BREAKING NEWS
Search

பார்த்திபன்.. நல்லாத்தான் பேசுறீங்க, ஆனா இது கொஞ்சம் ஓவரால்ல…!

பார்த்திபன் நல்லாத்தான் பேசுறீங்க, ஆனா இது கொஞ்சம் ஓவரால்ல…!

சென்னை: தில்லு முல்லு படத் தொடக்க விழாவுக்கு வந்திருந்த பார்த்திபன் பேச்சு, பலரையும் முகம் சுளிக்க வைத்திருக்கிறது.

வழக்கமாக மேடைகளில் வித்தியாசமாகப் பேசுவது பார்த்திபன் பாணி. அதற்கே அவருக்கு தனி ரசிகர்கள் இருக்கிறார்கள். அதுவும் ஹீரோயின்கள் பற்றி அவர் பேசுவது சமயத்தில் விரசத்தின் எல்லைக்குப் போவதுண்டு.

ஆனால் அவர் பேச்சின் சாதுர்யம் காரணமாக அதை ஒரு குறையாக யாரும் எடுத்துக் கொள்வதில்லை.

ஆனால் இந்தமுறை அவர் சிவபெருமான் ஏரியாவுக்குள் பிரவேசிக்க, அது கொஞ்சம் எதிர்வினைகளை ஏற்படுத்தியுள்ளது.

ரஜினியின் சூப்பர் ஹிட் படமான ‘தில்லுமுல்லு’வை, சிவா- பிரகாஷ் ராஜை வைத்து  ரீமேக் செய்கிறார்கள். சிவாவுக்கு ஜோடியாக இஷா தல்வர் நடிக்கிறார்.

இப் படத்தின் துவக்க விழா பூஜையில் நடிகர் பார்த்திபன் பங்கேற்று பேசினார். அவர் கூறும்போது, “சிவாவை விட புதுமுக நாயகி இஷாதல்வர் அழகாக இருக்கிறார். இதுமாதிரி ஒரு கதாநாயகி கிடைத்தால் சிவனே பார்வதியை தள்ளி வைத்து விட்டு ஒரு டூயட் பாடலை பாடி விட்டுப் போவார்…,” என்றார்.

பார்த்திபனின் இந்தப் பேச்சு, ‘கண்டன அறிக்கை’ புகழ் கட்சிகளை உசுப்பேற்றியுள்ளன.

அப்படியொரு கட்சியான இந்துமக்கள் கட்சி வெளியிட்டுள்ள அறிக்கை:

நடிகர் பார்த்திபன் பட விழாக்களில் கதாநாயகிகளை கவர்ச்சியாக புகழ்வதை வழக்கமாக வைத்துள்ளார். அவர் பேச்சை நடிகைகளின் அம்மா, அப்பா, அண்ணன், தம்பிகள் எந்த அளவு ரசிப்பார்கள் என்பதை உணர்வதில்லை. சரி, அது அவர்கள் பாடு. அதற்குள் நாங்கள் போகவும் விரும்பவில்லை.

ஆனால் கோடிக்கணக்கான இந்துக்களின் கடவுளான சிவன், குறிப்பிட்ட நடிகையின் அழகில் மயங்கி, அவருடன் டூயட் பாட வருவார் என்று பேசி இருப்பது வரம்பு மீறிய செயல்.

சிவனையும் உமையவளையும் தாய் தந்தையாகப் பார்க்கும் இந்துக்கள் மனதை பார்த்திபன் புண்புடுத்தி உள்ளார். வேறு மதங்களின் கடவுள்கள் பற்றி இதுபோல் அவரால் பேச முடியுமா? பார்த்திபன் தனது பேச்சுக்கு வருத்தம் தெரிவித்து மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லாவிட்டால் அவரது வீட்டில் முற்றுகை போராட்டம் நடத்துவோம்.”

பார்த்திபன் வருத்தம்

இதுகுறித்து பார்த்திபன் அளித்துள்ள விளக்கம்:

“சிவனே சிவனேன்னு இருக்க முடியாது, இந்த சிவா என்ன செய்ய போறாரோ? சிவா சிவா! டூயல் வேற,” -இதை பேசும் போது கொஞ்சம் தில்லுமுல்லு ஆகிவிட்டது. நானே வருந்தினேன். யார் மனதையும் நோகடிப்பது நான் அறிந்து செய்வதல்ல என்பது அந்த கடவுளுக்கு தெரியும்.இருந்தாலும்… யார் மனம் வருந்தி இருந்தாலும் என் மனப்பூர்வமான வருத்தத்தை இதன்மூலம் தெரிவித்துக்கொள்கிறேன்”.

ஆர்வம் கோளாறாவது இப்படித்தானோ!!

-என்வழி சினிமா செய்திகள்
One thought on “பார்த்திபன்.. நல்லாத்தான் பேசுறீங்க, ஆனா இது கொஞ்சம் ஓவரால்ல…!

  1. வாண்டன்

    எமது இந்து கடவுள்களை அவமானப்படுத்த யாருக்கும் அருகதையில்லை. இந்து மக்கள் சரியான பதிலடி கொடுப்பது தான் இதற்கு தீர்வு.
    இந்துக்களை மதம் மாற்றுவதையே தொழிலாகக் கொண்டு செயற்படும் கிறிஸ்வ பாதிரியார்களை என்ன செய்வது என்றே தெரியவில்லை. இதே ஒரு கிறிஸ்தவன் இந்துவாக மதம் மாறினால் கிறிஸ்தவ ஆசாமிகள் படும் பாடு இருக்கே! அப்பப்பா!

    இந்த உணர்வு ஏன் எங்கள் இந்து அமைப்புகளுக்கு இல்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *