Breaking News

நவம்பர் 26… மாவீரன் பிரபாகரன் தினம்!

Monday, November 26, 2012 at 3:09 pm | 913 views


பிரபாகரன்…

பெயரைக் கேட்ட மாத்திரத்தில் உச்சியிலிருந்து உள்ளங்கால் வரை உடல் சிலிர்ப்பதை உணர்கிறீர்களா…

இது இனம், மொழியைத் தாண்டி, அந்த மாவீரன் தமிழரது ரத்தத்தில் கலந்த உறவாகிவிட்டதன் அறிகுறி!

தமிழர் அவருக்குத் தந்தது தேசியத் தலைவர் என்ற பெருமதிப்பு. ஆனால் அதைத் தாண்டி  அவர் ஒவ்வொரு தமிழ்க் குடும்பத்துக்கும் அண்ணன், தம்பி, குழந்தைகளுக்கு அன்பான மாமன்… இளைஞர்களுக்கோ ஒப்பில்லா ஆசான்!

நான்கு வயதிலிருந்தே தன் இனம் படும் பாடுகளை பார்த்து மனம் வெதும்பி, மீசை அரும்புவதற்கு முன்பே போராளியானவர் தலைவர் பிரபாகரன்.

ஒரு முறை அதிகாலை மூன்று மணிக்கு பிரபாகரனை தேடி போலீசார் அவரது வீட்டுக்கு வந்தனர். அப்போதுதான் தங்களது மகன் புரட்சி இயக்கத்தில் ஈடுபட்டிருக்கிறான் என்ற உண்மை பெற்றோருக்கு புரிந்தது. கதவு தட்டுவதை வைத்து போலீசார்தான் தன்னை தேடுகின்றனர் என்பதை உணர்ந்து கொண்ட பிரபாகரன் தப்பிவிட்டார்.

குடும்பத்துக்கு பயன்பட மாட்டேன்…

பிரபாகரனை தேடி சென்று கண்டுபிடித்து வீட்டுக்கு அழைத்து வந்தார் அவரது தந்தை. அப்போது தன் நிலைமையை அவரிடம் பிரபாகரன் கூறிய போது, ‘உங்களுக்கோ, குடும்பத்துக்கோ நான் பயன்பட மாட்டேன். என்னால் உங்களுக்கு எந்த தொல்லையும் வேண்டாம். என்போக்கில் விட்டு விடுங்கள். என்னை எதிர்பார்க்காதீர்கள்’ என்று கூறி வீட்டை விட்டு வெளியேறிவிட்டார். அதன் பின் வீடு திரும்பவேயில்லை.

16 வயதிலேயே பஸ்ஸை எரித்துப் போராட்டம் செய்தவர் பிரபாகரன்.  தனது 18 வயதில் புதிய தமிழ்ப் புலிகள் இயக்கத்தை ஆரம்பித்தார்.

தனது 20வது வயதில் 1976 மே 5ம் நாள் தமிழ் புதிய புலிகள் இயக்கத்தை – தமிழ் ஈழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை அறிவித்தார் பிரபாகரன்.

கொடியில் புலி.. ஏன்?

கொரில்லா இயக்கமாக வெளிக் காட்டுவதற்காகவே, இயக்கத்தின் சின்னமாக புலியை தேர்வு செய்தார். 1978ல், 11 முக்கிய தாக்குதல் சம்பவங்களை நேரடியாக பொறுப்பேற்று நடத்தியவர் பிரபாகரன்.

ராஜீவ் Vs பிரபாகரன்

அடுத்து பிரதமராகப் பதவியேற்ற ராஜீவுக்கும், பிரபாகரனுக்கும் இடையில் இணக்கமான சூழ்நிலை உருவாகவில்லை. இலங்கை அரசுக்குச் சாதகமாக ராஜிவ் செயல்படுவதாக பிரபாகரன் கருதினார்.

ஈழப் போராட்டத்தை பல வகையிலும் திசை திருப்பிய பெருமை ராஜீவையே சாரும்.

இதற்கிடையில், புங்குடுதீவைச் சேர்ந்த மதிவதனியை பிரபாகரன் 1984ம் ஆண்டு அக்டோபர் 1ம் தேதி சென்னையை அடுத்த திருப்போரூர் முருகன் கோவிலில் திருமணம் செய்து கொண்டார். இத்தம்பதியினருக்கு இரு மகன்கள் சார்லஸ் அந்தோணி, பாலச்சந்திரன் மற்றும் ஒரு மகள் துவாரகா பிறந்தனர்.

முப்படைகள் கண்ட முதல் விடுதலை போராட்ட அமைப்பு

புலிகள் (தரைப்படை), கடற்புலிகள் (கடல் படை) மற்றும் வான்புலிகள் (விமானப்  படை) ஆகிய மூன்று படைகளையும் கொண்ட ஒரே போராளி அமைப்பு என்ற பெயரைப் பெற்றது. 1993ல் உயிரை துச்சமாக எண்ணி, ரகசியமாக தாக்கும் கரும்புலி தற்கொலை படையினரையும் பிரபாகரன் துவக்கினார்.

கடந்த, 2002ல் நார்வே முயற்சியால் அமைதி முயற்சி மேற்கொள்ளப்பட்டது. அப்போதுதான் பிரபாகரன் பத்திரிகையாளர்களை சந்தித்தார். வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாக அது அமைந்தது.

அதன் பிறகு அவர் பத்திரிகையாளர்களைச் சந்திக்கவே இல்லை. ஆனால் தமிழகத்திலிருந்து திருமாவளவன், சீமான் உள்ளிட்டோர் அவரைச் சந்தித்துவிட்டு வந்தனர்.

ஈழத் தமிழர் விடுதலைப் போராட்டத்தை நேர்மையாகப் படமாக்க வேண்டும் என்று மிகவும் விரும்பினார் பிரபாகரன். இதற்காக பாரதிராஜா, மகேந்திரன் போன்ற இயக்குநர்களுடன் பேச்சும் நடத்தியுள்ளார்.

சாதி அமைப்பு முறையை வெற்றிகரமாக ஒழித்தவர் பிரபாகரன். அதுமட்டுமல்ல, அவரது ஆட்சியில் ஆணுக்கு நிகரான உரிமையை பெண்ணும் பெற முடிந்தது.

ராணுவ கல்விக்கு முக்கியத்துவம் அளித்த பிரபாகரன், அந்தக் கல்வியை முழுமையாக தமிழிலேயே கற்பிக்க வகை செய்திருந்தார். அதற்கான புத்தகங்களையும் தமிழிலேயே மாணவர்களுக்கு வழங்கியிருந்தார். இது மிகப் பெரிய சாதனையாக, தொலைநோக்கு சிந்தனையாக பார்க்கப்படுகிறது.

பிரபாகரன் இருக்கிறாரா இல்லையா என்பது இன்னும் பல ஆண்டுகளுக்கு தொடரும் கேள்வியாக இருக்கும் போலிருக்கிறது.  இதற்கு வாலியின் வார்த்தைகளை பதிலாகக் கொள்ளலாம்…

‘இருக்கிறானா ?
இல்லையா ?’
எனும் அய்யத்தை
எழுப்புவது இருவர் ;
ஒன்று –
பரம்பொருள் ஆன பராபரன்;
இன்னொன்று
ஈழத்தமிழர்க்கு –
அரும்பொருள் ஆன
பிரபாகரன் !

-என்வழி

Related Posts with Thumbnails
© The content is copyrighted to Envazhi and may not be reproduced on other websites.

Comments

10 Responses to “நவம்பர் 26… மாவீரன் பிரபாகரன் தினம்!”
 1. தங்கத் தலைவன் அண்ணன் பிரபாகரனுக்கு பிறந்த நாள் வாழ்த்துகள் …

 2. srikanth says:

  உமது உயிர்த் தியாகம்,வீண் போகாது.நிச்சயம் தமிழர் வாழ்வு ஒளிப் பெரும்.

 3. kumaran says:

  நமது ராஜீவ்காந்தி கொலை வழக்கில் முதல் குற்றவாளியாக இருபதுதான் மனதுக்கு கஷ்டமாக உள்ளது .

 4. arulnithya says:

  தேசியத் தலைவரை வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன். உங்கள் இலட்சியம் நிச்சயம் நிறைவேறும்

 5. karthik says:

  @ kumaran

  ராஜீவ்காந்தி தமிழர்க்கு செய்த துரோகத்தை நினைத்தால் அதவிட மனதுக்கு கஷ்டமாக உள்ளது…

 6. karthik says:

  வாழ்க தலைவரின் புகழ்.. வெல்க தமிழ் ஈழம்..

 7. Kumar says:

  மாவீரனை தமிழ் அரசே ஏமாற்றி இப்போது படும் துன்பகளுக்கு அளவில்லை.எவளவு நாடகங்கள் உண்ணாவிரதம் இருப்பது முதல் தன் பிள்ளைகளை காப்பாற்ற கலைஞர் ஆடினார்.இன்னும் மக்களின் கண்ணீர்களுக்கு அவர் பதில் சொல்ல வேண்டும்.

 8. Nakeeran says:

  தலைவா தலை வணங்குகிறேன் ….

Speak Your Mind

  Type in Tamil (Press Ctrl+g to toggle between English and Tamil)