BREAKING NEWS
Search

பூஜை விமர்சனம்

பூஜை விமர்சனம்

Poojai-images

தீபாவளிக்கு வந்துள்ள இன்னொரு படம் ஹரியின் குடும்ப – வன்முறை – காதல் – கலாட்டா ரக மசாலா பூஜை.

இது ஜஸ்ட் டைம் பாஸ் படம். அப்படிச் சொல்லித்தான் இந்தப் படத்தையே விட்டிருக்கிறார் ஹரி. அவருக்குத் தேவை கொஞ்சம் அரிவாள்கள், நிறைய ஸ்கார்ப்பியோக்கள், நான்கைந்து ரிடையர்ட் நட்சத்திரங்கள், ஓங்கு தாங்கான ஒரு நாயகன், சூழலுக்கு பொருத்தமோ இல்லையோ.. ஒரு கவர்ச்சி நாயகி… இவை போதும்.

அடுத்தடுத்து பல ஐயாக்கள், தாமிரபரணிகள், பூஜைகளை அசராமல் தந்து கொண்டே இருப்பார் மனிதர்!

தாமிரபரணி மாதிரி ஒரு களேபரமான கதைதான். ஆனால் இந்த முறை தூத்துக்குடியை விட்டுவிட்டு மீண்டும் கோவைப் பக்கம் போய்விட்டார் ஹரி.

அவிநாசி ஹீரோ, கூட கலகல காமெடியன்கள், ஹீரோவுக்கு ஒரு பெருங்குடும்பம், குடும்பத்துடன் சின்ன பகை, அந்தக் குடும்பத்துக்கு வில்லன், வில்லனை தன் குடும்பத்தை அசிங்கப்படுத்த, பிணக்கு மறந்து வில்லனைத் தீர்த்துக் கட்டுமாறு அம்மா ஆணையிட, அந்த ஆணையை சிரமேற்கொள்ளும் மகன்… வில்லனிடமிருந்து குடும்பத்தைக் காக்க எடுக்கும் அல்டிமேட் முயற்சிகள்… இவைதான் பூஜை!

விஷால், ஸ்ருதி ஹாஸன், ராதிகா, சத்யராஜ், ஜெயப்பிரகாஷ், ஆனந்தத் தாண்டவம் என்ற பெயரில் ஒரு வட இந்திய நடிகர் என பெரிய நட்சத்திரப் பட்டாளம். வேலையைக் கச்சிதமாக செய்திருக்கிறார்கள். அதிலும் விஷால் முரட்டுக் குதிரை. அபார பாய்ச்சல்.

இந்தக் காட்சியை குறை சொல்லலாமா என யோசிப்பதற்குள், அதை மறக்கடிக்கும் வகையில் அடுத்த காட்சியை முன்னிறுத்தும் ஹரியின் வேகம்தான் இந்தப் படத்தின் பலம். பொழுது போக்கலாம்!

-என்வழி




2 thoughts on “பூஜை விமர்சனம்

  1. மிஸ்டர் பாவலன்

    ஹாலிவுட் ஹீரோயின்களுக்கு சவால் விடும் அளவிற்கு
    ஸ்ருதி ஹாசன் தனது நடிப்பையும், அழகையும் காட்டி வருகிறார்.
    அவர் தெலுங்கில் #1 இடத்தை பிடித்திருப்பது போல் தமிழிலும்
    #1 இடத்தை பிடிக்க உலக நாயகனின் ரசிகர்கள் வாழ்த்துகிறோம்..

    -== மிஸ்டர் பாவலன் ==-

  2. s venkatesan, nigeria

    //மிஸ்டர் பாவலன் says:
    October 25, 2014 at 4:40 am
    ஹாலிவுட் ஹீரோயின்களுக்கு சவால் விடும் அளவிற்கு
    ஸ்ருதி ஹாசன் தனது நடிப்பையும், அழகையும் காட்டி வருகிறார்.//
    🙂 🙂

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *