ரஜினியின் அரசியல் வருகை மற்ற கட்சிகளை, குறிப்பாக திமுகவை எந்த அளவு கலக்கத்தில் ஆழ்த்தியுள்ளது என்பதை கடந்த ஒரு மாதமாகவே பார்க்க முடிகிறது. சீமான் போன்றவர்களெல்லாம் கணக்கிலேயே வரமாட்டார்கள், காரணம் ரஜினி களமிறங்கியபோதே, தமிழக அரசியலில் தங்கள் கதி என்னவென்பது அவர்களுக்கு தெள்ளத் தெளிவாகத் தெரிந்துவிட்டது. கத்திக் கதறி கூப்பாடு போட்டு கப் சிப்பென்றாகிவிட்டார்கள். இப்போது ‘எங்களால முடில.. நீங்களாவது ரவுடியாகுங்க ஆண்டவா’ என தேடிப் போய் கமல் ஹாஸனைத் தூக்கிப் பிடிக்கப் பார்க்கிறார்கள்.
‘ரஜினி அரசியலுக்கு வந்தால்… நிச்சயம் அவர் ஏதாவது ஒரு தேசியக் கட்சியின் தயவுடன் வருவார்’ என்றுதான் பலரும், ஏன் சில மூத்த பத்திரிகையாளர்களே கூட கருதினர், கருத்துப் பரப்பினர். கட்சிகளும் கூட அந்த எதிர்ப்பார்ப்பில் இருந்தன. ஆனால் ரஜினி அரசியல் பிரவேசத்தை அறிவித்த விதம், நிர்வாகிகளை நியமிக்கும் ஸ்டைல் இவற்றைப் பார்த்தவர்கள், ‘இவர் ப்ளான் வேற மாதிரி இருக்கேப்பா…’ என்று யோசிக்க ஆரம்பித்துவிட்டனர்.
ஒரு மாவட்டத்திலிருந்து நிர்வாகிகளை சென்னைக்கு வரவழைக்க வேண்டும் என்றால் அதற்கு என்னென்ன செய்ய வேண்டும், எவ்வளவு செலவழிக்க வேண்டும் என்பது அத்தனைக் கட்சிகளுக்கும் நன்கு தெரியும். ஆனால் ரஜினியின் அன்பால் சேர்ந்த காவலர்கள், ஜஸ்ட் ஒரு குரல் கொடுத்தால் போதும், அடுத்த நாள் அதிகாலையிலேயே மண்டபத்தில் வந்து நிற்கிறார்கள். பதவிக்காக அடித்துக் கொள்ளாமல், தலைமையின் அறிவிப்பை தலைவணங்கி ஏற்கிறார்கள். அங்கொன்றும் இங்கொன்றுமாக எழும் முணுமுணுப்புகளையும் பக்குவமாகச் சரி கட்டுகிறது தலைமை.
இந்தக் கட்டுக்கோப்பு, அமைப்பு ரீதியான கட்டமைப்பு, நடுத்தர எளிய மக்களிடம் பெருகும் ஆதரவுதான் அத்தனை கட்சிகளுக்கும் ரஜினி மீது பெரும் பயத்தை ஏற்படுத்தியுள்ளன.
பிழைப்பு அரசியல்வாதிகளின் எதிர்ப்புகள், நடுநிலை என்றால் என்னவென்றே தெரியாத முன்னணி பத்திரிகைகள் சிலவற்றின் சார்பு நிலைப்பாடுகள், திரையுலக ‘நண்பர்களின்’ விஷம அரசியல்… இவை எதுவுமே ரஜினியை ஒன்றுமே செய்ய முடியவில்லை. தேர்தல் அறிவிப்பு வெளியாக, ரஜினி கட்சி களம் காணும்போது அதிகாரம் அவர் கைக்குச் செல்வதைத் தடுக்கவே முடியாது என்பது இவர்கள் அனைவருக்கும் நன்கு புரிந்திருக்கிறது. அதனால்தான் பக்குவமான அரசியல் தலைவராக வருவார் என நம்பப்பட்ட முக ஸ்டாலினால் கூட ரஜினி முன்னால் மனதிலிருப்பது முகத்தில் பிரதிபலிப்பதை மறைக்க முடியவில்லை!

நேற்றே எழுத நினைத்தது, இன்று செய்தித்தாளிலேயே வந்துவிட்டது!!
ரஜினி மீதான தங்களின் பயத்தைப் போக்கிக் கொள்ள இனி எந்த லெவலுக்கும் இறங்கும் இந்தக் கூட்டம். ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள், ரஜினியின் தன்னார்வலர்கள் இதை மனதில் வைத்து இனி செயல்பட வேண்டும்!
-என்வழி
is it dinamalar?
தேர்தல் அறிவிப்பு வெளியாக, ரஜினி கட்சி களம் காணும்போது அதிகாரம் அவர் கைக்குச் செல்வதைத் தடுக்கவே முடியாது என்பது இவர்கள் அனைவருக்கும் நன்கு தெரிந்திருக்கிறது.என்பது 100% உண்மை.