BREAKING NEWS
Search

நாகேஷ் வேடம் பவர் ஸ்டாருக்கு… சௌகார் ஜானகி வேடம்?

நாகேஷ் வேடம் பவர் ஸ்டாருக்கு… சௌகார் ஜானகி வேடம்?


தில்லு முல்லு படத்தை ரீமேக் என்ற பெயரில் ஒரு வழி பண்ணுவது என்பதில் தெளிவாகத்தான் களமிறங்கியிருக்கிறார்கள்.

சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்த தில்லு முல்லு படத்தில் நடிகர் நாகேஷாக, நான்கே காட்சிகளில் வந்தாலும் கலக்கியிருப்பார் மறைந்த நாகேஷ்.

இப்போது அந்தப் படத்தின் ரீமேக்கில் நாகேஷ் வேடத்தில் நடிக்கவிருப்பவர் பவர் ஸ்டார் எனப்படும் டாக்டர் சீனிவாசன். தேங்காய் சீனிவாசன் கேரக்டரில் நடிப்பவர் பிரகாஷ் ராஜ்…

அப்ப சௌகார் ஜானகி வேடம்? கோவை சரளாவுக்காம்!

கும்கியை வாங்கியது ஸ்டுடியோ கிரீன்!

சூப்பர் ஸ்டார் ரஜினி, உலகநாயகன் கமல் ஆகியோரின் வாழ்த்துகளுடன் இசை வெளியீடு நடத்தி, பெரும் எதிர்ப்பார்ப்பை உருவாக்கியுள்ள கும்கி படத்தின் வெளியீட்டு உரிமையை வாங்கியுள்ளது ஞானவேல் ராஜாவின் ஸ்டுடியோ கிரீன் நிறுவனம்.

லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் தயாரித்துள்ள படம் இந்த கும்கி. நடிகர் பிரபுவின் மகன் விக்ரம் பிரபுவும் லட்சுமி மேனனும் அறிமுகமாகும் இந்தப் படத்தின் இசையை சமீபத்தில் வெளியிட்டனர் சூப்பர் ஸ்டார் ரஜினியும் உலக நாயகன் கமலும்.

இதனால் படம் குறித்த எதிர்ப்பார்ப்பு ஏகத்துக்கும் எகிறியது. பாடல்கள், ட்ரெயிலர் அனைத்துமே சிறப்பாக வந்திருந்ததால், வியாபார ரீதியாக படம் பெரிதாகப் போகும் என கோடம்பாக்கத்தில் பேசப்பட்டது.

இந்த நிலையில் நடிகர் சூர்யாவின் சகோதரர் ஞானவேல் ராஜாவுக்கு சொந்தமான ஸ்டுடியோ கிரீன் இந்தப் படத்தின் வெளியீட்டு உரிமையை வாங்கியுள்ளது. இதற்காக பெரும் விலை கொடுத்துள்ளார்களாம்!

 
தீபாவளி 2012: துப்பாக்கியுடன் மோதும் அலெக்ஸ் பாண்டியன்!  

ந்த தீபாவளிக்கு அநேகமாக  இரண்டு படங்கள்தான் வெளியாகும் போலிருக்கிறது. அவை, விஜய்யின் துப்பாக்கி (தலைப்பு இதுதானா என்பது இன்னும் உறுதியாகவில்லை), கார்த்தியின் அலெக்ஸ் பாண்டியன்.

விஜய் – அஜீத், விஜய் – சூர்யா என்பது போய், இப்போது விஜய் – கார்த்தி என்றாகிவிட்டதில் கார்த்தியின் ரசிகர்களுக்கு குஷியோ குஷி (கடந்த ஆண்டு தீபாவளிக்கு விஜய் – சூர்யா படங்கள் மோதியது நினைவிருக்கலாம்!).

நவம்பர் 13-ம் தேதி கிட்டத்தட்ட சரிசமமான அரங்குகளில் இரு படங்களும் வெளியாகவிருக்கின்றன.

துப்பாக்கியில் விஜய்க்கு ஜோடி காஜல். ஏ ஆர் முருகதாஸ் இயக்கியுள்ளார். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். கலைப்புலி தாணு தயாரிக்க, ஜெமினி வெளியிடுகிறது.

அலெக்ஸ் பாண்டியனை சுராஜ் இயக்கியுள்ளார். கார்த்திக்கு ஜோடி அனுஷ்கா. இந்த இருவரைவிட இப்போதைக்கு பவர்புல்லாக உள்ள சந்தானம் இந்தப் படத்துக்கு பெரும் பலம். தேவிஸ்ரீபிரசாத் இசையமைத்துள்ளார்.

-என்வழி ஸ்பெஷல்

தில்லுமுல்லு கேலரி
5 thoughts on “நாகேஷ் வேடம் பவர் ஸ்டாருக்கு… சௌகார் ஜானகி வேடம்?

 1. மிஸ்டர் பாவலன்

  //இப்போது அந்தப் படத்தின் ரீமேக்கில் நாகேஷ் வேடத்தில் நடிக்கவிருப்பவர் பவர் ஸ்டார் எனப்படும் டாக்டர் சீனிவாசன். //

  இந்தப் படம் சூப்பர் ஹிட் ஆகும் என்பதில் இப்போது சந்தேகம் இல்லை! 🙂 🙂

  -== மிஸ்டர் பாவலன் ==-

 2. கணேசன் நா

  //இப்போது அந்தப் படத்தின் ரீமேக்கில் நாகேஷ் வேடத்தில் நடிக்கவிருப்பவர் பவர் ஸ்டார் எனப்படும் டாக்டர் சீனிவாசன். தேங்காய் சீனிவாசன் கேரக்டரில் நடிப்பவர் பிரகாஷ் ராஜ்…

  அப்ப சௌகார் ஜானகி வேடம்? கோவை சரளாவுக்காம்!//

  ஐய்யோ ஐய்யோ கொல்றனுன்களே 🙁

 3. raja

  //விஜய் – அஜீத், விஜய் – சூர்யா என்பது போய், இப்போது விஜய் – கார்த்தி என்றாகிவிட்டதில் கார்த்தியின் ரசிகர்களுக்கு குஷியோ குஷி (

  எனக்கு என்னவோ இந்த முறை விஜய் வென்று விடுவார் என்றுதான் தோன்றுகிறது , காரணம் இந்த முறை அவர் சரணடைந்திருக்கும் இடம் (முருகதாஸ்) நம்பகூடிய இடம் …. கார்த்தியின் படம் சுராஜ் என்ற மொக்கை இயக்குனரால் மொக்கையாக போவது 99 % உறுதி …

  தில்லு முள்ளு , பவர் ஸ்டார் கோதாவில் இறங்கிவிட்டதால் கண்டிப்பாக மகாலட்சுமியில் 200 நாள் உறுதி …

 4. மிஸ்டர் பாவலன்

  நாகேஷ் அளவிற்கு Guest Role இல்லாமல் பவர் ஸ்டாருக்கு
  ஒரு நல்ல fight, intro song என அவர் ரோலைப் பெரிது செய்து
  கொடுப்பார்கள் என நம்புகிறேன் 🙂

  -== மிஸ்டர் பாவலன் ==-

 5. கணேசன் நா

  அப்போ கட்டபொம்மன் ரோல்-ல யாரா போட்டு இம்சை பன்னபோறங்கே.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *