BREAKING NEWS
Search

ஷாரூக்கானுக்கு ஆதரவாக தலைவர்கள், பாலிவுட் பிரபலங்கள் – கிரிக்கெட் சங்கத்துக்கு கண்டனம்!

ஷாரூக்கானுக்கு ஆதரவாக தலைவர்கள், பாலிவுட் பிரபலங்கள் – கிரிக்கெட் சங்கத்துக்கு கண்டனம்!

மும்பை: ஷாரூக்கான் மீது மும்பை கிரிக்கெட் சங்கம் விதித்துள்ள 5 ஆண்டு தடைக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

அரசியல் தலைவர்கள், பாலிவுட் நட்சத்திரங்கள் வெளிப்படையாக ஷாரூக்கானுக்கு ஆதரவையும், கிரிக்கெட் சங்கத்துக்கு கண்டனத்தையும் தெரிவித்துள்ளனர்.

ஷாரூக்கான் செய்ததே நியாயம் என பாலிவுட் பிரபலங்கள் கருத்து தெரிவித்துள்ளனர். தங்கள் கருத்துக்களை தொடர்ந்து ட்விட்டர், பேஸ்புக் உள்ளிட்ட சமூகத் தளங்களில் வெளியி்ட்டு வருகின்றனர்.

கடந்த புதன்கிழமை மும்பை இந்தியன் அணியை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் வென்றபோது, அணியின் இணை உரிமையாளரான ஷாரூக்கான், குடித்துவிட்டு வந்து மைதானத்துக்குள் நுழைய முயன்று கலாட்டா செய்ததாகக் கூறி, வான்கடே மைதானத்தில் நுழைய 5 ஆண்டுகள் தடை விதித்துள்ளது மும்பை கிரிக்கெட் சங்கம். இதற்குக் காரணம் முன்னாள் முதல்வரும் மத்திய அமைச்சரும் இப்போது சங்கத்தின் தலைவராகவும் உள்ள விலாஸ் ராவ் தேஷ்முக்தான் என்கிறார்கள்.

ஆனால் ஷாரூக்கானோ, தான் குடிக்கவில்லை என்றும், மைதானத்தின் ஒரு பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த தன் மகள் உள்ளிட்ட சிறுமிகளை பிடித்துத் தள்ளிய காவலர்களிடமிருந்து காப்பாற்ற முயன்றதாகக் கூறினார். குழந்தைகளை அழைத்துச் செல்ல தான் முயன்றபோது, தன்னிடமும் மிக மோசமாக காவலர்கள் நடந்ததாகவும் தெரிவித்தார். ஆனால் அவர் விளக்கத்தை ஏற்கவே இல்லை மும்பை கிரிக்கெட் சங்கம்.

இந்த தடை குறித்த அறிவிப்பு வெளியானதிலிருந்து, ஷாரூக்குக்கு ஆதரவுக் குரல்கள் அதிகரிக்க ஆரம்பித்துள்ளன. அரசியல் தலைவர்கள் லாலு பிரசாத் யாதவ், மமதா பானர்ஜி உள்ளிட்டோர் ஏற்கெனவே ஷாரூக்குக்கு ஆதரவு தெரிவித்தும், கிரிக்கெட் அமைப்புகளை சாடியும் கருத்து தெரிவித்துள்ளனர்.

‘இந்த ஐபிஎல்லே வேண்டாம்… மூட்டை கட்டுங்கள்’ என்று கோபத்துடன் கூறியுள்ளார் லாலு.

இப்போது கிட்டத்தட்ட பாலிவுட் மொத்தமும் ஷாரூக்கானுக்கு ஆதரவாகக் களமிறங்கியுள்ளது. மும்பை கிரிக்கெட் சங்கம் செய்தது முட்டாள்தனம் என்றும், தனது தவறை மறைக்க செய்த நாடகம் என்றும், எங்கிருந்து இந்த சர்வாதிகாரம் வந்தது ஒரு சாதாரண கிரிக்கெட் சங்கத்துக்கு என்றும் கொந்தளித்துள்ளனர்.

பிரபல இயக்குநர் கரண் ஜோஹர் கூறுகையில், “உலகின் மிகச் சிறந்த தந்தைகளுள் ஒருவர் ஷாரூக்கான். மகளைக் காக்க ஒரு தந்தையாக அவர் வாதாடியுள்ளதை தவறு என்று கூறுவது எத்தனை பெரிய தவறு. அந்த நேரத்தில் அவர் ஒரு தந்தை. அவர் இடத்தில் வேறு யார் இருந்திருந்தாலும் நிலைமை மோசமாகியிருக்கும். ஷாரூக் கண்ணியமாகவே நடந்துள்ளார்,” என்றார்.

செலீனா ஜெட்லி: தன் குழந்தைக்கு ஆபத்து என்றால் ஒரு தந்தை எந்த அளவுக்கு வேண்டுமானாலும் போகலாம். சட்டப்படி கூட அதில் தவறு காண முடியாது. நடிகர்களும் மனிதர்கள்தானே… நானாக இருந்தால் என்ன செய்திருப்பேன் என்றே தெரியாது…

ரோனித் ராய்: அங்கே என்ன நடந்ததென்று எனக்கு நன்கு தெரியும். ஷாரூக் மகளைத் தொட்டு, பலமாகத் தள்ளியதை அறிவேன். அதனால்தான் ஷாரூக் கோபப்பட்டார். ஒரு தந்தையாக வெல்டன் ஷாரூக்! மகளைக் காக்க போராடியதற்காக ஷாரூக் ஏன் மன்னிப்பு கேட்க வேண்டும். சத்யமேவ ஜெயதே!

அனுராக் பாஸு: ஷாரூக் பக்கம் எந்தத் தவறும் இல்லை. அவர் செய்தது நியாயமே.

இசையமைப்பாளர் விஷால்: என் குடும்பத்தை யாராவது தொட்டால் அழிச்சிடுவேன். ஷாரூக் பக்கம்தான் நியாயம்… கிரிக்கெட் சங்கத்துக்கு கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

மும்பை கிரிக்கெட் சங்கம் மீது பிசிசிஐ கோபம்…

இதற்கிடையே நடந்த சம்பவங்கள் அனைத்துக்கும் மும்பை கிரிக்கெட் சங்கத்தின் அவசர புத்திதான் காரணம் என்று கடும் கோபத்தில் உள்ளதாம் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம். தங்களிடம் கலந்தாலோசிக்கக் கூட இல்லாமல், சர்ச்சைக்குரிய இந்த தடையை விதிக்கக் காரணம் என்ன என்று பிசிசிஐ நிர்வாகிகள் மும்பையை கேள்வி கேட்டுள்ளனர்.

ஷாரூக்கான் வெறும் பார்வையாளர் அல்ல.. கிரிக்கெட் அமைப்புடன் நெருங்கிய தொடர்பு கொண்டவர். ஐபிஎல் அணியொன்றின் உரிமையாளர். அவர் மீது நடவடிக்கை எடுக்கும் முன் இதையெல்லாம் யோசித்திருக்க வேண்டும். அவர் சொன்ன விளக்கத்தையும் அதற்கு ஆதரவாக அவர் வைத்துள்ள வீடியோவையும் மும்பை கிரிக்கெட் சங்கம் புறக்கணித்துவிட்டு, தன்னிச்சையாக முடிவெடுத்தது எப்படி? என்று பிசிசிஐ நிர்வாகிகள் தரப்பில் கூறப்படுகிறது.

இந்தத் தடை உத்தரவை விலக்கிக் கொள்ள பிசிசிஐ உத்தரவிடும் எனத் தெரிகிறது.

-என்வழி செய்திகள்

 
11 thoughts on “ஷாரூக்கானுக்கு ஆதரவாக தலைவர்கள், பாலிவுட் பிரபலங்கள் – கிரிக்கெட் சங்கத்துக்கு கண்டனம்!

 1. SRK fan

  யார் கோதுத அதிகாரத்தில் இந்த தண்டனையை அறிவித்தது மும்பை சங்கம்?

 2. குமரன்

  விலாஸ்ராவ் தேஷ்முக் இப்போது மத்திய அரசில் விஞ்ஞான தொழில்நுட்பத் துறை அமைச்சர் (Minister of State).

  அவரே மும்பை கிரிக்கெட் சங்கத்துக்கும் தலைவர்.

  என்னதான் கவுரவப் பதவி ஆனாலும், மும்பை கிரிக்கெட் சங்கம் போன்றவை மிக அதிக அளவில் பணம் புழங்குபவை. இன்றைய கால கட்டத்தில் மக்களுடன் அதிக அளவில் நெருக்கமாக இருப்பவை சினிமா, தொலைகாட்சி, கிரிக்கெட் ஆகியவை என்றால் அது மிகை அல்ல. அப்படி இருக்க, அரசில் அமைச்சர் பதவியில் இருப்பவர்கள் தாங்களாகவே இப்படிப்பட்ட பொதுஜனத் தொடர்பும், பணப் புழக்கமும் உள்ள பதவிகளில் இருந்து விலக வேண்டும். இதெல்லாம் நேர்மையைக் குறிக்கோளாக வைத்திஉப்பவர்களுக்கு சரி, ஆனால் இன்றைய அதுவும் காங்கிரஸ் அமைச்சர்களுக்கு இதெல்லாம் ஒரு பொருட்டே அல்ல.

  முன்னர் இப்படித்தான் சரத் பவார் இந்திய கிரிக்கெட் சங்கத் தலைவராகவும், மத்திய அமைச்சராகவும் இரட்டை வேடம் போட்டார், ஒருவழியாக கிரிக்கெட் பதவியை விட்டார்.

  கல்மாடியும் கூட மத்திய அமைச்சராகவும், இந்திய ஒலிம்பிக் சங்கத் தலைவராகவும் வேதங்கள் போட்டார். ஒருவழியாக அவரது ஊழல் வெளிவந்ததால் இரண்டு பதவிகளும் தப்பித்தன (!!!) அவர் உள்ளே போனார்.

  முதலில் விலாஸ்ராவ் தேஷ்முக் கிரிக்கெட் சங்கப் பதவியில் இருந்து விலக வேண்டும், இல்லாவிட்டால் மத்திய அமைச்சர் பதவியில் இருந்து விலக வேண்டும்.

 3. குமரன்

  ஷாருக் கான் அன்று அந்த வாகாடே மைதானத்தில் நடந்த போட்டியில் பங்கு பெற்ற ஒரு அணியின் “உரிமையாளர்”. (அணிக்கு உரிமையாளர் என்பது ஏற்புடையதல்ல, ஆனால் அப்படித்தான் சொல்லிக் கொள்ளுகிறார்கள்!)

  அந்த நிலையில் அவரை உள்ளே விடாமல் அவரது பிரசினை என்ன என்று கேட்காமல், அவரது குறை பற்றி விசாரிக்காமல் மும்பை கிரிக்கெட் சங்கம் எடுத்த நடவடிக்கை பிழை பட்டது. சட்டப் படி செல்லாது. அவர் அணியின் உரிமையாளர் என்ற நிலையில் வழக்குத் தொடரந்தால் மும்பை கிரிக்கெட் சங்கம் நஷ்ட ஈடு தரவேண்டி வரும்.

 4. HOTLINKSIN.COM

  ஐபிஎல் அணி ஒன்றையே வைத்திருக்கும் ஷாருக்கை மும்பை கிரிக்கெட் சங்கம் இப்படி பேசியது நிச்சயம் தவறுதான்.
  ……..

 5. srini

  appa sami vijay fan—dont praise vijay here n say next to superstar and all.

  he is somewhere far from superstar….sama comedy panathinga coz of vijay not there…stadium crowd is not happening in chennai.

  unga imsai thanga mudiyala…1st ajith and surya beat pannitu vanga mass and collection.

 6. குமரன்

  ரஜினிக்கு பிறகு தொட்டதெல்லாம் வெற்றியானது விஜய்க்கு மட்டுமே …. செம காமெடி.

  கடந்த மூன்று ஆண்டுகளில் எத்தனை வெற்றி எத்தனை தோல்வி என்று எண்ணிப் பார்க்கவேண்டும். ஆரம்ப காலத்தில் சங்கவிக்காக (!) மட்டுமே விஜய் படங்கள் ஓடின என்பதுதான் உண்மை.

  அது சரி, தளபதி என்பவர் யார்? மு.க.ஸ்டாலினா?

 7. enkaruthu

  //அந்த வருடம்தான் சென்னை முதல் முறையாக கோப்பையை வென்றது ரஜினிக்கு பிறகு தொட்டதெல்லாம் வெற்றியானது விஜய்க்கு மட்டுமே//

  உங்கள் தலைவர் விஜய் பேசுவது போலவே காமெடியாக இருக்கு உங்களின் கமெண்ட்.எங்கே உங்கள் தலைவர் தொட்டதெல்லாம் பொன்னானது.என்றைக்கு சந்திரமுகி உடன் உங்கள் தலைவர் படம் சச்சின் படம் வந்து ஆப்பு வாங்குச்சோ அதில் இருந்து உங்கள் தலைவர் நடித்து கொஞ்சம் ஹிட்டாக எனக்கு தெரிந்து ஓடிய படங்கள் போக்கிரி,நண்பன் மட்டும்தான்.அதுவும் வேலாயுதம் வசூல் எந்திரனையே முந்திவிட்டது என்று உங்கள் தலைவரும் நீங்களும் சும்மா வடிவேலு கணக்கா சொன்னதைகண்டு தமிழ்நாடே வாயால் சிரிக்கமுடியாமல் வேறுவழியாக சிரித்தது எல்லோரும் அறிவார்கள்.

  அது சரி, தளபதி என்பவர் யார்? மு.க.ஸ்டாலினா?//

  அய்யா fan of vijay ஒன்றை தெரிந்துகொள்ளுங்கள் இந்த கமெண்ட் ஒரு சாம்பிள் தான். இந்த தளத்தில் கமெண்ட் போட வரும் ரஜினி ரசிகர்கள் அனைவரும் மிக பெரிய அறிஞர்கள் மேலும் கீழே இறங்கி அடிக்கும் நக்கல்வாதிகள்.அதனால் வாயை கொடுத்து வாங்கி கட்டிகொள்ளதீர்கள் .முன்னொரு பதிவில் உங்கள் கமெண்டை படித்தேன் அதை பார்த்து நான் உண்மையாலுமே சிரித்துவிட்டேன் மேலும் மின்சாரம் செலவு செய்து உங்களுக்கு எல்லாம் பதில் கமெண்ட் போட வேண்டுமா என்று நினைத்துதான் அதை விட்டுவிட்டேன்.இந்த தளத்தின் நண்பர்களும் அதைதான் நினைத்திருப்பார்கள்.

  சரி உங்களை சொல்லியும் ஒன்னும் இல்லை.உங்களுக்கு போக்கிடம் வேறு தளம் இல்லை.அப்படியே ஒரு தளத்துக்கு போனாலும் விஜய் என்ற பெயரை சொன்னாலே சும்மா பொலந்து கட்டி லந்து பண்ணுகிறார்கள்.

  விஜய் பேன் அவர்களே யாரோடு யாரை ஒப்பிடுகிறீர்கள்.எங்கள் தங்க தலைவனாம் திரு ரஜினி தான் செய்யும் உதவிகளை வெளியே சொல்லகூடாது என்று அந்த உதவி கேட்டு வருபவர்களிடம் விண்ணப்பம் வைப்பது அவரின் குணம்.ஆனால் உங்கள் விஜய் ஒரு மாவட்டத்திற்கே ஒரு பசு மாடு அதுவும் விளம்பரமாக மிக பெரிய விழாவில் கொடுப்பது அவரின் குணம்.என் கேள்வி என்னவென்றால் ஒரு பசு மாட்டின் பால் அந்த மாவட்டத்துக்கு போதுமா என்பதுதான்.

  நான் ஒன்றை சொல்கிறேன் பேன் விஜய் அசல் அசல்தான் நகல் நகல்தான் என்பதை இந்த தமிழகம் நன்றாக உணரும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *