று கேட்டால், ‘ஒண்ணும் பிரச்சினையில்லை. கதையை நான் கொடுத்துவிடுகிறேன். யார் வேண்டுமானாலும் விரும்பியபடி எடுக்கட்டும். ஆனால் எனக்கு வேண்டாம். எடுத்ததையே திரும்ப ரீமேக் செய்வது எத்தனை போர் தெரியுமா?, என்கிறார்.

அவரிடம் தமிழ் சினிமா குறித்துப் பேசியபோது, “தமிழ் சினிமா எனக்கு ரொம்பப் பிடிக்கும். தெலுங்கில் வேலை பார்த்தால் என்ன மாதிரி வசதி இருக்குமோ அதே மாதிரி தமிழிலும் கிடைக்கிறது. என்னைக் கேட்டால் தமிழும் தெலுங்கும் இரட்டையர்கள் மாதிரிதான். எனக்கு ஹைதராபாதும் சென்னையும் ஒரே மாதிரி ஃபீலைத் தருகின்றன. வேறு எங்கும் இந்த மாதிரி உணர முடியாது. அதே போல, தமிழ் ரசிகர்கள் கொடுக்கும் வரவேற்பு.. சான்ஸே இல்லை. எனக்கு இது பிடித்திருக்கிறது..,” என பாராட்டித் தள்ளுகிறார்.

அடுத்து அஜீத்தை வச்சு படம் பண்றதா ஒரே பேச்சா இருக்கே…

அது சரியான காமெடி சமாச்சாரம் போங்க. நான் அஜீத்கிட்ட பேசவே இல்லை. ஆனா, அவரை இயக்கப் போறேன்னு அதுக்குள்ள செய்தி. என் ஹீரோ அவர் இல்லை!

சரி, நான் ஈ படத்துக்கு கிடைத்த பாராட்டுகளில் முக்கியமானது..?

நானே சொல்ல வேண்டும் என நினைத்தேன். இந்தப் படத்துக்கு கிடைத்த பாராட்டுகளில் முக்கியமானது, சூப்பர் ஸ்டார் ரஜினி சாருடையதுதான். அவரைப் போன்ற உண்மையான ரசிகரைப் பார்க்க முடியாது. எனக்கு பெரிய விருது கிடைச்ச மாதிரி உணர்கிறேன்.

தமிழ் சினிமாவில் உங்களைக் கவர்ந்தவர் யார்.. யாரை இயக்க வேண்டும் என கனவு காண்கிறீர்கள்?

இரண்டு கேள்விக்குமே ஒரே பதில்தான். எனக்குப் பிடிச்ச ஒரே ஹீரோ, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். அவரை இயக்க வேண்டும் என்பது என் கனவு. நிறைவேறுமா.. இல்லையா என்பதல்ல முக்கியம். ஆனால் ரஜினி சாரை வைத்து காலத்தால் அழியாத ஒரு ஆக்ஷன் காவியத்தைத் தர முடியும் என நம்புகிறேன்.

ரஜினி சாரை சந்தித்தீர்களா?

ஆமாம்.. அப்படியொரு அற்புதமான தருணம் எனக்கு வாய்த்தது. என் கனவு நாயகனே, நான் இயக்கிய படத்தை  என்னுடன் பார்த்துப் பாராட்டியதை விட, எனக்கு என்ன பெருமை வேண்டும்?

என்னுடைய ‘மகதீரா’ பார்த்துட்டு என்னை போன்ல கூப்பிட்டார். ‘ஃபென்டாஸ்டிக் வொர்க் ராஜமௌலி’ன்னு பாராட்டினார்.

இப்ப ‘நான் ஈ’ படத்தை என்னோடதான் பார்த்தார். ‘நீங்க வானத்தைத் தொட்டுட்டீங்க’னு உற்சாகமா பாராட்டினார். நான் தரையிலேயே இல்லை!

நான் பார்த்துப் பார்த்து சிலிர்க்கும் அற்புதமான கலைஞர் ரஜினி சார். அவர் பாராட்டினதுல எனக்குத் தலைகால் புரியலை. இன்னும் வானத்துல மிதந்துட்டுதான் இருக்கேன்.”

சரி, தலைவரை எப்போ இயக்கப் போறீங்க?

அதை அவர்தான் சொல்ல வேண்டும். சொல்லக்கூட வேணாம்.. உத்தரவிட்டா போதும்…!

-அடடா.. நம்மை விட பெரிய ரஜினி ரசிகரா இருக்காரேப்பா…

வினோ
-என்வழி ஸ்பெஷல்
7 thoughts on “ரஜினி பாராட்டினதில் வானத்தில் மிதக்கிறேன்! – எஸ்எஸ் ராஜமவுலி

 1. kumaran

  சூப்பர் ஸ்டாரின் சூப்பர் ரசிகர்,

 2. மு.முத்துக்குமார்

  தலைவரை ராஜமவுலி இயக்கினால் படம் மிகப்பெரிய வெற்றி பெறும்.

 3. s venkatesan, nigeria

  நான் பணி புரியும் இடத்தில் பெரும்பாலோர் தெலுங்கர்களே (உரிமையாளரும் தெலுங்கர்தான்). அவர்கள் கருத்துப்படி தொடர்ந்து எட்டு படங்கள் ஹிட் படங்களாம்.

 4. micson

  ரஜினி, ராஜ மௌலியின் காம்பினேசனில் பாக்ஸ் ஆபீஸ் உண்மையிலே அதிரும்

 5. kalaivanan

  எப்புடி கல்லா கட்டுறதுன்னு நல்லாவே தெரிஞ்சி வச்சிருக்காரு இந்த ஈ

 6. maayavi

  //எப்புடி கல்லா கட்டுறதுன்னு நல்லாவே தெரிஞ்சி வச்சிருக்காரு இந்த ஈ//

  சும்மா எடுத்தோம் கவுத்தோம்னு பேசக்கூடாது. அவரு இயக்கி கல்லா கட்டுன எட்டு படத்துலயும் ரஜினி இல்லை. ஏழு பில்லியன் ஜன தொகை கொண்ட உலகில், 1 .2 பில்லியன் ஜனத்தொகை கொண்ட இந்தியாவில் ஒன்றிக்கு மேல் திறமைசாலிகளுக்கு இடமுண்டு.

  டூ மச் of ஹீரோ வொர்ஷிப் லைக் திஸ் இஸ் injurious டு health

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *