BREAKING NEWS
Search

ஃபார்ம் சரியில்லை என்பதை உணர்ந்த வேகத்தில் டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வை அறிவித்த ரிக்கி பான்டிங்!

ஃபார்ம் சரியில்லை என்பதை உணர்ந்த வேகத்தில் டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வை அறிவித்த ரிக்கி பான்டிங்!

பெர்த்: தனது ஃபார்ம் சரியில்லை என்பதை உணர்ந்த வேகத்திலேயே டெஸ்ட் போட்டிகளிலிருந்தும் ஓய்வை அறிவித்தார் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ரிக்கி பான்டிங்.

ஒரு நாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் ஆஸ்திரேலிய அணிக்கு பல வெற்றிகளை தேடித் தந்தவர் ரிக்கி பான்டிங். அதேநேரம் இவர் கேப்டனாக இருந்த காலகட்டத்தில் இரு ஆஷஸ் தொடர்களை இழந்ததால் சர்ச்சைகளுக்குள்ளானவர். மைதானத்தில் மோசமான நடத்தைக்குப் பெயர் போனவர் இந்த பான்டிங்.

இருந்தாலும் ஆஸ்திரேலியாவைப் பொருத்தவரை அவர் ஒரு சிறந்த வீரராகத் திகழ்ந்தார்.

160 டெஸ்ட் போட்டிகள், 375 ஒரு நாள் போட்டிகள், 17 டி 20 போட்டிகளில் விளையாடிய பான்டிங், டெஸ்ட் போட்டிகளில் 13,366 ரன்களையும் (41 சதங்கள், 62 அரை சதங்கள்), ஒரு நாள் போட்டிகளில் 13,704 (30 சதங்கள், 82 அரை சதங்கள்) ரன்களையும் குவித்துள்ளார். தனது 100வது போட்டியில் இரு இன்னிங்ஸிலும் செஞ்சுரி அடித்த ஒரே வீரர் இவராகத்தான் இருப்பார். டெண்டுல்கர், பிரையன் லாராவுக்கு அடுத்து அதிக ரன்கள் குவித்தவர் பான்டிங்தான்.

17 வயதில் கிரிக்கெட் வாழ்க்கையை ஆரம்பித்த பான்டிங், ஏற்கனவே ஒரு நாள் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்று விட்டார். இப்போது டெஸ்ட் கிரிக்கெட் ஓய்வையும் அறிவித்துள்ளார்.

இந்த வாரம் பெர்த் நகரில் தொடங்கவுள்ள தென் ஆப்பிரிக்க அணியுடனான டெஸ்ட் போட்டிதான் தனது கடைசிப் போட்டி என்று ரிக்கி அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் அவசரமாக கூட்டிய செய்தியாளர் கூட்டத்தில் கூறுகையில், “சில மணி நேரங்களுக்கு முன்புதான் எனது முடிவை எடுத்தேன். எனது பர்மார்மென்ஸில் எனக்கே திருப்தியில்லை. அதனால்தான் இந்த முடிவு. வரவிருக்கிற தென் ஆப்பிரிக்காவுடனான பெர்த் டெஸ்ட் போட்டியே எனது கடைசி டெஸ்ட் போட்டியாகும்,” என்றார்.

பிரிஸ்பேன் மற்றும் அடிலெய்டு போட்டிகளில் அவரது ஆட்டம் சொதப்பியதால் கடும் விமர்சனங்கள் கிளம்பின. அதோடு, பான்டிங்குக்கு 38 வயதாகிவிட்டது. அவர் டீஸன்டாக ஓய்வு பெறலாமே என ஆஸ்திரேலிய பத்திரிகைகள் விமர்சித்திருந்தன.  இதைத் தொடர்ந்து தனது டெஸ்ட் ஓய்வை அறிவித்து விட்டார் ரிக்கி.

-என்வழி கிரிக்கெட் செய்திகள்




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *