BREAKING NEWS
Search

‘பாட்ஷா ஒரு க்ளாஸிக்.. அதை ரீமேக் பண்ண முடியாது!’ – பிரபு தேவா

அவரவர் தாய்மொழியில் பேசி கோச்சடையான் குழுவை அசத்தும் ரஜினி

சூப்பர் ரஜினிகாந்த் கோச்சடையான் குழுவில் பணிபுரிபவர்களுடன் அவரவர் தாய் மொழியில் பேசி அசத்துகிறாராம்.

கோச்சடையான் படத்தின் சிறப்புகளில் ஒன்று, இந்த படக்குழுவில் பல்வேறு மொழி பேசும் கலைஞர்கள் இடம்பெற்றுள்ளதுதான். அவர்களில் பலருக்கும் தமிழோ ஆங்கிலோ முழுமையாகத் தெரியாது. ஆனால் நம்ம சூப்பர் ஸ்டாருக்குதான் பல மொழிகள் தெரியுமே…

அதனால் பிறமொழிக் களைஞர்களுடன் பேசுகையில் அவரவர் தாய் மொழியில் பேசி, அவர்களின் சங்கடத்தைக் குறைத்துவிடுகிறாராம். இது படக்குழுவினருக்கு இன்ப அதிர்ச்சியாக உள்ளதாம். இந்தி நடிகர் ஜாக்கி ஷெராப்புடன் பேசுகையில் இந்தியிலும், தீபிகாவுடன் கன்னடத்திலும் பேசுகிறாராம்.

தீபிகா இந்தியில் நடித்தாலும் கர்நாடகத்தைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

பணக்காரன் படத்தில் ரஜினி தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி என பல்வேறு மொழிகளில் வில்லன்களுடன் ரஜினி பேசும் காட்சிதான் நினைவுக்கு வருகிறது!

‘பாட்ஷா ஒரு க்ளாஸிக்.. அதை ரீமேக் பண்ண முடியாது!’ – பிரபு தேவா

டந்த இரு தினங்களாக வரும் முக்கிய சினிமா செய்தி – பாட்ஷா படத்தை இந்தியில் பிரபு தே்வா இயக்கப் போகிறார்… அதில் அஜய் தேவ்கன் நடிக்கிறார் என்பதுதான்.

இதுகுறித்து பிரபு தேவாவிடமே கேட்டபோது, “எங்கிருந்துதான் இந்த மாதிரி செய்திகள் வருகின்றனவோ தெரியவில்லையே… ரஜினி சார் நடித்த பாட்ஷா ஒரு க்ளாசிக் படம். இன்னும் எத்தனை ஆண்டுகள் கழித்துப் பார்த்தாலும் சுவாரஸ்யம் குறையாமல் பார்த்துக் கொண்டே இருக்கலாம்.

அந்தப் படத்தை ரீமேக் செய்வதெல்லாம் முடியாத விஷயம். அந்த அழகு, நம்பகத்தன்மை எதுவுமே ரீமேக்கில் இருக்காது. நான் அஜய் தேவ்கனை வைத்து படம் பண்ணுவது உண்மைதான். ஆனால் அதன் கதை வேறு,” என்றார்.

-என்வழி




8 thoughts on “‘பாட்ஷா ஒரு க்ளாஸிக்.. அதை ரீமேக் பண்ண முடியாது!’ – பிரபு தேவா

  1. HOTLINKSIN.COM

    தமிழில் ரீமேக் பண்ணலாம்.. அஜித் நடித்தால் கலக்கலாக இருக்கும்…
    ……………….
    அஜித்துடன் நடிக்க காத்து கொண்டிருக்கும் ஓகே ஓகே நாயகி..!
    http://www.hotlinksin.com/story.php?id=11025
    /////////
    ஒன்றரை மணிநேரத்தில் உங்களின் உயிரைக் குடிக்கும் கொக்கா கோலா!
    http://www.hotlinksin.com/story.php?id=10959

  2. simple fan of superstar!

    ஹலோ யாருப்பா அது
    தலைவரோட கிளாசிக் படத்தை ரீமேக் பண்ணவே கூடாதுன்னு சொன்ன அஜித்தா ? பில்லாவில நடந்து கண்ணாடி போட்டு படம் காட்னா மாதிரியா ? என்ன அஜித்தை வச்சு காமெடி கீமெடி பண்ணலையே ????

  3. sitlu

    ஹலோ
    பேன் ஒப் விஜய்

    நீங்க செம காமெடி பண்றீங்க போங்க !!

  4. saravanan

    அஜித் அண்ட் விஜய் இரண்டு பேராலும் சும்மா நடக்க மட்டுமே முடியும். ப்ளீஸ் ரிஸ்க் எடுக்க வேண்டாம். வேணா தலைவரை வச்சு திரும்ப எடுங்க.

  5. prabhu

    ரீமேக் பண்ணலாம் அனால் இந்த படத்தை பண்ண முடியாது
    அந்த அளவுக்கு அதிரடி படம் அதற்கு பொருத்தமான நடிகர் யாரும் இல்லை
    அப்படியே நடித்தாலும் அஜித்தை தவிர யாரும் இல்லை அவரும் 60% தான் ரீச் பண்ண முடியும் தயவு செய்து விஜய் யா வைத்து காமெடி பண்ணிடதிங்க அப்புறம் வீனா கலவரம் தான் வரும்

  6. robo

    After few years people LL say Siva Karthikeyan seema comedy ya grow up kids no one is born to do badha except thalaivar

  7. மிஸ்டர் பாவலன்

    சூப்பர் ஸ்டார் ரஜினி, உலக நாயகன் கமல் – இவர்கள் படத்தை மற்றவர்கள்
    ரீமேக் செய்வது கடினம்!

    இளமை ஊஞ்சலாடுகிறது போல ஒரு படத்தை மற்றவர்களால் நடிக்க
    முடியாது. க்ளைமாக்ஸ் காட்சியில் ரஜினி நடிப்பில் கமலை மிஞ்சி விட்டார்!

    -=== மிஸ்டர் பாவலன் ==-

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *