BREAKING NEWS
Search

மிரட்டல் பேர்வழி விநியோகஸ்தர் சிங்காரவேலன் மீது தயாரிப்பாளர் சங்கம் போலீசில் புகார்!

மிரட்டல் பேர்வழி விநியோகஸ்தர் சிங்காரவேலன் மீது தயாரிப்பாளர் சங்கம் போலீசில் புகார்!

kalaipuli_S_thanu_Tணம் கேட்டு தொடர்ந்து மிரட்டுவதாக விநியோகஸ்தர் சிங்காரவேலன் மீது தயாரிப்பாளர் சங்கத் தலைவர் எஸ் தாணு, செயலாளர் டி சிவா உள்ளிட்டோர் இன்று சென்னை கமிஷனரிடம் புகார் தந்தனர்.

லிங்கா படத்தை திருச்சி தஞ்சையில் விநியோகித்த நிறுவனத்தின் பங்குதாரர்களில் ஒருவரான சிங்காரவேலன், அந்தப் படம் வெளியான நான்காவது நாளே படத்துக்கும் அதன் நாயகன் சூப்பர் ஸ்டார் ரஜினிக்கும் எதிராக அவதூறுப் பிரச்சாரம் செய்தார்.

லிங்காவுக்கு நஷ்ட ஈடு கேட்டு அழிச்சாட்டியம் செய்து, கணிசமான தொகையையும் பெற்றுக் கொண்டார். ஆனால் அத்துடன் அமைதியாகிவிடவில்லை. அவ்வப்போது லிங்கா பெயரை வைத்துக் கொண்டு ஆதாயம் பார்க்க புதுப்புது பிரச்சினைகளைக் கிளப்பி வந்தார்.

இந்த நிலையில், வரும் செப்டம்பர் 4-ம் தேதி பாயும் புலி படம் வெளியாகிறது. இந்தப் படத்தை வெளியிட, தனக்கு மேலும் பணம் தரவேண்டும் என்று கேட்டு மிரட்டுவதாகவும், திரையரங்கு உரிமையாளர்களை அதற்கு தூண்டுவதாகவும் படத்தின் தயாரிப்பாளரான வேந்தர் மூவீஸ் குற்றம்சாட்டியது.

பாயும் புலி படத்துக்கு முட்டுக்கட்டை மேலும் நீடிக்கவே, அதற்குக் காரணமான சிங்காரவேலன் மீது இன்று சென்னை போலீஸ் கமிஷனரிடம் எழுத்துப்பூர்வமாக புகார் அளித்துள்ளனர் தயாரிப்பாளர் சங்கத்தினர்.tsiva

சங்கத்தின் தலைவர் கலைப்புலி தாணு, செயலாளர்கள் டி சிவா, ராதாகிருஷ்ணன், துணைத் தலைவர்கள் பிஎல் தேனப்பன், எஸ் கதிரேசன், வேந்தர் மூவீஸ் மதன் உள்பட பல நிர்வாகிகளும் இணைந்து இந்தப் புகாரை கமிஷனர் ஜார்ஜிடம் அளித்தனர்.

புகாரைப் பெற்றுக் கொண்ட கமிஷனர் ஜார்ஜ், உரிய நடவடிக்கை மேற்கொள்வதாக உறுதியளித்தார்.

நியாயமாக இந்தப் புகாரை, அந்த சிங்காரவேலன் முட்டுச் சந்தில் நின்றபடி லிங்காவுக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிக்கும் எதிராக அவதூறு பரப்பியபோதே கொடுத்திருக்க வேண்டும். அன்று அமைதியாக வேடிக்கைப் பார்த்தவர்கள், இன்று தங்களுக்கு தலைவலி என்றதும் கமிஷனர் அலுவலகம் சென்றுள்ளனர்.

-என்வழி




6 thoughts on “மிரட்டல் பேர்வழி விநியோகஸ்தர் சிங்காரவேலன் மீது தயாரிப்பாளர் சங்கம் போலீசில் புகார்!

  1. srikanth1974

    பிச்சக்காரனுக்கு இன்னும் தட்டு ரொம்பல போல

    திருவோடு ஏந்தியவன் – நடுத்
    தெருவோடு நாறிப்போக .

  2. மிஸ்டர் பாவலன்

    சிங்காரவேலன் சூப்பர் ரஜினியை இடக்கு செய்து
    பவர் ஸ்டாரை வைத்து ஒரு படம் தயார் செய்து வருகிறார்.
    இந்தப் படம் தோல்வி அடைந்தால் ஒரு தயாரிப்பாளரின்
    வலி என்ன என்பதை அவர் உணர்வார்.. நன்றி !

    -=== மிஸ்டர் பாவலன் ==-

  3. Arokkiyaraj

    இனியாவது தமிழ் திரை உலகம் சுயநலம் பார்க்காமல் அனைவரும் ஒன்று சேர்ந்து காவல் துறையிடம் புகார் செய்து இந்த நாயை (மன்னிக்கவும்) பிடித்து சிறையில் போட்டு முட்டிக்கு முட்டி தட்டி அவனது பின்புலம் என்ன யார் அவனை இயக்குகிறார்கள் என்று பார்க்க வேண்டும். எனது சந்தேகம் எல்லாம் அந்த தேவாங்கு முஞ்சி பய மேல தான் உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *