BREAKING NEWS
Search

ஜெயலலிதாவின் இரண்டு ஆண்டு ஆட்சி எப்படி? – இது ஜூவி சர்வே!

ஜெயலலிதாவின் இரண்டு ஆண்டு ஆட்சி எப்படி? – இது ஜூவி சர்வே!

jj-cm

‘மக்கள் மனசு’ என்ற தலைப்பிலான ஜூ.வி. நடத்திய சர்வேயின் முடிவு இது.

தமிழக அரசியல் குறித்து 48 கேள்விகளை உள்ளடக்கி இரண்டு கட்டங்களாக நடந்த இந்த மெகா சர்வேயில், தமிழக அரசைப் பற்றிய கேள்விகளும் அடக்கம்.

வரும் மே 16-ம் தேதியோடு அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்து இரண்டு ஆண்டுகள் நிறைவடைகின்றன. அதையட்டியே கேள்விகளைத் தயாரித்திருந்திருந்தது ஜூவி. 7,756 நபர்கள் பங்கேற்ற இரண்டாம் கட்ட சர்வேயின் தொடர்ச்சி இது.

கடந்த காலங்களில் சர்வே எடுத்தபோது ”எங்களுக்கு இலவசப் பொருட்கள் கிடைக்கவில்லை. நிவாரணம் தரவில்லை” போன்ற கோரிக்கைகளையே அதிகமாக நம் முன் வைத்தார்கள். ஆனால் இப்போதோ, ”மின்வெட்டுப் பிரச்னை எப்போது தீரும் சார். இதற்கு விடிவே கிடையாதா?” என்று பட்டிதொட்டி எங்கும் கேள்விக்கணைகளால் துளைத்தார்கள்.

சர்வே முடிவிலும் இது எதிரொலித்தது. ‘அ.தி.மு.க. ஆட்சியில் உங்களை அதிகம் பாதித்தது?’ என்கிற கேள்விக்கு ‘மின்வெட்டு’ என 69 சதவிகித நபர்கள் கருத்து சொல்லியிருக்கிறார்கள். தமிழகத்தின் மின்வெட்டுப் பிரச்னை… ‘மோசம்’ என்று 47 சதவிகித நபர்களும் ‘தி.மு.க. ஆட்சியைவிட மோசம்’ என 39 சதவிகித நபர்களும் கருத்தைப் பதிவுசெய்துள்ளனர். ஒட்டுமொத்தமாக ஜெயலலிதாவின் இரண்டு வருட ஆட்சியைப் பற்றி மதிப்பீட்டுக்கு ‘சுமார்’ என்றே பெரும்பாலானவர்கள் டிக் அடித்திருந்தார்கள். மோசம், மிக மோசம் என்ற நிலைமைக்குப் போகாததை நினைத்து அ.தி.மு.க-வினர் சந்தோஷப்படலாம்.

ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தால், சட்டம் – ஒழுங்கு காப்பாற்றப்படும் என்கிற இமேஜ் சரிந்திருக்கிறது. இப்போது சட்டம் – ஒழுங்கு சுமார்தான் என 54 சதவிகித மக்கள் சொல்கிறார்கள்.

தமிழக அரசைவிட மத்திய அரசின் மீது மக்களுக்கு ஏக வெறுப்பு. மத்திய அரசின் நான்கு வருட ஆட்சி பற்றிய கேள்விக்கு ‘மிக மோசம்’ என 58 சதவிகித மக்கள் கருத்து சொல்லி இருக்கிறார்கள்.

p18 p19 p20

ஜூவி சர்வே முடிவு இது… உங்கள் முடிவு என்ன? கருத்துக்களைப் பதிவு செய்யுங்கள்…

-Courtesy: ஜூனியர் விகடன்

 
11 thoughts on “ஜெயலலிதாவின் இரண்டு ஆண்டு ஆட்சி எப்படி? – இது ஜூவி சர்வே!

 1. raja

  சமீபத்தில் பஜனை என்ற தலைப்பில் ஒரு கட்டுரை வாசித்தேன் .. ஆனந்த விகடனில் பஜனை நடத்தி முடித்து விட்டு (ஜெய் ஹோ ஜெயா ஹோ) இப்பொழுது ஜூவியில் பஜனை நடத்தி கொண்டிருக்கிறார்கள் போலும்… இது கண்டிப்பாக மக்களிடம் எடுக்கப்பட்ட செர்வேயாக இருக்க வாய்ப்பே இல்லை … மேல்மட்டத்தை திருப்தி படுத்த இவர்களாகவே பொய்யாக காட்டியிருக்கும் சர்வே…

 2. தேவராஜன்

  செம ஜால்ரா சாமி. என்னமா தடவிக் கொடுத்திருக்காங்க அம்மாவை. தேர்தல் நேரத்தில் கரெக்டா தி்முக ஜெயிக்கும்னு எழுதுவானுங்க பார்த்துக்கிட்டே இருங்க. நாள் பூரா இருட்லயே கிடந்தாலும் புத்தி வரலயே மக்கா.

 3. KUMARAN

  சட்டம் ஒழுங்கை தவிர அனைத்து துறையிலும் படு மோசம் என்று தெரிகிறது!

 4. anbudan ravi

  சத்தியமாக மக்கள் கொதித்திப்போய் இருக்கிறார்கள். அதிமுக வாசிகளே அம்மாவை வசைபாட ஆரம்பித்துவிட்டார்கள். மின்சாரம் இல்லாமல் அவதிப்பட்டு நோய்வாய்ப்பட்டு நிறைய கிராமங்களில் மக்கள் வேதனையை அனுபவித்துகொண்டிரிக்கிரார்கள். மத்திய அரசாங்கத்தில் மேல் உள்ள கோபத்தினால் இந்தமுறை காங்கிற்கு வாக்கு போட மாட்டார்கள், ஆனால் சட்டசபைக்கு அதிமுகவை தவிர வேறு எதற்கு வேண்டுமானாலும் போடுவார்கள்.

  சட்டம் ஒழுங்கும் மிக சுமார்தான், காரணம் சட்டம் ஒழுங்கை கெடுப்பதே அரசியல்வாதிகளும் அவர்களின் பிள்ளைகளும் தான், இதனால் எந்த நடவடிக்கைகளும் காவல்துறையால் எடுக்க முடியவில்லை. எங்கு பார்த்தாலும் கொலைகள் கற்பழிப்புகள். அரசு தீவிர நடவடிக்கை எடுக்காவிடில் மிகவும் மோசமான விளைவுகளை மக்கள் சந்திக்க நேரிடும்.

  அன்புடன் ரவி.

 5. குமரன்

  வரப் போகும் பாராளுமன்றத் தேர்தலுக்கு எந்த நேரத்தில் போய் வாக்குக் கேட்பது என்ற குழப்பத்தில் இருக்கிறார்கள்.

  இரவு நேரம் என்றால் போகும் இடத்தில் மின்சாரம் இருக்குமா?

  சரி, பகல் என்றால், மின்சாரம் இல்லாமல், வெய்யிலின் கொடுமையில் வாடும்போது எந்த மாதிரி எல்லாம் திட்டுவார்கள்?

  எப்போது போனாலும் நிலைமை கஷ்டம்தான்.

 6. குமரன்

  எனது கருத்துக்கள் இதோ:

  கேள்வி 1: ஆட்சிக்குத்தான் அவப் பெயர்.
  கேள்வி 2: மின்வெட்டுப் பிரசினை
  கேள்வி 3: மோசம்
  கேள்வி 4: மோசம்
  கேள்வி 5: மிக மிக மிக மிக மோசம், இதை விடக் கேடுகெட்ட ஆட்சி சுதந்திர இந்தியாவில் இதுவரை இருந்ததே இல்லை.
  கேள்வி 6: அதிரவைக்கிறது. விசாரணைக்குப் பிறகு தெரியும் என்ற பதிலை வைத்ததே எந்த அளவுக்கு மக்களைச் சுரணையற்றவர்களாக அரசியல் வாதிகள் பார்க்கிறார்கள் என்பதற்கு உதாரணம்.
  கேள்வி 7: இனி எப்போதும் காங்கிரசுக்கு வாக்களிக்கவே மாட்டேன். ஈழத்துப் படுகொலைக்குக் கூட்டாளியாக சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்தப்பட வேண்டியவர்கள் இன்றைய ஆட்சியாளர்கள், குறிப்பாக சோனியாவும் அவரது குடும்பமும்.
  கேள்வி 8: இரண்டு பேருமே
  கேள்வி 9: இரண்டுக்கும் சம்பந்தமே இல்லை. ஏனெனில் கூடங்குளம் அணு மின் நிலையம் திறக்கப் படும் என்ற நம்பிக்கையே இல்லை.
  கேள்வி 10: தி.மு.க ஆட்சியை விட மோசம்.

  தமிழகத்து மக்களுக்கு மின்வெட்டு
  ஜெயா ஆட்சிக்கு வைக்கப் பட்ட வேட்டு !!!

 7. Jegan

  Jv and Av , both r JJ’s jalras…they have conducted survey in their own offices…
  The candidate who is going to win with more number of votes in next state election will be Mr Arcaud veerasamy.

 8. sidhique

  அரசியல் வாதிகள் இல்லாத ஆட்சி வேண்டும் – அதுக்கு நம் தலைவர் தான் வரவேண்டும்

 9. S.Vivek Amuthan

  Varala nu solla Kaveri water ella கரண்ட், Kadantha அஞ்சு வருதுல தனோட குடும்பத்தோட சேந்து தமிழ் நாடு மட்டும் அல்ல இந்திய வையும் கொள்ள அடிச்சா பொறம்போக்கு வம்சம் adutha அஞ்சு வருசதுகுனு ஏதும் யோசிக்கல,
  யோச்க தெரியல thruda therinja கபோதிங்க எப்படி நாட்ட Epppadi kapathuvanga
  கரண்ட்த vachikina வஞ்சகம் பண்ணுறாங்க நம்ம கிட்ட மின்சார வளம் இல்லை அத்த எதுக்குங்க, பட்ஜெட் ட பதிங்கஇல்லைய பொருங்க தமிழ் நாடு மின் வெட்டில்லா மாநிலம் ஆகும்

 10. VIJAY

  மொத்ததுல ஜூவி நக்கு நக்கி இருக்கான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *