BREAKING NEWS
Search

விஜய் ஆன்டனி இசையில் சூப்பர் ஸ்டார் ரஜினி பிறந்த நாள் ஸ்பெஷல் ஆல்பம்… – ராகவா லாரன்ஸ்

சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினியின் பிறந்த நாளையொட்டி புதிய ஆல்பம் ஒன்றை வெளியிடுகின்றனர் நடிகர் ராகவா லாரன்ஸும் இசையமைப்பாளர் விஜய் ஆன்டனியும்.

வருகிற 12-12-12 அன்று ரஜினிக்கு 62 வயது பூர்த்தியாகிறது. இதையொட்டி அவரது ரசிகர்கள் பல்வேறு கொண்டாட்டங்களுக்கான ஏற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

திரையுலகில், ரஜினியை கவுரவிக்கும் வகையில் திரைப்பட நிகழ்வுகளுக்கு ஏற்பாடுகள் நடக்கின்றன.

நடிகர், இயக்குனர் ராகவா லாரன்ஸும், இசையமைப்பாளர் விஜய் ஆன்டனியும் இணைந்து இசை ஆல்பம் தயாரித்து வெளியிடுகின்றனர்.

இது குறித்து ராகவா லாரன்ஸ் கூறுகையில், “சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்துக்கு உலகம் முழுவதும் லட்சக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். நானும் அவரது ரசிகன். இந்த ஆண்டு ரஜினியின் பிறந்த நாள் 12-12-12 அன்று வருகிறது. இது விசேஷமான தேதி.

எனவே ரஜினிக்கு அன்பு பரிசாக வழங்க இசை ஆல்பம் ஒன்றை தயாரித்து வருகிறேன். 12-12-12 அன்று இந்த குறுந்தகடு வெளியிடப்படும். ரஜினி மீது ரசிகர்கள் வைத்திருக்கும் அன்புக்கு மரியாதை செலுத்தும் வகையில் இந்த ஆல்பத்தை உருவாக்கி வருகிறேன்.

இதற்கான பாடல்களுக்கு திரைப்பட இசை அமைப்பாளர் விஜய் ஆண்டனி இசை அமைக்கிறார். ரஜினி ரசிகர்களை மகிழ்விக்கும் வகையில் இது அமையும்,” என்றார்.

தலைவருக்கு சிறப்பு சேர்ப்பது சந்தோஷம்தான்… ஆனால் அது வசூல் நோக்கிலோ, விளம்பர அல்லது வியாபார நோக்கிலோ இல்லாமலிருந்தால் இரட்டிப்பு சந்தோஷம்தான்!!

-என்வழி

 




4 thoughts on “விஜய் ஆன்டனி இசையில் சூப்பர் ஸ்டார் ரஜினி பிறந்த நாள் ஸ்பெஷல் ஆல்பம்… – ராகவா லாரன்ஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *