BREAKING NEWS
Search

ரூ 85 லட்சம் மோசடி வழக்கில் பவர் ஸ்டார் சீனிவாசன் கைது.. புழல் சிறையில் அடைப்பு!

பவர் ஸ்டார் சீனிவாசன் ரூ 65 லட்சம் மோசடி வழக்கில் கைது!

சென்னை: குறுகிய காலத்தில் கிடுகிடுவென பிரபலமான நடிகர் சீனிவாசன், ரூ 85 லட்சம் மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டார். 15 நாள் நீதிமன்றக் காவலில் அவர் அடைக்கப்பட்டார்.

அண்ணா நகரில் வசிக்கும் இவர் உண்மையான பெயரான சீனிவாசன் என்பதை விட, பவர் ஸ்டார் என்ற பெயரில்தான் பிரபலமாகி வந்தார். ஷங்கர் உள்ளிட்ட பெரிய நடிகர்களின் படங்களிலும் நடிக்கும் அளவுக்கு சினிமாவில் ஒரு இடம் பிடித்திருந்தார்.

லத்திகா பிலிம்ஸ் என்ற பெயரில் சினிமா தயாரிப்பு நிறுவனம் தொடங்கினார். தான் தயாரித்த படங்களில் தானே ஹீரோவாக நடித்தார். சில படங்களுக்கு இயக்குநர்களை டம்மியாக்கிவிட்டு, தன் பெயரை இயக்குநர் என போட்டுக் கொண்டார்.

சென்னையில் அரசியல் கட்சிகளுக்கு ஈடாக தண்ணீர் பந்தலை வைத்து பவர் ஸ்டார் தாகம் தீர்ப்பகம் என்ற பெயரில் பானைகளில் விளம்பரம் செய்து பரபரப்பை ஏற்படுத்தினார்.

இவர் மீது சென்னை கீழ்ப்பாக்கம் காவல் நிலையத்தில் ஒரு புகார் மீது விசாரணை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

சென்னை அண்ணாநகரைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன். ஏற்றுமதி நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். இவர் தொழிலை மேம்படுத்துவதற்காக ரூபாய் 10 கோடி பணம் கேட்டு தன் நண்பரை அணுகினார்.  அந்த நண்பர் ‘பிஸினஸ் கன்சல்டிங்’ நடத்தி வரும் சினிமா நடிகர் சீனிவாசனை தெரியும் என்று கூறி, அவரிடம் அழைத்துச் சென்று அறிமுகம் செய்துள்ளார். அண்ணா நகரில் உள்ள பவர் ஸ்டார் அலுவலத்தில் இந்த சந்திப்பு நடந்தது.

அதன்பின்னர் பணப்பரிவர்த்தனை தொடர்பாக கீழ்ப்பாக்கத்தில் உள்ள பவர்ஸ்டார் வீட்டிற்கு நண்பருடன் பாலசுப்பிரமணியன் இரண்டு முறை சென்றார். அப்போது பாலசுப்பிரமணியனிடம் பேசிய பவர்ஸ்டார், சொத்து மதிப்பின் பேரில்தான் நான் பைனான்ஸ் செய்வது வழக்கம் என்று சொல்லி அதற்கான ஆவணங்களை கேட்டுள்ளார்.

பாலசுப்பிரமணியனும் ஆவணங்களை கொடுத்துள்ளார். அதன்பின்னர் உங்களுக்கு ரூ.10 கோடி கடனை ஒரு வாரத்தில் பெற்றுத்தருகிறேன். ஆனால் டாக்குமெண்ட் வெரிபிக்கேஷன் காரணமாக நீங்கள் ரூ.65 லட்சம் தரவேண்டும் என்று கேட்டுள்ளார். உடனே பாலசுப்பிரமணியமும் ரூ.65 லட்சம் கொடுத்துள்ளார்.

அதன் பிறகு ஒரு வாரம் கழித்து பவார் ஸ்டாரை சந்திக்க அலுவலகம் சென்ற போது அவர் படப்பிடிப்பில் இருப்பதாக அலுவலக ஊழியர்கள் கூறியுள்ளனர். அதன்பின் பாலசுப்பிரமணியம் அண்ணாநகரில் உள்ள அவர் வீட்டிற்கு சென்று பார்த்துள்ளார். அங்கும் அவருக்கு சரியான பதில் கிடைக்கவில்லை. தொலைபேசியிலும் தொடர்பு கொள்ள முடியவில்லை. வீடு, அலுவலகம், தொலைபேசி என்று மும்முனை போராட்டத்தை போராடி பார்த்துவிட்டு ஓய்ந்து போன பாலசுப்பிரமணியன் கடைசி முயற்சியாக சென்னை போலீஸ் கமிஷனர் திரிபாதியை நேரில் சந்தித்தார்.

பவர்ஸ்டாரிடம் தான் ஏமாற்றம் அடைந்தது பற்றி மிக விரிவாக மூன்று பக்கத்துக்கு புகார் மனு கொடுத்தார். பணம் கைமாறியதற்கான ஆதாரங்களையும் கொடுத்தார்.

மேலும் 2 புகார்கள்

அந்த புகாரின் பேரில் கீழ்ப்பாக்கம் குற்றப்பிரிவு போலீசார் நடிகர் சீனிவாசன் மீது வழக்கு பதிவு செய்து அவரை தேடி வந்தனர்.

இந்த நிலையில் கோவாவை சேர்ந்த வில்சனிடம் ரூ.3 கோடி கடன் பெற்று தருவதாக கூறி ரூ.15 லட்சம் ரூபாய் பணம் மோசடி செய்ததாகவும், மராட்டிய மாநிலத்தை சேர்ந்த தீபக் என்பவரிடம் ரூ.5 கோடி கடன் வாங்கி தருவதாக கூறி ரூ.20 லட்சம் பண மோசடி செய்ததாகவும் மேலும் 2 புகார்கள் நடிகர் சீனிவாசன் மீது தெரிவிக்கப்பட்டன.

சீனிவாசன் கைது

இதனை தொடர்ந்து கீழ்ப்பாக்கம் குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் கோ.சுப்பிரமணியம் தலைமையில் போலீசார் நடிகர் சீனிவாசனை தீவிரமாக தேடி வந்தனர். நேற்று அவர் கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக காரில் சென்று கொண்டிருந்தார்.

அவரது காரை போலீசார் அமைந்தகரை பகுதியில் மடக்கி பிடித்து நடிகர் சீனிவாசனை கைது செய்தனர். பின்னர் கீழ்ப்பாக்கம் போலீஸ் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தினர்.

15 நாள் நீதிமன்ற காவல்

விசாரணையின் போது மோசடி செய்த பணத்தை திருப்பி கொடுத்து விடுவதாகவும், 3 மாத கால அவகாசம் வேண்டும் என்றும் நடிகர் சீனிவாசன் கூறினார். ஆனால் புகார் கொடுத்தவர்கள் அதனை ஏற்க மறுத்து விட்டனர்.

பின்னர் கீழ்ப்பாக்கம் போலீசார், அவரை எழும்பூரில் உள்ள 13-வது பெருநகர நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர். நீதிபதி நடிகர் சீனிவாசனை 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்குமாறு உத்தரவிட்டார். உடனடியாக அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

துப்பாக்கியை காட்டி மிரட்டியதாகவும் வழக்கு

ரூ.85 லட்சம் மோசடி வழக்கில் கைதாகி ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ள நடிகர் சீனிவாசன் மீது, 4 சட்டப்பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர், கொலை மிரட்டல், நம்பிக்கை மோசடி போன்ற சட்டப்பிரிவுகளில் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. அவர் துப்பாக்கியை காட்டி மிரட்டியதாகவும் வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. ஆனால் போலீஸ் விசாரணையில் தன்னிடம் துப்பாக்கி எதுவும் இல்லை என்று நடிகர் சீனிவாசன் மறுத்தார்.

நான்தான் சூப்பர்ஸ்டாருக்குப் போட்டி

சில தினங்களுக்கு முன்பு, பிரபல நடிகை கோவை சரளா, சீனிவாசனிடம் ஒரு நேர்காணல் நடத்தினார். அப்போது உங்களுக்கு போட்டியாக சினிமா உலகில் யாரை கருதுகிறீர்கள் என்று கேட்டார். அதற்கு பதில் அளித்த சீனிவாசன், இந்த பவர்ஸ்டாருக்கு அந்த சூப்பர்ஸ்டார்தான் போட்டியாளராக இருக்க முடியும் என்று  குறிப்பிட்டார்.

“அந்த சூப்பர் ஸ்டார் இந்த மாதிரி எப்பவாவது காவல்நிலையங்களில் கால் வைத்திருப்பாரா என்பதை அவர் பெயரை சொல்லி விளம்பரம் தேடும் நீங்க புரிந்துகொள்ள வேண்டும்,” என்று காவல் நிலையத்தில் இருந்த போலீசாரே சீனிவாசனுக்கு அட்வைஸ் செய்தது குறிப்பிடத்தக்கது.

-என்வழி செய்திகள்
6 thoughts on “ரூ 85 லட்சம் மோசடி வழக்கில் பவர் ஸ்டார் சீனிவாசன் கைது.. புழல் சிறையில் அடைப்பு!

 1. anbudan ravi

  சொக்கத்தலைவனை கைது செய்ததற்கு காவல் துறை பகிரங்க மன்னிப்பு கேட்கவேண்டும்….இல்லையேல் அவரின் லட்சோப லட்ச (5 பேர்) தொண்டர்களாகிய நாங்கள் மலையின் உச்சியிலிருந்து குதிக்கும் போராட்டம் செய்வோம்…

  தலைவா இதுவும் ஒரு விளம்பர உத்தியா அல்லது உண்மையா?…ஸ்ஸ்ஸ்……முடியல.

  அன்புடன் ரவி.

 2. குமரன்

  சும்மாவா நம் அன்பர்கள் யாரையாவது “வேருப்பேத்துவதற்கு”
  ‘நீதான் பவர் ஸ்டார்’ என்றும்
  பதிலுக்கு ‘நான் இல்லை நீதான் பவர் ஸ்டார்’ என்றும்
  சொன்னார்கள். எல்லாரும் விவரமானவர்கள்!

 3. RATHI

  தலைவர் பெயரை சொல்ல கூட இந்த பவர் (டம்மி) ஸ்டார் க்கு தகுதி இல்லை !!!

 4. murugan

  பவர் கட்
  பவர் கட் ன்னு சொன்னாங்களே
  அப்பவே எனக்கு மைல்டா ஒரு டவுட் வந்துது

  வெளிய வந்த உடனே அண்ணே கட்சி ஆரம்பிக்கிறது உறுதி !!!
  ஜனநாயக படுகொலை – போலீஸ் அராஜகம் – அப்டி இப்டி ன்னு அறிக்கையா உடுவாரு !!!

  இன்னும் எவ்ளோ கட்சியதான் நாடு பார்க்க போகுதுன்னு தெரியல !!!

  வாழ்க பாரதம் !!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *