BREAKING NEWS
Search

இன்று பிறந்திருப்பது நாளல்ல.. ஒரு நட்சத்திரம்! – பார்த்திபன்

இன்று பிறந்திருப்பது நாளல்ல.. ஒரு நட்சத்திரம்! – பார்த்திபன்

rajini-parthi
ன்று பிறந்திருப்பது நாளல்ல
ஒரு நட்சத்திரம்!

தேர் இழுக்கவே ஊர் கூட வேண்டும்
ஊருக்குள் பேரெடுக்க நூறு தேராவது இழுக்கவேண்டும் ஒருவர்.

உலகம் முழுக்க ஒருவரின் ‘லிங்கா’ தரிசனம் காண முன் பதிவு செய்கிறதென்றால் அவர் முன் பிறவியில் ஏதோ புண்ணியம் செய்திருத்தல் வேண்டும்.
(அ’பூர்வ ஜென்ம கர்மா)

என் மகர் ராக்கி எந்த பிரமாண்டத்தையுமே பிரமித்து பாராமல் எதையுமே மிக சாதாரண பார்க்கும் இயல்புடையவர். என்னையெல்லாம் அரைக்கால் சட்டை அணிந்து கோலி ஆடும் பையனாகவே குனிந்து பார்ப்பார் நானும் அதை அலாதியாய் ரசிப்பேன்.நேற்றிரவு அவரின் fb பதிவில்,

“3 mins more…”என்றிருந்தது. மணி பார்த்தேன் 11.57pm. அப்போதுதான் ரஜனி சாரின் அற்புதம் விளங்கியது எனக்கு. ஒரு நிமிடம் இருக்கும் தருவாயில் திருமதி ரஜனியை அழைத்து சாருக்கு என் வாழ்த்துகளை சொல்லுங்கள் என்றேன்.
தலையணையில் post செய்தால்
தலைவனிடம் delivery ஆகிடுமே!

-ரா பார்த்திபன்




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *